Just In
- 4 hrs ago
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- 4 hrs ago
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- 5 hrs ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 7 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி உள்பட விவிஐபி பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு இருக்கும் புதிய போயிங் 777 ஜம்போ ஜெட் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் காலம் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

01. விவிஐபி பயன்பாடு
நாட்டின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கா இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும்.

02. சங்கேத பெயர்
தற்போது பயன்பாட்டில் இருக்கும் போயிங் 747 விமானங்கள் போலவே, இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்ற சங்கேத பெயரில் அழைக்கப்படும்.

03. கஸ்டமைஸ் பணிகள்
இரண்டு போயிங் 777 ரக விமானங்களின் உட்புறமும் விவிஐபிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப பல்வேறு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யும் பணிகள் அமெரிக்காவிலுள்ள போயிங் நிறுவனத்தின் டல்லாஸ் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமருக்காக படுக்கை வசதி, சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி, சேட்டிலைட் போன், டிவி திரைகள் உள்பட ஏராளமான வசதிகள் இடம்பெற இருக்கின்றன.

04. பாதுகாப்பு கவசம்
அமெரிக்க அதிபருக்காக பயன்படுத்தப்படும் போயிங் 747-200பி விமானத்தில் இருக்கும் அதே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த இரண்டு விமானங்களிலும் கொடுக்கப்பட இருக்கிறது. அமெரிக்க அரசின் அனுமதி பெற்று இந்த புதிய பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த விமானங்களில் பயன்படுத்தப்பட உள்ளது.

05. பாதுகாப்பு கவசம்
புதிய பாதுகாப்பு கவசத்தின் மூலமாக வெப்பத்தை உணர்ந்து தாக்குதல் நடத்த வரும் ஏவுகணைகளை திசை திருப்பிவிடும் தொழில்நுட்பம் இந்த விமானங்களில் இடம்பெறுகிறது. அத்துடன், எதிரி நாடுகளின் ரேடார்களின் மண்ணை தூவி செல்லும் வசதியும் இந்த விமானங்களில் இருக்கும்.

06. ஏவுகணை அழிப்பு நுட்பம்
ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் தொழில்நுட்பம் மட்டுமின்றி, போர் விமானங்கள் போல ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கான தொழில்நுட்பமும் இதில் இடமபெற இருக்கிறது.
MOST READ: கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

07. வலிமையான கட்டமைப்பு
வெடிகுண்டுகள் மற்றும் அணுகுண்டு தாக்குதல்களிலிருந்து உள்ளே பயணிப்பவர்களை பாதுகாக்கும் வலிமையான கட்டமைப்புடன் இந்த விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
MOST READ: புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

08. உணவுப் பொருட்கள் இருப்பு
இந்த விமானங்களில் 2,000 பேருக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்து எடுத்துச் செல்லும் கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

09. எப்போது வருகிறது?
இரண்டு போயிங் 777 விமானங்களும் ஏற்கனவே வாங்கப்பட்டு, கஸ்டமைஸ் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த விமானங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கின்றன.

10. விமான மாடல்
போயிங் 777-300 ER என்ற விமான மாடல்கள்தான் வாங்கப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் போயிங் 747 விமானத்தை அமெரிக்கா உள்ளிட்ட நீண்ட தூர பயணங்களின்போது வழியில் எரிபொருள் நிரப்புவதற்கு தரை இறங்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த விமானத்தை இடை நில்லாமல், 13,650 கிமீ தூரம் வரை பறக்கும்.

11. எஞ்சின்
இந்த போயிங் 777 விமானத்தில் இரண்டு எஞ்சின்களில் இயங்கும் திறந் வாய்ந்தது. இந்த விமானத்தில் ஜிஇ-90-115பி டர்போஃபேன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

12. வேகம்
போயிங் 777 விமானம் மணிக்கு 945 கிமீ வேகம் வரை பறக்கம் வல்லமை வாய்ந்தது. அதிகபட்சமாக 892 கிமீ வேகம் வரை இயக்குவார்கள்.

13. எரிபொருள்
இந்த விமானத்தில் 1.81 லட்சம் லிட்டர் பெட்ரோல் நிரப்பும் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

14. மதிப்பு
இந்த விமானங்களின் விலை குறித்த தகவல்களை வெளியிட ஏர் இந்தியா மறுத்துவிட்டது. இந்த விமானங்களின் விலை, பாதுகாப்பு கவசம் மற்றும் கஸ்டமைஸ் பணிகள் சேர்த்து ரூ.5,000 கோடிக்கும் மேல் மதிப்பு இருக்கும் என்று தெரிகிறது.

புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வியப்பை ஏற்படுத்தும் நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள போயிங் 747 விமானத்தில் இருக்கும் வசதிகள், பிரதமரின் பயணத்தின்போது நிகழும் சுவாரஸ்யங்களை தொடர்ந்து பார்க்கலாம்.