வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

வாகன ஓட்டிகளை லத்தியை சுழற்றி போலீசார் நிறுத்துவது குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை கேரள உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது . இதுகுறித்த முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

கடந்த செப்டம்பர் மாதம் முதல் புதிய போக்குவரத்து அபாரத விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை பிடிப்பதற்கு போலீசார் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை பிடிப்பதற்காக போலீசார் காட்டும் தீவிரம் காரணமாக பல விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாவிட்டது.

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

இதனால், வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் அதிர்ச்சி சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்கு போலீசார் திடீரென குறுக்கே பாய்ந்து தடுப்பதும், லத்தியை சுழற்றி அடிப்பதும் வழக்கமாகிவிட்டது. இதனால், ஏற்படும் உயிர்பலிகள் குறித்த செய்திகள் தொடர்கதையாகி இருக்கின்றன.

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

இந்த நிலையில், வரும் டிசம்பர் 1 முதல் கேரளாவில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்குவதற்கான உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது, விதிமீறும் வாகன ஓட்டிகளை நிறுத்துவது குறித்து முக்கிய வழிகாட்டு முறையையும் போலீசாருக்கு கேரள உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

அதில், வாகனத் தணிக்கையின்போது போலீசார் சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் இல்லாமல் அல்லது நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை லத்தியை சுழற்றி அடிக்கக்கூடாது. அதேபோன்று, குறுக்கே பாய்ந்து சென்று தடுப்பது, விரட்டிச் சென்று பிடிப்பது உள்ளிட்டவற்றை போலீசார் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

கடந்த 2017ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு முறைகளின்படி, பணியில் இருக்கும் அதிகாரி அல்லது இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

வாகனத் தணிக்கையின்போது, குறிப்பிட்ட வழிகாட்டு முறைகளின் அடிப்படையிலே சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் சமிக்ஞை காட்டி நிறுத்த வேண்டும். இதைதவிர்த்து, வாகன ஓட்டிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அபாயகரமான முறைகளை கையாளக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

MOST READ: சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

அதேபோன்று, வாகன ஓட்டிகளுக்கு நன்கு பார்வையில் படும் இடத்தில் வாகனத் தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும். மறைந்திருந்து பிடிப்பது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடக்கூடாது உள்ளிட்டவை குறித்தும் உயர்நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.

MOST READ: ஓட்டுனர் முன்பே எலெக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை சிசிடிவி கேமரா, மொபைல்போன் கேமரா, போலீஸ் வாகனத்தில் உள்ள கேமரா மூலமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று, சிவப்பு விளக்கு அல்லது சமிக்ஞை சாதனங்கள் உதவியுடன் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

MOST READ: குடிபோதையில் போலீஸ் ஜீப்பை தூக்கி கடாசிய ஜேசிபி டிரைவர்... திக், திக் வீடியோ!

வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று போலீஸ் உயர் அதிகாரிகளையும் கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

இதேபோல் மற்றொரு வழக்கிலும், வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அது என்ன? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களுக்கு, மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளன. ஆனால் அவர்களால் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள பார்க்கிங் வசதியை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் ஒரு சில மால்கள் பார்க்கிங் செய்ய அனுமதிப்பதற்காக, வாகன உரிமையாளர்களிடம் இருந்து அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றன.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

எனவே வேறு வழியில்லாத வாகன உரிமையாளர்கள் வேண்டா வெறுப்பாக கட்டணம் செலுத்திதான் பார்க்கிங் செய்து வருகின்றனர். இந்த சூழலில் மால்கள், மல்டிபிளக்ஸ்கள் மற்றும் ஷாப்பிங் நிறுவனங்கள் உள்ளிட்டவை, வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்காமல், அவர்களுக்கு பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும் என குஜராத் ஐகோர்ட் சமீபத்தில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

General Development Control Regulation 2017 (GDCR)-ன் விதிமுறைகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஆனந்த் எஸ் தாவே மற்றும் நீதிபதி பைரன் வைஷ்ணவ் ஆகியார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்தான் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. குஜராத் பில்டிங் மற்றும் நகர திட்டமிடல் விதிமுறைகளை அலசி ஆராய்ந்த பிறகு இந்த முடிவிற்கு நீதிபதிகள் வந்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

பில்டிங் உரிமையாளர்கள் பார்க்கிங் வசதியை கட்டாயமாக வழங்க வேண்டும் என இந்த விதிகள் கூறுகின்றன. இதில், ''வழங்க வேண்டும்'' என்ற வார்த்தையை நீதிபதிகள் உற்று நோக்கியுள்ளனர். அதாவது கட்டணம் இல்லாமல் பார்க்கிங் வசதியை வழங்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையும் சுவாரஸ்யமானதுதான்.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

அனைத்து விஷயங்களும் கடந்த ஆண்டில் இருந்துதான் தொடங்குகின்றன. வாகனங்களை பார்க்கிங் செய்வற்கு கட்டணம் வசூல் செய்வதை GDCR அனுமதிப்பதில்லை. எனவே இனி கட்டணம் வசூலிக்க கூடாது என மால் உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கடந்த ஆண்டு உத்தரவிட்டனர். அவ்வளவுதான். மால் உரிமையாளர்கள் வெகுண்டெழுந்து விட்டனர்.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

உடனடியாக நீதிமன்ற கதவை தட்டினர். சிங்கிள் ஜட்ஜ் பென்ச் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ''இலவசமாக'' பார்க்கிங் வசதி வழங்குவதை GDCR கட்டாயமாக்கவில்லை என உத்தரவிட்டார். எனவே உங்கள் உத்தரவை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என போக்குவரத்து போலீசாருக்கும் அவர் அறிவுறுத்தினார்.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

என்றாலும் பார்க்கிங் கட்டணம் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார். எனவே பார்க்கிங் கட்டணங்களை வரைமுறைப்படுத்துவதற்கு தேவையான கொள்கைகளை வகுக்கும்படி மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மால் உரிமையாளர்களுக்கு மனம் வரவில்லை. உடனடியாக மேல்முறையீட்டிற்கு சென்றனர்.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

அங்கு பார்க்கிங் கட்டணங்களை நெறிமுறைப்படுத்தும் சட்டம் இருக்க முடியாது. எங்களது இடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குகிறோம். இதற்காக ஒரு நிறுவனம் கட்டணம் வசூலிக்க முடியும். எனவே பார்க்கிங் கட்டணங்களை வரைமுறைப்படுத்துவதற்கான கொள்கையும் இருக்க முடியாது என வாதிட்டனர்.

விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!

ஆனால் மேல்முறையீட்டில் அவர்களின் வாதம் செல்லுபடியாகவில்லை. வழக்கை தீர விசாரித்த டிவிஷன் பென்ச், பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க முடியாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. எப்படியோ இனி வாகன உரிமையாளர்களுக்கு சந்தோஷம்தான்.

Most Read Articles
 

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Kerala High Court directed authorities to use digital techniques to penalize the traffic offenders.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more