பறிமுதல் செய்த சைலென்சர்களை வைத்து போலீஸார் செய்த காரியத்தை பார்த்தீங்களா?

போலீஸார் வைத்த வித்தியாசமான அறிவிப்பு பலகையைப் பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் கடுப்பாகியுள்ளனர். அவர்கள் கோபமடைவதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெருகி வருகின்றது. ஆனால், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இது குற்றமாகும்.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

வாகனங்களை மாடிஃபை செய்வதினால், அந்த வாகனம் அதன் உண்மையான தோற்றத்தை இழுக்கின்றது. அத்துடன், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுடன் ஒப்பிடுகையில், அது முரண்பாடுடையதாக மாறுகின்றது. இதன்காரணமாகவே, மாடிஃபை வாகனம் விவகாரத்தில் அரசு கடுமையான கெடுபிடியைக் காட்டி வருகின்றது.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

அதேபோன்று, ஆஃப்டர் மார்கெட் எக்சாஸ்ட் சிஸ்டம் எனப்படும் வெளிப்புற சந்தையில் இருந்து வாங்கப்படும் சைலென்சர்களுக்கு எதிராகவும் போலீஸார் அண்மைக் காலங்களாக போர்க் கொடியை தூக்கி வருகின்றனர்.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

பெரும்பாலும் ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள், அரசு நிர்ணயித்துள்ள அளவை காட்டிலும் அதிக ஒலியை உமிழ்கின்றன. இந்திய சட்ட திட்டத்தின்படி இரு சக்கர வாகனத்தின் சைலென்சர்கள் அதிகபட்சமாக 80 டெசிபல் அளவிலான ஒலியையே வெளியேற்ற வேண்டும்.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

ஆனால், ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் பெரும்பாலான சைலென்சர்கள் 140 டெசிபலுக்கும் அதிகமான சப்தத்தை வெளியேற்றுகின்றன.

இந்த அதிக சப்தம், காற்றை மாசு செய்வதுடன், பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்த அமைகின்றது. மேலும், அதிலிருந்து வெளிவரும் அதிக ஒலி கேட்கும் திறனை பாதிக்கச் செய்கின்றது.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமாக போலீஸார் அண்மைக் காலங்களாக, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களைப் பயன்படுத்தும் வாகனங்களை மடக்கி, அவற்றை பறிமுதல் செய்து, அங்கேயே அழித்தும் வருகின்றனர்.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகர போலீஸார், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை அவர்கள் சமீப காலமாக எடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

அந்தவகையில், பல வாகன ஓட்டிகளுக்கு எதிராக வழக்கு பதிந்து, அந்த பைக்குகளில் இருந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அவர்கள் நீக்கியுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அந்த சைலென்சர்களைக் கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குகின்ற வகையிலான பதாகை ஒன்றை அவர்கள் தயார் செய்துள்ளனர்.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

தற்போது, அந்த பதாகைகுறித்த புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, இந்த சட்டவிரோத சைலென்சர்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை தரையில் போட்டு ஜேசிபி கிரேன் வாகனங்கள் மூலம் அழித்து வந்தனர்.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

தற்போது, அந்த சைலென்சர்களைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கும் பலகையை அவர்கள் தயார் செய்துள்ளனர்.

அந்த பதாகையில், "சாலை விதிகளை கடைபிடியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்...

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை ஏதுவும் இல்லை. ஆனால், அவற்றை பொதுவெளியில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...!

அதேசமயம், இந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை, பிரத்யேகமான ரேஸிங் டிராக்குகள் மற்றும் தனியார் இடங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவற்றை பொதுசாலையில் பயன்படுத்தினால், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Gaadiwaadi, Nizam Bilal Davangere Bilal Davangere.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Makes Billboard Out Of Seized Illegal Exhausts. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X