துப்பாக்கி முனையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் காட்சிகள்!

வாடிக்கையான வாகன தணிக்கையில், வாகன ஓட்டிகளை ஆய்வு செய்வதற்காக போலீஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

நம் நாட்டின் காவல்துறையினரைப் பற்றிய செய்தி ஒன்றாவது, தினந்தோறும் வரும் செய்திகளில் வந்துவிடும். அந்தவகையில் சர்ச்சைகளுக்கும், அதிரடி நடவடிக்கைகளுக்கும் பெயர் போனவர்கள்தான் இந்திய காவல்துறையினர். ஆனால், பல செய்திகள் போலீஸாரின் அராஜகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் வெளிப்படுத்தும் வகையிலேயே இதுவரை அதிகமாக வெளிவந்துள்ளன.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

அந்தவகையில், போலீஸாரின் அத்துமீறல் செயல் குறித்த வீடியோ ஒன்று தற்போதைய தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலம், பாடான் மாவட்டத்தில் உள்ள வசிர்கஞ்ச் எனும் பகுதியில் அரங்கேறியுள்ளது.

பொதுவாக காவல்துறையினர் செய்யும் வாகன தணிக்கையை, வசிர்கஞ்ச் பகுதி போலீஸார், துப்பாக்கியைப் பயன்படுத்தி செய்துள்ளனர். இதுவே இந்த சம்பவம் தலைப்பு செய்தியாக மாற காரணமாக இருக்கின்றது.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

நம்ம தமிழ்நாடு போலீஸார்கள் எல்லாம், வாகன ஓட்டிகளை நிறுத்த லத்தியையும், கால்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞர் ஒருவரை போலீஸார், லத்தியால் தாக்கியதில் மதுரையைச் சேர்ந்த விவேகானந்தர் என்ற இளைஞர் உயிரிழந்தார். அதற்குமுன்னதாக, திருச்சியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை பின் சென்று எட்டி உதைத்ததில், கர்ப்பிணி பெண் உஷா கொல்லப்பட்டார்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

இவ்வாறு, தமிழக போலீஸாரையே மிஞ்சும் வகையில் உபி மாநில போலீஸார் தற்போதைய சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த, வசிர்கஞ்ச் பகுதி போலீஸார், வாகன ஓட்டிகளை மடக்கி துப்பாக்கி முனையில் அவர்களை பரிசோதனை செய்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள எந்தவொரு காவல்துறையினரும் செய்யாத இந்த சம்பவத்தை பொதுமக்களுக்கு எதிராக மிகவும் இனிதாக அவர்கள் துவங்கி வைத்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

மேலும் ஆண், பெண் என யாரென்றும் பாராமல் அவ்வழியாக வந்த அனைவரிடமும் போலீஸார் இவ்வாறே ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனை ஏஎன்ஐ யுபி என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மேலை நாடுகளில் சர்வசாதரணம் என்றாலும், இந்தியர்களுக்கு இது பரீட்சையமற்ற செயலாகும்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

உண்மையில் கூற வேண்டுமென்றால், உபி மாநில போலீஸாரின் இந்த நடவடிக்கையை இந்தியர்கள் பலர் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பனர். ஆனால், இந்தியாவிலும் இதுபோன்று நடக்கும் என்பதை காட்டும் வகையில் உபி மாநில போலீஸார் செயல்பட்டுள்ளனர். இதனால், பாடான் பகுதி வாழ் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

போலீஸாரின் இந்த செயலானது மக்களை நடு நடுங்க வைப்பதாகவும், அவமானப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனை, நீங்கள் வீடியோவைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

கும்பலாக வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார், அவ்வழியாக வரும் வாகனங்களை மடக்குகின்றனர். பின்னர், வாகன ஓட்டி மற்றும் அவருடன் வரும் பயணியையும், ஒரு போலீஸார் மட்டும் ஆய்வு செய்ய மற்ற போலீஸார் விலகி நிற்கின்றனர். அப்போது, திடீரென துப்பாக்கியை முன் நிறுத்தி, கைகளை மேலே தூக்குமாறு மிரட்டும் தோணியில் கூறுகின்றனர். மேலும், கட்டளைகளுக்கு மாறாக செயல்பட்டால், உங்களை சுட்டு வீழ்த்திவிடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

இதனால், அச்சமடைந்த வாகன ஓட்டிகள், அந்த நேரத்தில் தங்களுக்கு என்ன ஆகிவிடுமே என்ற அச்சத்திலேயே இருந்ததாக, சோதனையில் சிக்கிய இளைஞர்கள் சிலர் தெரிவித்தனர். இவ்வாறே, அவ்வழியாக வரும் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளையும் மடக்கி போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

இந்த சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், "உபி மாநிலத்தின் பாடான் பகுதி குற்றச் சம்பவங்களுக்கு பெயர்போன பகுதி. வாகனங்களில் வருபவர்களில் நல்லவர்கள் யார், குற்றவாளிகள் யார் என்பது தெரியாது. இதன் காரணமாகவே, நாங்கள் துப்பாக்கி முனையில் வாகனங்களை மடக்கி சோதனையில் ஈடுபட்டு வருகின்றோம்" என்றனர்.

துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரையவைக்கும் காட்சிகள்!

அதேசமயம், பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் இந்த செயலுக்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், "இந்த சம்பவம்குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக" அப்பகுதி டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும், "தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருப்பதாக" அவர் தெரிவித்தார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Using Gun At People During Regular Vehicle Checking. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X