தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

காவல் துறையினரின் செயல்பாடு ஒன்று, சமூக வலை தளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

இங்கிலாந்தின் ஹியர்ஃபோர்டு நகர காவல் துறையினரை நெட்டிசன்கள் தற்போது கிண்டல் செய்து வருகின்றனர். சுமார் 15 கிலோ மட்டுமே எடை கொண்ட மினி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு செல்வதற்கு, சுமார் 7,500 கிலோ எடை கொண்ட லாரியை அவர்கள் பயன்படுத்தியதே இதற்கு காரணம். இது கடந்த ஜூன் 4ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கூட்டர் ஆகும்.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

இதன்பின் பிரம்மாண்டமான லாரியின் பின் பகுதியில் வைத்து அந்த சிறிய ஸ்கூட்டரை கொண்டு சென்றுள்ளனர். மேலும் ஹியர்ஃபோர்டு நகர காவல் துறையினரின் பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஆச்சரியமடைந்து விட்டனர். ஏனெனில் அந்த லாரியில் இதேபோன்று இன்னும் 20-30 ஸ்கூட்டர்களை கொண்டு செல்ல முடியும்.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

அப்படியிருக்கும் போது இந்த சிறிய ஸ்கூட்டரை கொண்டு செல்வதற்கு காவல் துறையினர் ஏன் இவ்வளவு பெரிய லாரியை பயன்படுத்தினர்? என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தனைக்கும் அந்த ஸ்கூட்டரை ஒரு நபராலேயே கொண்டு சென்று விட முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

''ரோந்து காரின் பூட் பகுதியில் இந்த ஸ்கூட்டரை வைக்க முடியாதா? இந்த சிறிய ஸ்கூட்டரை கொண்டு செல்வதற்கு இவ்வளவு பெரிய லாரியை பயன்படுத்தியிருப்பது வீண் வேலை'' என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். மேலும் சிறிய ஸ்கூட்டரை கொண்டு செல்வதற்கு இவ்வளவு பெரிய லாரியை பயன்படுத்தியிருப்பது பணத்தை வீணடிக்கும் செயல் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

''ஒரு சிறிய ஸ்கூட்டரை கொண்டு செல்வதற்காக இவ்வளவு பெரிய லாரியை கொண்டு வந்தது பாராட்டுக்குரிய விஷயம் என நினைக்கிறீர்களா?'' என மற்றொரு நெட்டிசன் ஒருவர் காவல் துறையினரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் இன்னும் பலரும் காவல் துறையினரை கிண்டல் செய்யும் வகையில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

''இந்த சிறிய ஸ்கூட்டருக்காக எப்படி இவ்வளவு பெரிய லாரியை கொண்டு வந்தார்கள்? என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரை காவல் துறையினரின் காரில் நிச்சயமாக வைக்க முடியும்'' என மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு சமூக வலை தளங்கள் முழுக்க இதுபோல் பல்வேறு கமெண்ட்களை காண முடிகிறது.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

இந்தியாவிலும் தற்போது தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இதை மீறி, தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்...

ஆனால் நல்ல வேளையாக இந்தியாவில் இதுபோன்ற சர்ச்சைகளில் காவல் துறையினர் சிக்கவில்லை. இதற்கிடையே இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Trolled For Towing Away 15 Kg Mini Electric Scooter On A Massive 7.5 Tonne Truck. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X