இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சிகரமான இந்த வீடியோ வைரலாக பரவி வரும் சூழலில், இத்தகைய நபர்களுக்கு அரசு எவ்வாறு வேலை கொடுக்கிறது? என சமூக வலை தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அபராதம், டிரைவிங் லைசென்ஸ் ரத்து, சிறை உள்ளிட்ட வடிவங்களில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய வாகன ஓட்டிகளை கண்டறிந்து தண்டிக்கும் அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

ஆனால் சில சமயங்களில் போலீசார் கூட போக்குவரத்து விதிமுறைகள் எதையும் மதிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போலீசாரின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

லைக், ஷேர் மட்டும் செய்து விட்டு அதை நாம் எளிதாக கடந்து சென்று விடுகிறோம். ஆனால் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி கொண்டிருக்கும் ஒரு வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எளிதாக கடந்து செல்லக்கூடிய வீடியோ அல்ல.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

போலீஸ் அதிகாரி ஒருவர் சமீபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

ஆனால் இந்த போலீஸ் அதிகாரி ஹெல்மெட் அணியவில்லை. அத்துடன் அவரது டூவீலரின் இன்டிகேட்டர் தேவை இல்லாமல் ''ஆன்'' செய்யப்பட்டிருந்தது. இது பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை அவர் உணரவில்லை.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இதுதவிர இரண்டு காதுகளிலும் அவர் ''இயர் போன்'' வேறு மாட்டியிருந்தார். இதன் மூலமாக செல்போனில் பேசி கொண்டே அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதாக தெரிகிறது. அவர் சென்று கொண்டிருந்த வழியில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று இருந்தது.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

காவலர்கள் சிலர் அதன் முன்பு நின்று கொண்டிருந்தனர். போக்குவரத்து விதிகளை மீறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சியோ, அச்சமோ எதுவும் இல்லாமல், அங்கு நின்று கொண்டிருந்த காவலர்களை பார்த்து ஹாயாக கை அசைத்து விட்டு, அந்த போலீஸ் அதிகாரி தொடர்ந்து பயணித்தார்.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அந்த போலீஸ் அதிகாரியின் இத்தகைய விதிமீறல்களை, மற்றொரு பைக்கில் பயணித்த இளைஞர் ஒருவர் கவனித்து விட்டார். எனவே இதுகுறித்து கேள்வி எழுப்புவதற்காக போலீஸ் அதிகாரியை, அந்த இளைஞர் பின்தொடர்ந்து சென்றார். அப்போது டிராபிக் சிக்னல் ஒன்று வந்தது.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அங்கு வாகன ஓட்டிகள் நிற்க வேண்டும் என்பதை குறிக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எனவே வாகன ஓட்டிகள் சிலர், பச்சை விளக்கை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தனர். இதன்படி போலீஸ் அதிகாரியும் நிற்பார் என அந்த இளைஞர் எதிர்பார்த்தார்.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

ஆனால் போலீஸ் அதிகாரி நிற்கவில்லை. அதற்கு மாறாக சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தபோதே அவர் சிக்னலை கடந்து சென்றார். இருந்தபோதும் போலீஸ் அதிகாரியை விரட்டி பிடித்து விட வேண்டும் என அந்த இளைஞர் நினைத்தார்.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அதற்காக அவர் விதிமுறையை மீறி சிக்னலை கடந்து செல்லவில்லை. பச்சை விளக்கு எரியும் வரை அங்கு நின்று கொண்டிருந்தார். பச்சை விளக்கு எரிந்த உடன் தனது பைக்கை வேகமாக முறுக்கி, போலீஸ் அதிகாரியை விரட்டினார்.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக போலீஸ் அதிகாரி சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற அந்த இளைஞர், ''உங்கள் ஹெல்மெட் எங்கே?'' என கேட்டார்.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி, ''என்னிடம் இந்த கேள்வியை கேட்க நீ யார்?'' என அந்த இளைஞரை பார்த்து கத்தினார். அத்துடன் ''நீ ஒன்றும் போலீஸ் கிடையாது. இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்கும் அதிகாரம் உனக்கு இல்லை'' எனவும் அந்த போலீஸ் அதிகாரி ஆவேசமாக கூறினார்.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இதன்பின் டிராபிக் சிக்னலில் நிற்காமல் வந்தது குறித்து அந்த இளைஞர் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த போலீஸ் அதிகாரி ''அப்படித்தான் வருவேன்'' என்கிற ரீதியில் பதில் அளித்தார். ''இன்னும் அதிகமான சிக்னல்களை மீறி செல்வேன். மக்கள் மீது கூட மோதுவேன்'' என அவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

ஒருவேளை அந்த போலீஸ் அதிகாரி குடிபோதையில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. அங்கிருந்து போ... அங்கிருந்து போ... என அந்த இளைஞரை பார்த்து அவர் கத்தி கொண்டே இருந்தார். ஆனால் போலீஸ் அதிகாரி குடிபோதையில் இருந்தாரா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

முன்னதாக இவரிடம் பேசி பயன் இல்லை என கருதி அந்த இளைஞர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் அவரது ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் இந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி விட்டது. தற்போது அந்த வீடியோவை, Rev It Up யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளது.

இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

வெளியிடப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சம்பவம் இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, இன்ஸ்பெக்டராக இருக்கலாம் என கூறப்படுகிறது. மாநில அரசு அல்லது போலீஸ் உயரதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Policeman without helmet abuses a fellow biker. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X