சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

விதிமுறையை மீறிய பெண் போலீசுக்கு, சாமானிய மனிதர் ஒருவர் தக்க தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதன் மூலம் சாலை விபத்துக்களால் உலகிலேயே அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

டூவீலர்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி, இந்தியாவில் அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் அதனை பின்பற்றுவது கிடையாது. இந்தியாவில் சாலை விபத்து தொடர்பான மரணங்கள் அதிகமாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணம். டூவீலர்களில் பயணிப்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

எனவே டூவீலர்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இன்னமும் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. அவ்வளவு ஏன்? வாகன ஓட்டிகளை முறையாக ஹெல்மெட் அணிய வைக்க வேண்டிய காவல் துறையினர் சிலரே ஹெல்மெட் அணிவதில்லை என்பது கவலைக்குரிய ஒரு விஷயம்தான்.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்ட சமயத்தில், புனே நகரில் வித்தியாசமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அங்கு பொது மக்களும், அரசியல்வாதிகளும் கூட்டணி சேர்ந்து கொண்டு, டூவீலர்களில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவிற்கு எதிராக போராட தொடங்கினர்.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

அப்படிப்பட்ட புனே நகரில், போக்குவரத்து போலீஸ் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றார். இதற்காக அவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் பயனர் ஒருவர், அந்த பெண் போலீஸின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்ததால், அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

மந்தர் பிரமோத் தீக்ஸித் என்ற டிவிட்டர் பயனரால் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. சஹல் நகர் என்னும் பகுதியில், பெண் போலீஸ் ஒருவர், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதை பார்த்து, அவர் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட் செய்திருந்தது பின்வருமாறு:

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இவர் மீது யார் நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை சாதாரண பொது மக்களுக்கு மட்டும்தானா? இவ்வாறு அவர் டிவிட் செய்திருந்தார். சீருடையில் இருக்கும் பெண் போலீஸ் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டும் புகைப்படத்தை அவர் தன்னுடைய டிவிட்டில் இணைத்திருந்தார்.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

அத்துடன் புனே மாநகர போக்குவரத்து போலீஸ் மற்றும் புனே மாநகர கமிஷனர் ஆகியோரையும் அவர் டேக் செய்திருந்தார். இந்த டிவிட்டை கவனித்த உடனேயே புனே மாநகர போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 500 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான இ-சலான் அந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

டிவிட்டரில் பகிரப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில், ஹெல்மெட் அணியாத பெண் போலீஸ் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக Punekarnews செய்தி வெளியிட்டுள்ளது. காவல் துறையினர் இதுபோன்று விதிமுறை மீறலில் ஈடுபட்டால், நீங்களும் அதனை புகைப்படம் எடுத்து, சமூக வலை தளங்கள் வாயிலாக உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

நீங்கள் அப்படி செய்யும் பட்சத்தில், தவறு செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஏனெனில் இதற்கு முன்னதாகவும், டிவிட்டரில் தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில், விதிமுறைகளை மீறிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

தற்போது கொரோனா வைரஸ் (கோவிட்-19) வேகமாக பரவி வருவதால், நாம் அனைவரும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி கொண்டுள்ளோம். அதேபோன்று டூவீலர்களில் பயணம் செய்யும்போது, தலை கவசம் அணிவதையும் பழக்கப்படுத்தி கொண்டால், சாலை விபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Policewoman Fined For Not Wearing Helmet. Read in Tamil
Story first published: Wednesday, July 1, 2020, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X