இது புதுசா இருக்கே! டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய பாஜக பிரமுகர்... வைரல் வீடியோ!

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பாஜக கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் துப்பாக்கியை நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களில் ஒரு சிலர் தாங்கள்தான் அரசாங்கம் என்பதைப் போன்று பல நேரங்களில் நடந்துக் கொள்வதை நம்மால் காண முடிகின்றது.

தாங்கள் மக்களின் நலனுக்காக பணியாற்றவே நியமிக்கப்பட்டுள்ளோம் என்பதை பல நேரங்களில் அவர்கள் மறந்து விடுகின்றனர். மேலும், அந்த செயலுக்கான பலனாக சட்ட சிக்கலிலும் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், பிலிஃபட் என்னும் பகுதியில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல் பிரமுகர் செய்த செயல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், அரசியல் பிரமுகர் பயணித்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் வைத்திருந்த துப்பாக்கியை நீட்டி, பொதுமக்கள் அனைவரையும் மிரட்டும் தோணியில் நடந்துக் கொண்டுள்ளார். அரசியல்வாதியின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

இதற்கு முன்னதாக, டோல் கேட்டில் கட்டணம் செலுத்தாமல் ஓசியில் செல்வதற்காக ஊழியர்களைத் தாக்கியது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அட்ராசிட்டிகளை அரசியர்கள் மேற்கொண்டு வந்தநிலையில் இது முற்றிலும் விநோதமான செயலாக இருக்கின்றது.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

அதேசமயம், இந்த அரசியல்வாதியின் செயலை சட்ட விரோதம் மற்றும் மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கின்ற வகையிலான செயலாகவே பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவை கீழே காணலாம்...

வீடியோவில் முறைகேடாக நடந்துக் கொண்ட பாஜக அரசியல் பிரமுகரை மக்கள் சூடிக் கொண்டு காட்டமாக நடந்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், அவர் சென்ற சாலையில், அவரின் கார் மட்டுமின்றி பொதுமக்களுடை கார்களும் ஏராளமாக சாலையில் நிற்பதை நம்மால் காண முடிகின்றது.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவே பாஜக கட்சியைச் சேர்ந்த, அந்நபர் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவர் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

தொடர்ந்து, சட்ட விரேதமாக செயல்பட்ட அரசியல்வாதி மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்மீது எந்தெந்த பிரிவுகளின்கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது என்ற தகவல் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

அதேசமயம், அவர் பயன்படுத்திய துப்பாக்கியிற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை, அந்த துப்பாக்கியிற்கு உரிய அனுமதி பெறவில்லை என்றால், அரசியல் பிரமுகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஏன், அவரை சிறையில்கூட அடைக்கலாம்.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

இதுபோன்று, போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல்களில் இருந்து தப்பிப்பதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் தங்களின் வாகனங்களில் சைரன் மற்றும் ப்ளாஷர் மின் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

இது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குற்றமாகும். அவசர கால வாகனங்கள் மற்றும் போலீஸார் வாகனங்களில் மட்டுமே இத்தகைய கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சைரன், ப்ளாஷர் மற்றும் விஐபி ஸ்டிக்கர்கள் போன்றவற்றை ஒட்டிக்கொண்டு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

இதேப்போன்று, பொதுமக்களில் பலரும் போலியாக போலீஸ், பத்திரிக்கையாளர், அட்வகேட் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸின் கெடுபிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். தற்போது வாகனங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவது குற்றம் என மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக நம்பர் பிளேட்டுகளில் பதிவெண்ணகளைத் தவிர வேறெந்த எழுத்துக்களும் இடம்பெறக் கூடாது என்பதே அதன் முக்கிய கருத்தாகும்.

இது புதுசா இல்ல இருக்கு... டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்.... வைரல் வீடியோ!

இருப்பினும், இதுகுறித்து பலர் அறியாமல், இந்த தவறை செய்து போலீஸாரிடம் சிக்கிக்கொள்கின்றனர்.

அதேசமயம், பொதுவெளியில் துப்பாக்கிப் போன்ற எந்தவொரு ஆயுதங்களையும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு கூறுகின்றது. மீறினால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்துகின்றது. இதனடிப்படையிலேயே பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Politician Pulls Out Gun To Clear Traffic In UP. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X