வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அபாயக் கட்டத்தை நோக்கி நகரத் துவங்கி இருக்கிறது.

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

வாகனங்களிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மையான புகையால் உலக அளவில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரு நகரங்கள் வாகனப் புகையால் காற்று மாசுபாடு அபாயக் கட்டத்தில் இருந்து வந்தது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் கழிவுகளும் முக்கிய காரணமாக இருந்தது. இதனால், ஜீவராதிகளுக்கு பல்வேறுவிதமான உடல் உபாதைகளையும், நோய்களையும் ஏற்படுவதற்கு காரணமாக இருந்து வருகிறது.

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதத்தில், உலகின் பெரும்பாலான நாடுகளில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, கடந்த இரு மாதங்களாக உலக அளவில் வாகனங்கள் இயக்கம் அடியோடு முடங்கியது. அதேபோன்று, ரயில், கப்பல் மற்றும் விமானம் என அனைத்து சேவைகளுமே அடியோடு ஸ்தம்பித்தது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

இதனால், உலக அளவில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்தது. பெருநகரங்களில் காற்று மாசுபாடு முற்றிலும் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

இந்த சூழலில், கொரோனா ஒருபுறம் அதிகரித்தாலும், அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு முறைகளுடன் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. விமான, ரயில் சேவைகளும் குறிப்பிட்ட அளவில் மீண்டும் துவங்கி இருக்கின்றன.

MOST READ : அசத்தலான வெள்ளை & நீல நிறத்தில் எம்வி அகுஸ்டா புருட்டேல் 1000 ஆர்ஆர் எம்எல் பைக்...

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

இதனால், காற்று மாசுபாடு அதிகரிக்கத் துவங்கி இருப்பதுடன், பெருநகரங்களில் மீண்டும் அபாய கட்டத்தை நோக்கி செல்கிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் மீண்டும் பழையபடி, அபாயக் கட்டத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

டெல்லியில் காற்று மாசுபாடு மீண்டும் அபாயக் கட்டத்தை நோக்கி செல்வதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில், டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா மற்றும் குர்கான் ஆகிய நகரங்களில் காற்று மாசுபாடு பரவாயில்லை என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று குர்கானில் காற்று தரக் குறியீடானது 78 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ : ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

இதனிடையே, சென்னையிலும் காற்று தரம் குறித்த ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை வேளச்சேரி, ஆலந்தூர், பெருங்குடி, மணலி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு கருவியில் பதிவான அளவுகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

அதில், கடந்த மார்ச் 1ந் தேதி முதல் 23ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் காற்று தரக்குறியீடு சராசரியாக 61.5 என்ற அளவில் இருந்தது. ஆனால், முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையிலான காலக்கட்டத்தில் காற்று தரக்குறியீடு 42.3 ஆக பதிவாகி இருக்கிறது. இரண்டாம் ஊரடங்கு காலத்தில் இது மேலும் குறைந்து சராசரி அளவு 29.3 ஆக பதிவானது தெரிய வந்துள்ளது.

MOST READ : இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

இதையடுத்து, மூன்றாம் கட்ட ஊரடங்கு காலத்தில் விதிகளில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டதால், வாகனப் போக்குவரத்தும், தொழிற்சாலைகள் இயக்கமும் மீண்டும் துவங்கியது. இதனால், காற்று தரக்குறியீட்டின் சராசரி அளவு 34.3 ஆக பதிவாகி உள்ளது.

வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில், சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசுபாடு மீண்டும் அதிகரிக்கத் துவங்கி இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
According to reports, Pollution levels increases again across cities due to covid restrictions ease.
Story first published: Friday, June 5, 2020, 15:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X