5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

புதிதாக வாங்கிய கார் லிட்டருக்கு 5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்ததால், அதன் உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள ஜேபி நகர் டிஎம்சிஎஸ் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். 52 வயதாகும் சசிகுமார் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜீப் காம்பஸ் கார் ஒன்றை வாங்கினார். இது எஸ்யூவி ரக கார் ஆகும். ஜீப் காம்பஸ் காரின் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்டைதான் சசிகுமார் வாங்கினார்.

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

பெங்களூர் யஷ்வந்த்பூர் பகுதியில் உள்ள ஜீப் இந்தியா நிறுவனத்தின் ஷோரூமில் இந்த கார் வாங்கப்பட்டது. தனது மகளுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்குவதற்காகவே ஜீப் காம்பஸ் காரை சசிகுமார் வாங்கினார். காரை வாங்குவதற்கு முன்னதாக அவர் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தார். அப்போது காரின் அனைத்து சிறப்பம்சங்களையும் விற்பனை பிரதிநிதி விளக்கி கூறினார்.

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

அத்துடன் இந்த கார் ஒரு லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் விற்பனை பிரதிநிதி உறுதி அளித்தார். இதன்பேரில் 26 லட்ச ரூபாய் செலவு செய்து ஜீப் காம்பஸ் காரை சசிகுமார் வாங்கினார். இதன் பின்பு தனது மகளுக்கு பரிசாகவும் அந்த காரை அவர் வழங்கினார். ஆனால் பெட்ரோல் நிரப்புவதற்காக சசிகுமாரின் மகள் அதிக பணத்தை கேட்டு கொண்டே இருந்தார்.

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

எனவே காரின் மைலேஜை சசிகுமார் பரிசோதித்து பார்த்தார். இதில், புதிதாக வாங்கிய கார் ஒரு லிட்டருக்கு வெறும் 5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் வழங்குவதை சசிகுமார் கண்டறிந்தார். ஜீப் இந்தியா டீலர்ஷிப் உறுதியளித்தபடி போதுமான மைலேஜை கார் வழங்காததால், சசிகுமார் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தார்.

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

காரை வாங்கியது முதலே, ஜீப் இந்தியா டீலர்ஷிப்பில் உறுதியளித்தபடி இந்த கார் மைலேஜ் வழங்கவில்லை. எனவே தான் காரை வாங்கிய டீலர்ஷிப்பில் இது தொடர்பாக சசிகுமார் புகார் அளித்தார். அத்துடன் ஜீப் இந்தியா நிறுவனத்தையும் அவர் அணுகினார். ஆனால் பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

MOST READ: மந்திரவாதிகள் உலாவும் இந்தியாவின் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற இளம் ஜோடிக்கு நடந்த திகில் சம்பவம்...

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

எனவே ஜேபி நகர் போலீஸ் ஸ்டேஷனை சசிகுமார் அணுகினார். அங்கு ஜீப் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக அவர் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்து விட்டனர். ஏனெனில் இதுபோன்ற ஒரு புகார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இருந்தபோதும் இது தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழ்நாடு...

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

தனக்கு புதிய ஜீப் காம்பஸ் காரை வழங்க வேண்டும் அல்லது முழு பணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்பதே சசிகுமாரின் வலியுறுத்தலாக உள்ளது. அதே நேரத்தில் உறுதியளிக்கப்பட்ட மைலேஜை வழங்கும் திறன் இந்த காருக்கு இருப்பதாக கம்பெனி டீலர்ஷிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் அவசியமான கண்டுபிடிப்பு... கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது தெரியுமா?

5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

பொதுவாக வாகன உற்பத்தி நிறுவனங்களோ அல்லது டீலர்களோ தெரிவிக்கும் மைலேஜ் அப்படியே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அரிதிலும் அரிதாகதான் இது நடக்கும். வாகனம் சிறப்பான மைலேஜை வழங்குவது என்பது சாலைகளின் நிலை மற்றும் டிரைவரின் திறன்கள், பக்குவம் ஆகியவற்றையும் பொறுத்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Source:Deccan Herald

Note: Images used are for representational purpose only.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

ஜீப் காம்பஸ் உரிமையாளரைவிட சிலர் ஒருபடி மேலே போய் நூதன பிரச்சாரங்களை மேற்கொண்ட சம்பவங்களும் இந்தியாவில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த வகையில், எஞ்சின் பிரச்னைக்கு சரியான தீர்வு தராத ஹோண்டா நிறுவனத்தின் மீது நொந்து போன அந்த வாடிக்கையாளர், ஹோண்டா அமேஸ் வேண்டாம் என்று அவரது கார் முழுவதும் எழுதி பிரச்சாரம் செய்து வரும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் நகரை சேர்ந்தர் சஞ்சீவ் குப்தா. இவர் அங்குள்ள ஒக்லா பகுதியில் உள்ள கோர்ட்டஸி ஹோண்டா என்ற கார் ஷோரூமில் புதிய ஹோண்டா அமேஸ் டீசல் காரை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

கார் 33,000 கிலோமீட்டர் தூரம் ஓடிய நிலையில், காரின் புகைப்போக்கியிலிருந்து அடர்த்தியான வெண்புகை அதிக அளவில் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அருகிலிருந்த ஹோண்டா கார் சர்வீஸ் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

அங்குள்ள சர்வீஸ் சூப்பர்வைசர் எஞ்சினை இறக்கி ரிப்பேர் செய்ய வேண்டும். அதற்கு ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை செலவாகும் என்று கூறியிருக்கின்றனர். அப்போது, இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ வாரண்டி இருப்பதை சஞ்சீவ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வாரண்டி காலத்தில் இருந்தாலும், இந்த செலவை ஏற்க வேண்டும் என்று சர்வீஸ் மையத்தில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ஹோண்டா கால் சென்டரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கிருந்து உருப்படியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஹோண்டா சர்வீஸ் மையத்திலேயே கார் இருந்துள்ளது. ஹோண்டா கார் நிறுவனத்தின் உயரதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை.

இதுபோன்று புகை வருவதற்கு என்ன காரணம் என்று சஞ்சீவ் வினவியிருக்கிறார். அதற்கு, மழை நேரத்தில் கார் எஞ்சினில் தண்ணீர் புகுந்திருக்கலாம் என்று பதில் கிடைத்தது. அப்படியானால், மழை நேரத்தில் காரை ஓட்டக் கூடாதா என்றும் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் இல்லை.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

ஒருவழியாக கோர்ட்டஸி ஹோண்டா நிறுவனத்திடம் வைத்து சர்வீஸ் செய்துள்ளார். சர்வீஸுக்கு ரூ.60,000 கேட்டவர்கள், ரூ.37,749 பில்லை போட்டு தாளித்து காரை சரிசெய்து கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, காரை விற்பனை செய்ய திட்டமிட்டார்.காரை விற்பனை செய்ய முயற்சித்தபோது, எஞ்சின் பழுதை காரணம் காட்டி ஒரு லட்ச ரூபாய் வரை தள்ளுபடி செய்து கேட்டுள்ளனர். இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த அவர், விரக்தியில் நூதன பிரச்சாரத்தை செய்தார்.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

ஹோண்டா அமேஸ் வேண்டாம் என்ற வாசகங்களை ஆங்கிலத்திலும், இந்தியிலும் கார் முழுவதும் எழுதி சாலையில் நிறுத்திவிட்டார். இதனை பார்த்த ஒருவர், அதனை படமெடுத்து, சமூக வலைதளங்களில் போட்டுவிட்டார். அந்த பதிவை 27,000 பேர் வரை பகிர்ந்துள்ளனர்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா அமேஸ் டீசல் கார்களின் எஞ்சினில் பழுது இருப்பதாகவும், அதனை சரிசெய்து புதிய எஞ்சின் பொருத்த வேண்டும் என்றும் சஞ்சீவ் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை போன்றே, 200 வாடிக்கையாளர்கள் இந்த பிரச்னையில் சிக்கி இருப்பதாகவும், ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை இதற்கு செலவு பிடிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

ஹோண்டா அமேஸ் காருக்கு வழங்கப்படும் வாரண்டியானது போலி வாக்குறுதி. எஞ்சின் பழுது செலவை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்தோ அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்தோதான் ஹோண்டா பிடுங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

இது பரவாயில்லை. விலை உயர்ந்த ஜாகுவார் சொகுசு கார் உரிமையாளர் ஒருவர் செய்த போராட்டம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் ராகுல் தக்கார். ஜாகுவார் கார் மீது பேராவல் கொண்ட இவர் 50 லட்ச ரூபாய் மதிப்புடைய வெள்ளை நிற ஜாகுவார் எக்ஸ்எஃப் காரை வாங்கினார்.

ஆனால், அந்த சந்தோஷம் சில மாதங்கள்தான் நீடித்தது. அந்த காரின் ஹெட்லைட், பம்பர், எஞ்சின் போன்றவைகளில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கார் வாங்கிய கார்கோ டீலர்ஷிப்பின் சர்வீஸ் மையத்துக்கு எடுத்துச் சென்றார். ஆனால், அங்கு பிரச்னை முழுமையாக சரிசெய்து கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால், கோபமடைந்த அவர் அந்த காரை கழுதைகளை கட்டி டீலர்ஷிப்புக்கு இழுத்துச் சென்றார்.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த காருக்கு கழுதை தேவலாம் என்ற ரீதியில் வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியிருந்தார்.

காரின் மீது சிறிய வைக்கோல் கட்டு பொதிகளை போட்டும் கழுதைகளை விட்டு இழுக்கச் செய்தார்.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

8 கழுதைகளை பூட்டி காரை இழுக்கச் செய்தார். இதனால், அந்த டீலர்ஷிப் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து டீலர்ஷிப்பிலிருந்து எந்த பதிலும் தராமல் மவுனம் காத்தனர்.

ஹோண்டா அமேஸ் காரில் பிரச்னைக்கு நூதன போராட்டம்

உலக அளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருகிறோம். சம்பந்தப்பட்ட காரின் பிரச்னையை கூடிய விரைவில் சரிசெய்து கொடுக்கப்படும். இதுதொடர்பாக, அந்த வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளோம்," என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Poor Mileage - Jeep Compass SUV Owner Files FIR. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X