யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் குறைந்துவந்தாலும், இன்னமும் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கங்கள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றன.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

டெல்லியில் கார்களில் பயணிக்கும்போது முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்போர் இருப்பதுபோல், ஏற்காதவர்கள் சிலரும் இருக்க தான் செய்கின்றனர். இவ்வாறு முக கவசம் அணியாமல் விலையுயர்ந்த போர்ஷே காரை ஓட்டி வந்த ஓட்டுனரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

தெற்கு டெல்லியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தில், சிவப்பு நிற போர்ஷே 911 கார் ஒன்றை போலீஸார் நிறுத்தியுள்ளனர். காருக்குள் இருந்த ஓட்டுனரை பார்த்ததில் அவர் முக கவசம் அணியாமல் இருந்துள்ளார் என கீழே உள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஓட்டுனரை தெளிவாக பார்க்க முடியாததால் அவர் உண்மையில் முககவசம் அணியவில்லையா என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. புன்னி புனியா (Bunny punia) என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேல் உள்ள வீடியோவின் மூலமாகவே இந்த போர்ஷே ஓட்டுனர் முககவசம் அணியவில்லை என கூறுகின்றோம்.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

51 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில், சிவப்பு போர்ஷே 911 காரை சுற்றிலும் மூன்று போலீஸார் நின்றுள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காரை விட்டு எங்கும் தப்பித்து செல்ல முயலவில்லை. போலீஸாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

51 வினாடிகள் மட்டுமே என்பதால் இவற்றை தவிர்த்து இந்த வீடியோவின் மூலம் வேறெந்த விபரத்தையும் அறிய முடியவில்லை. இந்த போர்ஷே கார் ஓட்டுனருக்கு முக கவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

போர்ஷே 911 போன்ற லக்சரி ஸ்போர்ட்ஸ் கார்களை பணக்காரர்களும், அரசியல்வாதிகளுமே பொதுவாக பயன்படுத்துவர். இருப்பினும் போலீஸார் தைரியமாக இவ்வாறான காரை நிறுத்தி அதற்குள் இருந்த ஓட்டுனருக்கு அபராதம் விதித்திருப்பது பாராட்டுக்குரியது.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

இதுபோன்று சமீபத்தில் கூட முக கவசம் அணியாமல் போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை ஓட்டிவந்த பிரபல டெல்லி பிஸ்னஸ்மேன் தீபக் தர்யானியின் மகனுக்கு அபராதத்தை போலீஸார் விதித்து இருந்தனர். எளியோர்க்கு உணவு பொட்டலங்கள் வழங்கவே அவர் காரில் வந்துள்ளார், இருப்பினும் போலீஸார் அவருக்கு அபராத செல்லானை வழங்கியுள்ளனர்.

யாருக்கும் பயப்படாத போலீஸார்!! போர்ஷே கார் ஓட்டுனருக்கு அபராதம்... டெல்லியில் நடைபெற்றுள்ள தரமான சம்பவம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகமாகக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் கடந்த 70 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Porsche 911 supercar driver fined for not wearing mask.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X