வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

ஒழுங்காக சாலை அமைக்காத இன்ஜினியர் மற்றும் காண்ட்ராக்டருக்கு மக்கள் சுகானுபவத்தை கொடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

இந்தியாவில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பது பெரும் பிரச்னையாக மாறி கொண்டுள்ளது. இது ஒரு மாநிலத்திற்கான பிரச்னை மட்டுமல்ல. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளன. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அனைவரும் இனி போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

எனவே இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகளோ, ''சாலைகளை முதலில் ஒழுங்காக அமைத்து விட்டு இது போன்று அபராதம் விதியுங்கள். போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமல்லாது, மோசமான சாலைகளும் கூட விபத்துக்களுக்கு முக்கியமான காரணம்தான்'' என தெரிவித்து வருகின்றனர்.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

பொதுவாக சாலைகள் மோசமாக இருந்தால் அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, இல்லாவிட்டால் சிறிதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவது ஆகியவைதான் நமது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் கோவா மாநில மக்கள் வழக்கத்திற்காக மாறாக அதிரடியான ஒரு காரியத்தை செய்துள்ளனர். அவர்களின் இந்த அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

கோவாவின் கான்கோனா பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்து வருகின்றன. சாலைகள் மோசமாக இருந்த காரணத்தால், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சிதிலமடைந்த சாலைகளை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

உள்ளூர் மக்கள் சிலர் ஒன்று திரண்டு, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வென்ற காண்ட்ராக்டரை, பொதுப்பணித்துறை இன்ஜினியர் அழைத்தார். காண்ட்ராக்டர் வந்ததும், சாலைகளை சரி செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

ஆனால் பொதுப்பணித்துறை இன்ஜினியரும், காண்ட்ராக்டரும் பல்வேறு காரணங்களை கூறி சமாளித்தனர். குறிப்பாக காண்ட்ராக்டரோ வானிலை மீது பழிபோட்டார். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதன் காரணமாகதான், சாலைகளின் நிலை மிக மோசமானதாக மாறி விட்டதாக அவர் கூறினார். இதுபோல் அவர்கள் தரப்பில் மேலும் சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

ஆனால் இதே காரணங்களைதான் முன்பும் கூறியதாக மக்கள் குற்றம்சாட்டினர். எனவே காண்ட்ராக்டர் மற்றும் இன்ஜினியர் கொடுத்த எவ்விதமான விளக்கத்தையும் இம்முறை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, ஆம்புலன்ஸில் அமர்ந்து மோசமான சாலையில் பயணம் செய்து பார்க்கும்படி காண்ட்ராக்டரையும், இன்ஜினியரையும் அவர்கள் வலியுறுத்தினர்.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

''இதுபோன்ற கடினமான சாலைகளில் பயணம் செய்யும் அனுபவம் எப்படி இருக்கிறது? என்று உணர்ந்து பாருங்கள்'' எனவும் அவர்களிடம் மக்கள் கூறினர். பொதுமக்கள் விடாமல் வலியுறுத்தியதன் காரணமாக, காண்ட்ராக்டரும், இன்ஜினியரும் ஆம்புலன்ஸில் ஏறி கொண்டனர். ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரெச்சரில், காண்ட்ராக்டர் படுத்து கொள்ள, அவருக்கு அருகே இன்ஜினியர் அமர்ந்து கொண்டார்.

வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு

இதன்பின் சேதமடைந்த சாலைகளில் அவர்களை அழைத்து கொண்டு மக்கள் உலா வந்தனர். இந்த பயணம் முடிவடைந்த பின்பாக அவர்களிடம் மக்கள் கருத்து கேட்டனர். இதற்கு இந்த அனுபவம் வலி நிறைந்ததாக இருந்தது என காண்ட்ராக்டர் கூறினார். இதன்பின் சாலைகளை தரமாக அமைக்கும்படியும், மோசமான சாலைகளை விரைவாக சீர்செய்யும்படியும் அவர்களிடம் மக்கள் மீண்டும் கேட்டு கொண்டனர். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மோசமான சாலைகளில் பயணம் செய்யும் அனுபவம் எப்படி இருக்கும்? என்பதை காண்ட்ராக்டருக்கும், இன்ஜினியருக்கும் உணர்த்த கோவா மக்கள் செய்த அதிரடி செயல் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source: In Goa 24X7/Facebook

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Goa Locals Give Demo Of Rough Roads To PWD Engineer And Contractor: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X