Just In
- 32 min ago
டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!
- 42 min ago
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
- 2 hrs ago
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்... வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!
- 2 hrs ago
சொகுசு கார் மோதி இரு போலீஸார் பலி... சென்னையில் அரங்கேறிய கோர சம்பவம்... என்ன நடந்தது?
Don't Miss!
- Lifestyle
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- News
மொத்த கட்சிகளின் குறி இந்த "ஒத்த" தொகுதி மீது.. நிற்க போவது "நம்மவர்" ஆச்சே.. சூடு பறக்குது!
- Sports
அழுத்தம் கொடுத்த "சிலர்".. "அதிரடி மன்னன்" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. பரபர நிமிடங்கள்
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Movies
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புத்தம் புதிய விமானம் மூலம் சென்னை வந்த குடியரசு தலைவர்... இந்த விமானத்தின் பின்னால் இவ்ளோ தகவல்களா?
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பயன்படுத்திய புத்தம் புதிய விமானம் பற்றிய வியக்க வைக்கும் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்வதற்காக நமது நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று விடியற்காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியேறாமலேயே ராணுவ விமானத்தின் மூலம் அவர் திருப்பதிக்கு சென்றார். இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து வருவதற்காக அவர் ஏர் இந்தியா ஒன் - பி777 விமானத்தைப் பயன்படுத்தினார்.

இந்த விமானம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வாங்கப்பட்ட சிறப்பு விமானம் ஆகும். விரைவில் இந்த விமானங்கள் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் (விவிஐபி) பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இந்த புதிய தலைமுறை விமானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாகவே குடியரசு தலைவர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனைத்தைச் செய்கிறார். முன்னதாக, பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் வைத்து விமானத்தை மலர் தூவி வரவேற்றார்.

முன்னதாக பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களின் பயணங்களுக்காக பி747 ரக விமானங்களேப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு பதிலாகவே தற்போது புதிய தலைமுறை போயிங் 777 விமானங்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இது உலகின் வல்லாதிக்க தலைவர்கள் பயன்படுத்தி வரும் பாதுகாப்ப நிறைந்த விமானங்களைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்ட விமானம் ஆகும்.

இதனையேப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாகவே குடியரசு தலைவர் தற்போது இந்த விமானத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த விமானம் பி747-400 விமானத்தைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய விமானமாக இருக்கின்றது. தொடர்ந்து, பல்வேறு சொகுசு வசதிகளை மிக தாராளமாக வழங்கக்கூடிய வகையிலும் அது காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பறக்கும் சொகுசு அரண்மனையைப் போன்று இந்த புதிய விமானம் இருக்கும்.

மேலும், இந்த விமானம் வானத்தில் பறக்கும்போது பிற விமானங்களைப் போல் அதிக ஒலியையும் எழுப்பாது. இத்தகைய சிறப்பு விமானத்தையே மிக சமீபத்தில் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியா பெற்றது. இதனையே தற்போது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்திருக்கின்றார்.

எதிர்காலத்தில் இந்த விமானங்களையே குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அரசு முறை உள் நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்த இருக்கின்றனர். இவர்களுடன் சில குறிப்பிட்ட விவிஐபிக்களின் பயணங்களுக்கும் இந்த விமானம் விரைவில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இந்த விமானங்கள் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, தற்போது வாங்கப்பட்டிருக்கும் இந்த புதிய விமானங்களில் அகச்சிவப்பு மற்றும் மின்னணு போர் எதிர்ப்பு கவசங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஏவுகணை போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கின்ற வகையிலான திறனைப் பெற்றிருக்கின்றது.

Image Source: PresidentOfIndia/Twitter
இதற்காக எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகள் விமானத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய வசதிக் கொண்ட இரு விமானங்கள் சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு இந்த விமானங்கள் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.