ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

மாஸான காரியத்தை அசால்டாக செய்து முடித்து இந்திய விமானப்படை கெத்து காட்டியுள்ளது. இதனால் உலக நாடுகள் மிரண்டு போயுள்ளன.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

இந்தியாவில் வாகனங்கள் இல்லாத வீடே இல்லை என்ற சூழல் தற்போது உருவாகி வருகிறது. ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது உள்ளது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். இந்தியாவில் சமீப காலமாக ஆட்டோமொபைல் துறை தடுமாறி வருகிறது. இருந்தபோதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் தேவையும் உயர்ந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே உலகிலயே கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

ஆனால் இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா பல லட்சம் கோடி ரூபாய்களை செலவழித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை உண்டாக்குகின்றன.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தே தீருவது என பிரதமர் மோடி சபதம் எடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் மத்திய அரசு ஊக்குவித்து கொண்டுள்ளது.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

இப்படிப்பட்ட சூழலில், இந்திய விமானப்படை (IAF - Indian Air Force) நிகழ்த்தியுள்ள ஒரு சாதனை அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் ஏராளமான விமானங்கள் உள்ளன. இதில், ஏஎன்-32 (AN-32) விமானமும் ஒன்று. ஏஎன்-32 விமானம் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

இந்த ஏஎன்-32 விமானத்தை, பயோ-எரிபொருளில் இயக்கி, இந்திய விமானப்படை சாதனை நிகழ்த்தியுள்ளது. உயிரி எரிபொருள் (Bio-Fuel) மூலம் ஏஎன்-32 விமானத்தை இயக்கியதற்காக பிரதமர் மோடி தற்போது பாராட்டு தெரிவித்துள்ளார். பயோ எரிபொருளில் இயங்கிய ஏஎன்-32 விமானம் லேவில் (Leh) உள்ள குஷோக் பாகுலா ரிம்போசே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

10 சதவீதம் பயோ-ஜெட் ஃப்யூயல் கலக்கப்பட்ட எரிபொருளில் ஏஎன்-32 விமானம் இயக்கப்பட்டுள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. இந்த எரிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக கார்பன் எமிஸனை குறைக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் நிலையும் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரேடியோவில் பேசும்போது அவர் இதனை கூறினார். அத்துடன் வரலாறு படைக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அதுவும் மிகவும் உயரமான ஒரு இடத்தில் அமைந்துள்ள ஏர்போர்ட்டில் இருந்து இந்த ஏஎன்-32 விமானம் புறப்பட்டுள்ளது.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

இதனையும் பிரதமர் மோடி தவறாமல் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ''ஏஎன்-32 விமானம் புறப்பட்ட ஏர்போர்ட் இந்தியாவில் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் விமான நிலையங்களில் ஒன்று மட்டும் கிடையாது. உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்திருக்கும் விமான நிலையங்களில் இதுவும் ஒன்று'' என்றார்.

ராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. இந்த வகையில் புதிய முயற்சியை செய்துள்ள இந்திய விமானப்படைக்கும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நாமும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prime Minister Modi Praises IAF's Use Of Bio-Fuel In AN-32 Transport Plane. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X