புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி பயன்படுத்தும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் சிறப்புகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி, பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இதனிடையே, திருமண நிகழ்விலும் பங்கு கொண்டார். அப்போது அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவி காரை பயன்படுத்தினார்.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரை அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வந்த மோடி இரு மாதங்களாக ரேஞ்ச்ரோவரை அதிகம் பயன்படுத்தி வருகிறார். சென்னையிலும், ரேஞ்ச்ரோவரில்தான் பிரதமர் மோடி வலம் வந்தார். இந்த காரில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த செய்தியில் காணலாம்.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

குஜராத் முதல்வராக இருந்தவரை பிரதமர் மோடி மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை பயன்படுத்தி வந்தார். பின்னர், பிரதமரானதும், குண்டு துளைக்காத சிறப்பம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி காரை பயன்படுத்தி வருகிறார்.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, பிரதமர் மோடி திடீரென ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிக்கு மாறினார். அப்போதே, இந்த விஷயம் ஊடகங்களில் பெரிய செய்தியாக அடிபட்டது.

Recommended Video

Range Rover SV Autobiography Dynamic launched in India - DriveSpark
புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வாகனம் மாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், தொடர்ந்து அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தவிர்த்து, தற்போது ரேஞ்ச்ரோவரிலேயே அதிகம் வலம் வருகிறார். அண்மையில் சென்னை பயணத்தின்போதும் அவர் பயன்படுத்தியது ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிதான்.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி பயன்படுத்தும் ரேஞ்ரோவர் எஸ்யூவி 2010ம் ஆண்டு தயாரிப்பு மாடல். ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியில் விலை உயர்ந்த HSE என்ற வேரியண்ட்தான் தற்போது அவருக்கான அதிகாரப்பூர்வ கார் மாடலாக பயன்படுத்தப்படுகிறது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

குண்டு துளைக்காத இந்த சொகுசு எஸ்யூவி காரானது, VR7 என்ற பாதுகாப்பு தர அம்சங்களை கொண்டது. அதாவது, காரின் Vehicle Resistance[VR] என்ற பாதுகாப்பு தர வசதிகளின் அடிப்படையில், VR-4, VR-6, VR-7 மற்றும் VR-9 என வகைப்படுத்தப்படுகிறது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

VR-4 அடிப்படை பாதுகாப்பு அம்சங்களையும், VR-9 அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளை கொண்ட மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது. கார் மற்றும் கண்ணாடியின் குண்டு துளைக்காத அம்சம் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் இந்த தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

கார்களை எப்படி க்ராஷ் டெஸ்ட் அமைப்புகள் தரத்தை பரிசோதித்து சான்றளிக்கிறதோ, அதேபோன்று ஐரோப்பாவை சேர்ந்த VPAM அமைப்பானது இதுபோன்ற உயர்வகை பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரின் பாதுகாப்பு அம்சங்களை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி சான்று வழங்குகிறது.

தொடர்புடைய சுவாரஸ்ய செய்திகள்:

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

அதில், பிரதமர் மோடியின் கார் VR-7 என்ற பாதுகாப்பு தர நிர்ணய அம்சங்களை கொண்டது. காரில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் உயர் வகை ஸ்டீல் மற்றும் உதிரிபாகங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இது நிர்ணயிக்கப்படுகிறது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி பயன்படுத்தும் ரேஞ்ச்ரோவர் கார் குண்டு துளைக்காத அம்சங்களை பெற்றிருப்பதோடு, விஷ வாயு தாக்குதலில் கூட உள்ளே பயணிப்பவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் சிறப்பு தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

விஷவாயு தாக்குதல் நேரத்தில், வெளிக்காற்று காருக்குள் புகாதவாறு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாதிரியான சமயங்களில், இந்த காரில் இருக்கும் ஆக்சிஜன் கலன் மூலமாக பயணிகளுக்கு தேவையான பிராண வாயு வழங்கும் வசதி உள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

இந்த காரின் எரிபொருள் டேங்க் தீப்பிடிக்காத தொழில்நுட்பத்தை பெற்றிப்பதுடன், குண்டு வெடிப்பு போன்ற சமயங்களில் எரிபொருள் கலன் முழுவதுமாக பாதுகாப்பான உறையை பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

கண்ணி வெடித்தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காக, இந்த காரின் அடிப்பாகம் வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கிறது. அத்துடன், டயர்கள் பஞ்சரானாலும், தொடர்ந்து குறிப்பிட்ட வேகத்தில் செலுத்துவதற்கான ரன் ப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

அவசர காலங்களில் விரைவாக செலுத்துவதற்கான திறனையும் இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 375 பிஎச்பி பவரையும், 508 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மணிக்கு 218 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை உண்டு. 4 வீல் டிரைவ் சிஸ்டத்திலும் இயக்கலாம்.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

இதிலுள்ள அனைத்து வசதிகளும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி காரிலும் இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி ஒரு எஸ்யூவி பிரியர். நீண்ட காலம் ஸ்கார்ப்பியோவை பயன்படுத்தி வந்த அவருக்கு பிரதமரானதும், பிஎம்டபிள்யூ கார் கொடுக்கப்பட்டது.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சிறப்பு பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலின்பேரில், அந்த காரையே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அவருக்கான வாகன பட்டியலில் இருந்த ரேஞ்ச்ரோவருக்கு அவர் மாறிவிட்டார்.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

சாலையில் செல்லும்போது மோடி, அங்கு அவரை பார்க்க கூடியிருக்கும் தொண்டர்கள், பொதுமக்களை பார்ப்பதற்காக காரின் வெளியே நின்றபடி கையசைத்து செல்வது வழக்கம். இதற்கு பிஎம்டபிள்யூ சரிபட்டு வராது. அதாவது, முன் வரிசை இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே அதற்கு வசதியாக இருக்கும்.

புதிய இந்தியாவை உருவாக்க புதிய காரில் ஏறிய பிரதமர் மோடி!

எனவே, அவர் ரேஞ்ச்ரோவரை விரும்பி பயன்படுத்துகிறார். சென்னை பயணத்தின்போது கூட அவர் காரில் வெளியே நின்றபடி கையசைத்து சென்றது நினைவிருக்கலாம்.

தொடர்புடைய சுவாரஸ்ய செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
பிரதமர் மோடி கார், பிரதமர் மோடி ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி, சொகுசு கார், குண்டு துளைக்காத கார்
Story first published: Wednesday, November 8, 2017, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X