உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக 2 புதிய அதிநவீன விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு மற்றும் மிரட்டலான பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மற்றும் விமானங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் பி747 (B747) விமானங்களில்தான் பிரதமர் மோடி பறந்து வருகிறார்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கூட பி747 விமானங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் மிக முக்கியமான நபர்கள் பயணிக்கும் இந்த பி747 விமானங்களை ஏர் இந்தியாவின் பைலட்கள்தான் இயக்கி வருகின்றனர்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஏஐஇஎஸ்எல் எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் (AIESL - Air India Engineering Services Limited) அவற்றை பராமரித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் பயன்பாட்டிற்காக 2 புதிய விமானங்களை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் ஆகியோரின் பயணங்களுக்காக இரண்டு பி777 (B777) விமானங்களைதான் இந்தியா வாங்கவுள்ளது. பி777 விமானங்களை போயிங் 777 (Boeing 777) என்றும் அழைக்கலாம். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்தால் இந்த விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2020ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த விமானங்களை இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்த உள்ளனர். ஆனால் இந்த விமானங்களை ஏர் இந்தியா பைலட்கள் இயக்க போவதில்லை. அதற்கு பதிலாக ஐஏஎஃப் எனப்படும் இந்திய விமான படையை (IAF- Indian Air Force) சேர்ந்த பைலட்கள்தான் போயிங் 777 விமானங்களை இயக்கவுள்ளனர்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

எனினும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் மூலம்தான் இந்த விமானங்கள் பராமரிக்கப்படும். புதிய போயிங் 777 விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 4-6 பைலட்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று விட்டனர். வரும் மாதங்களில் இன்னும் கூடுதலான பைலட்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலையில் இருந்து 2 புதிய போயிங் 777 விமானங்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்கு வரும். ஐஏஎஃப் பைலட்களால் மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் இயக்கப்படும்'' என்றார். இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் பயன்படுத்தப்படும்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோருக்காக வாங்கப்படவுள்ள 2 புதிய விமானங்களில், Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் (Missile Defence Systems) இடம்பெற்றிருக்கும்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்தும் போயிங் 747-200பி (Boeing 747-200B) விமானத்திற்கு இணையான பாதுகாப்பை இந்திய பிரதமர் மோடியின் போயிங் 777 விமானமும் பெறும். மேலும் இந்தியா வாங்கவுள்ள இரண்டு புதிய போயிங் 777 விமானங்களில் எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகளும் (SPS - Self-Protection Suites) இடம்பெற்றிருக்கும்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த 2 பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதன் மொத்த மதிப்பு 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானங்கள் அத்தியாவசியமான ஒன்றுதான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prime Minister Narendra Modi's New Official Aircraft Boeing 777 To Have Missile Defence System. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X