ரொம்ப நாள் டவுட்! நடிகர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?..

தனிநபர் பயன்பாட்டு விமானங்களைக் கொண்டு சர்வதேச அளவில் பயணிக்க முடியுமா, என்கிற கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் காணலாம்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் தங்களின் சௌகரியத்திற்கு ஏற்ப தனிநபர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானங்களைக் கொண்டு அவர்களால் உள்நாட்டில் பயணிக்க முடியும் என்பது தெரியும். ஆனால் அவர்களால் சர்வதேச அளவில், அதாவது, வெளிநாடுகளுக்கும் பயணிக்க முடியுமா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கான விளக்கத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

சர்வதேச அளவில் விமானங்களால் பயணிக்க முடியுமா?

சந்தேகமே வேண்டாம் தனிநபர் விமானங்களால் உலகளவில் பயணிக்க முடியும். இதற்கென பிரிவு 91 மற்றும் பிரிவு 135 உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிவு 91 - பதிவு செய்யப்பட்ட தனி நபர் விமானங்கள் மட்டுமே பறக்க அனுமதி வழங்கப்படுகின்றன. உதாரணமாக ஓர் பைலட் தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது வேறு ஏதேனும் பயணிகளுடன் தாரளமாக பயணிக்க முடியும் என்பதை இந்த விதி உறுதிப்படுத்துகின்றது.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

பிரிவு 135 - விமான ஆபரேட்டர்களை திட்டமிடப்படாத வணிக ரீதியான சேவைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குகின்றது. ஆகையால், விமானங்களாலும் குறிப்பிட்ட சான்றை பெற்று திட்டமிடப்படாத பயணங்களை மேற்கொள்ள முடியும் என தெரிகின்றது. ஆனால், சில கட்டுப்பாடுகள் இதற்கு உண்டு. அதேநேரத்தில் பிரிவு 91இன் கீழ் பறக்கும் தனிநபர் விமானத்தைக் காட்டிலும் இதற்கு விதிகள் சற்று கடுமையானதாக உருவாக்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

பாஸ்போர்ட் மற்றும் விசா நிலவரம் எப்படி?

விமான சேவை நிறுவனங்களின்கீழ் இயக்கப்படும் விமானமாக இருந்தாலும் சரி, உங்களின் தனிப்பட்ட சொந்த விமானமாக இருந்தாலும் சரி, வேறொரு நாட்டிற்குள் நுழைய வேண்டும் எனில் சட்டப்பூர்வ அனுமதி வேண்டும். அதாவது, பாஸ்டபோர்ட் மற்றும் விசா ஆகியவை கட்டாயம் தேவை.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

கஸ்டம்ஸ்:

தனிநபர் விமானத்தில் பயணித்த காரணத்தினால் கஸ்டம்ஸ் விதிகள் எல்லாம் பொருந்தாது என நினைத்துக் கொள்ள வேண்டாம். என்னதான் சொகுசான, விலையுயர்ந்த தனி நபர் விமானத்தில் பயணித்திருந்தாலும், விமான நிலையத்திற்குள் நுழையும்போது பிற பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அனைத்து விதிகளும் அவர்களுக்கும் பொருந்தும்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் சில நேரங்களில் பிரைவேட் ஜெட்டில் பயணிப்பவர்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிக கண்ணோட்டத்துடன் பார்வையிடவும் வாய்ப்புகள் உண்டு. அதேநேரத்தில், பிரைவேட் ஜெட் பயன்பாட்டாளர்கள் தங்களுடைய லக்கேஜ் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அவை நம்முடனேயே இருக்கும் என்பதால் உடனடியாக எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் பணிகளை முடித்துக் கொண்டு வெளியேறலாம்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

செல்லப் பிராணிகளுடன் பயணிக்கலாம்:

பொது போக்குவரத்து விமானங்களில் பயணிக்கும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எந்தவொரு பயணிக்கும் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்கென்றே அவ்விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தனி நபர் விமானத்தில் பயணிக்கும்போது இந்த விதிகள் எல்லாம் பொருந்தாது. ஆகையால், செல்லப் பிராணிகளையும் இந்த பயணத்தில் தாராளமாக உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

அதேவேலையில், சர்வதேச பயணம் என்பதால் செல்லப் பிராணிகளுக்கான ஆவணங்கள் கட்டாயம். தடுப்பூசிக்கான ஆதாரம், செல்லப் பிராணிகளுக்கான பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவை இருந்தால் உங்களுடன் நாய், பூனை போன்றவற்றை அழைத்து செல்ல முடியும்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

பிரைவேட் ஜெட்டில் பயணிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:

தனிநபர் பயன்பாட்டு விமானங்களில் சொகுசு வசதிகளுக்கு சற்றும் குறைச்சல் இருக்காது. குறிப்பாக, பயணிகள் விமானத்தில் பிசினஸ் கிளாஸில் பயணிப்பதைக் காட்டிலும் அதிக லக்சூரி பயணத்தை பிரைவேட் ஜெட்டில் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கேற்ப அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கேபினை அந்த விமானங்கள் கொண்டிருக்கும். சிரிய பார்ட்டி வைக்கும் அளவிற்கு வசதிகள் தனிநபர் விமானங்களில் வழங்கப்பட்டிருக்கும்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

நேரத்தை பன்மடங்கு மிச்சப்படுத்தவும் முடியும். பொதுவாக விமானத்தில் நாம் பயணிக்க வேண்டும் எனில் விமான நிலையத்திற்கு பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்ல வேண்டும். உள்ளூர் விமான பயணத்தை மேற்கொள்ள 2 மணி நேரங்களும், வெளிநாட்டு பயணங்களுக்கு 3 மணி நேரங்களுக்கு முன்னதாகவும் விமான நிலையத்தைச் சென்றடைய வேண்டும்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

செக்-இன் போன்ற பிற பாதுகாப்பு செயல்களுக்காக முன்கூட்டியே பயணிகள் வரவழைக்கப்படுகின்றனர். ஆனால், தனிப்பட்ட விமானத்தில் பயணிக்கும்போது இந்தளவு முன்கூட்டியே வரவேண்டியதில்லை. ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வந்தாலே போதுமானது. உங்களின் அனைத்து ஆவணங்களும் விரைவில் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக கிளம்ப அனுமதி வழங்கப்படும்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

இதேபோல் லக்கேஜ் வரம்புகளும் இருக்காது. 2 அல்லது 10 சூட்கேஸ்களை கூட தனி நபர் விமானங்களில் எடுத்துச் செல்ல முடியும். லக்கேஜ் எடுத்துச் செல்ல வரம்புகள் இருக்காது. அதேநேரத்தில், ஓர் விமான சேவை நிறுவனத்தின்கீழ் இயங்கும் விமானத்தில் பயணிக்கும்போது லக்கேஜ் வரம்புகள் கட்டாயம் கடைபிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அளவு மட்டுமே லக்கேஜ்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பதுகுறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

இந்தியாவில் நடிகர்கள் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் தனி நபர் விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் தெலுங்கு நடிகர்களான ராம் சரண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், சிரஞ்ஜீவி மற்றும் நகர்ஜூனா உள்ளிட்டோர் அடங்குவர். இதேபோல் பாலிவுட் திரையுலகிலும் அதிகளவில் திரை பிரபலங்கள் சொகுசு தனி நபர் விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரொம்ப நாள் சந்தேகம்! நடிகர்கள், தொழிலதிபர்கள் பிரைவேட் ஜெட்களை வச்சிருக்காங்களே அவங்களால சர்வதேச அளவில் பறக்க முடியுமா?

பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ஷாருக் கான், சைஃப் அலிகான் மற்றும் சல்மான் கான் என ஏகப்பட்டோர் பிரைவேட் ஜெட் உரிமையாளர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Private plane users can fly internationally here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X