பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

புல்வாமா தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததால், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு நேரம் கொடுக்காமல், பிரதமர் மோடி சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, நேற்று மாலை 3 மணியளவில் (பிப்., 14ம் தேதி), மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் (சிஆர்பிஎப், Central Reserve Police Force) பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

மொத்தம் 2,500 வீரர்கள், 78 பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். பேருந்துகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. புல்வாமா (Pulwama) மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பேருந்து மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

சுமார் 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை, தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் ஓட்டி வந்து, சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த ஒரு பேருந்து மீது திடீரென மோதினான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலால், அந்த பேருந்து சுக்கு நூறாக வெடித்து சிதறியது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த 45 சிஆர்பிஎப் வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது (Jaish-e-Mohammed) என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

எனவே இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவித்து, இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாகுபாடுகளை மறந்து அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இந்த சூழலில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

கூட்டத்திற்கு பின் வெளியே வந்த அருண் ஜெட்லி, ''வர்த்தக ரீதியில் பாகிஸ்தானுக்கு இனி இந்தியா எந்த ஒரு உதவியையும் செய்யாது'' என அதிரடியாக அறிவித்தார். அத்துடன் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறினார்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ''தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் மற்றும் ஆதரவு கொடுத்த அனைவரும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என இந்த தேசத்திற்கு உறுதி அளிக்கிறேன்'' என சூளுரைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

அத்துடன் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி அதிரடியாக குறிப்பிட்டார். அதே சமயம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரையும் பழி வாங்குவோம் என சிஆர்பிஎப் அமைப்பும் சூளுரைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகள் இடையே போர் மூள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல. அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொண்டேதான் இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதமும் கூட, சிஆர்பிஎப் வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

ஆனால் அப்போது சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்த வாகனம் புல்லட் புரூட் (Bulletproof) வசதி கொண்டதாக இருந்தது. இதனால் சிஆர்பிஎப் வீரர்கள் அனைவரும் சிறு காயம் கூட இன்றி உயிர் தப்பி விட்டனர்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

மத்திய பாராமிலிட்டரி படைகளுக்கு (Central Paramilitary Forces) புல்லட் புரூப் வசதி கொண்ட வாகனங்களை கொள்முதல் செய்யும் பணிகளை, கடந்தாண்டு மார்ச் மாதமே மத்திய அரசு தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

சிஆர்பிஎப், பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படை (Border Security Force), ஐடிபிபி எனப்படும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை (Indo-Tibetan Border Police) உள்ளிட்ட படைகளிடம் குறைவான எண்ணிக்கையில்தான் புல்லட் புரூப் வாகனங்கள் இருந்து வந்தன.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

எனவே பாதுகாப்பு படை வீரர்களின் நலனிற்காக 141 புல்லட் புரூப் வாகனங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இவை எம்பிவிபி எனப்படும் மீடியம் புல்லட் புரூப் வெய்கில் வகையை (Medium Bulletproof Vehicles-MBPV) சேர்ந்தவை.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இந்த 141 புல்லட் புரூப் வாகனங்களில் 100 வாகனங்கள் சிஆர்பிஎப் அமைப்பிற்கானவை. எஞ்சிய 41 புல்லட் புரூப் வாகனங்கள் இதர பாதுகாப்பு அமைப்புகளுக்கானவை. தீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்தும் ஏகே சீரீஸ் ரக ஆயுதங்களால் கூட (AK series Weapons) இந்த வாகனங்களை எதுவும் செய்ய முடியாது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இவ்வாறு இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் பணிகளை மத்திய அரசு இடைவிடாமல் செய்து கொண்டேதான் உள்ளது. அப்படி இருந்தும் கூட நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

எனவே இந்திய ராணுவத்திற்கு முன்பை காட்டிலும் அசூர பலம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக கூடுதல் புல்லட் புரூப் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இதுதவிர ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (ISRO-Indian Space Research Organisation) உதவியையும் மத்திய அரசு நாடியுள்ளது. தீவிரவாதிகள் எல்லையை கடந்து வந்துதான் இத்தகைய தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

எனவே எல்லைகளை கண்காணிக்கவும், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் உதவும் வகையிலான சிறப்பு செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவும்படி இஸ்ரோ அமைப்பு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளை இஸ்ரோ வெகு விரைவில் விண்ணில் ஏவ உள்ளது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

இந்த செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு விட்டால், அதன் கண்காணிப்பை மீறி இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளால் நுழையவே முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது அதற்கான பணிகளும் உடனடியாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதால், பாகிஸ்தான் கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் என்பதே இந்தியர்கள் அனைவரின் ஒரே எதிர்பார்ப்பு.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

ஆனால் தற்போது தீவிரவாதிகள் நடத்தியிருப்பது வெடிகுண்டு தாக்குதல். இதுதவிர கண்ணி வெடிகள் மூலமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். எனவே வெடிகுண்டு மற்றும் கண்ணி வெடி தாக்குதல்களில் இருந்தும் ராணுவ வீரர்களை காக்கும் வகையிலான வாகனங்கள் தேவை.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

குறிப்பாக மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த சட்டீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில், மிகவும் சக்தி வாய்ந்த கண்ணி வெடிகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. இவ்வாறான பகுதிகளில் எம்பிவி எனப்படும் மைன்-புரொடெக்டட் வாகனங்கள் (Mine-Protected Vehicles) பயன்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

கண்ணி வெடி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு எதிராக பணியாற்றும் திறன் வாய்ந்த இவ்வகை வாகனங்கள் ஆன்டி-லேண்ட்மைன் வெய்கில்ஸ் (Anti-landmine Vehicles) எனவும் அழைக்கப்படுகின்றன.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

ஆனால் இந்திய பாதுகாப்பு படையிடம் தற்போது உள்ள இவ்வகை வாகனங்கள் சில சமயங்களில் தோல்வி அடைந்து விடுகின்றன. இவற்றுக்கு 100-1,200 கிராம் எடையுள்ள வெடி பொருட்களை தாங்கும் சக்தி மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

ஆனால் சர்வ சாதாரணமாக 20 கிலோவிற்கும் மேற்பட்ட வெடி பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அதே சமயம் இந்தியாவிடம் தற்போது உள்ள ஆன்டி-லேண்ட்மைன் வெய்கில்ஸ் வழக்கமான கண்ணி வெடிகளுக்கு எதிராக மட்டுமே செயலாற்றுகின்றன.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ரகசியமாக தயாராகும் இந்திய ராணுவம்... மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்

அதிநவீன கண்ணி வெடிகளுக்கு எதிராக செயலாற்றும் திறன் இவற்றுக்கு இல்லை என கூறப்படுகிறது. அத்துடன் இந்தியாவிடம் இவ்வகை வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளன. எனவே அதிநவீன ஆன்டி-லேண்ட்மைன் வெய்கில்ஸின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அவசியமான ஒன்று.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pulwama Terrorist Attack: Should CRPF Jawans Get Bullet Proof Vehicles? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X