இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயரை உருவாக்கியுள்ளது சியட் நிறுவனம். இந்த டயர் எவ்வளவு கூர்மையாக பொருட்கள் குத்தினாலும் பஞ்சர் ஆகாமல் உழைக்கும் என கூறப்பட்டுள்ளது.

By Balasubramanian

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயரை உருவாக்கியுள்ளது சியட் நிறுவனம். இந்த டயர் எவ்வளவு கூர்மையாக பொருட்கள் குத்தினாலும் பஞ்சர் ஆகாமல் உழைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

இந்தியாவில் உள்ள ரோடுகளில் வாகனம் ஓட்டுவது சற்று சிரமமான விஷயம் தான். கரடு முரடான பாதை சீரமைக்காத ரோடுகள், என வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியை தரக்கூடிய விஷயம் எல்லாம் இந்திய ரோடுகளில் அதிகம் காணப்படும் சமீபகாலமாக இது மாற்றம் பெற்று வந்தாலும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

இந்தியாவில் ஓடும் வாகனங்களில் டயர்கள் வாகனத்திற்கு கிரிப் கொடுப்பது மட்டுமல்லாமல் ரோடுகளில் உள்ள சிறு சிறுகள் கூர்மையான பொருட்கள், பள்ள மேடுகள் என பல தடைகளையும் இது தகர்த்து எரிய வேண்டும். இவ்வற்றிற்கு எல்லாம் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியாத டயர்கள் ஏதோ ஒரு நிலையில் பஞ்சராகி விடுகிறது.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

இந்திய ரோடுகளில் வாகனங்கள் பஞ்சராவது மிக சாதாரண விஷயம் தான். வாகனங்கள் பஞ்சரானால் வாகன ஓட்டிகளுக்கு அதை விட பெரிய துன்பம் எதுவும் இல்லை. வாகனங்களில் செல்லவும் முடியாமல், திரும்ப வரவும் முடியமல் பஞ்சர் செய்யும் இடத்தை தேடி செல்ல வேண்டிய மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியது உள்ளது.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

இதற்கு பல டயர் நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் இந்தியாவில் இந்த பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் சியட் டயர் நிறுவனம் தற்போது இந்தியாவில் முதன் முறையாக பஞ்சர் ஆகாத டயர்களை தயாரித்துள்ளது. இந்த டயருக்கு ஜூம் ரேடு எக்ஸ் 1 என்று பெயர் வைத்துள்ளது.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

இந்த டயர் 200-400 சிசிக்கு உட்பட்ட பைக்குகளுக்கு மட்டுமே பொருத்தமுடியும். இந்த டயர் பொருத்தப்பட்ட வாகனங்கள் ரோட்டில் எந்த பொருள் டயரில் குத்தினாலும் டயர் பஞ்சர் ஆகாது. இதற்கு சான்றாக அந்நிறுவனம் டேமே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.

இந்த வீடியோவில் டயர் பொருத்தப்பட்ட பகுதிக்கு மேல பெரிய ஆணி உள்ளது. கீழே டயர் நீரில் முழ்கும் படி இருக்கிறது. முதலில் சுழற்றியவர் பின்னர். அந்த டயரின் ஒரு பகுதியில் மேலே உள்ள ஆணியால் ஆணி டயரில் முழுமையாக இறங்கும் படி குத்தி பின் ஆணியை வெளியில் எடுக்கிறார்.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

பின்னர் டயரை மீண்டும் சுழ்ற்றி டயரில் ஆணி குத்திய பகுதி தண்ணீர் இருக்கும் பகுதிக்கு செல்லுமாறு வைக்கிறார் டயர் பஞ்சர் ஆனதற்கான எந்த அடையாளமும் அதில் இல்லை.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

சியட் ஜூம் ரேட் எக்ஸ்1 என்ற இந்த டயர் பைக்கில் நல்ல கண்ட்ரோல் கிடைக்கும் படியும், அதி வேகத்தில் செல்லும் போது நல்ல கிரிப் கிடைக்கும் படியும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த டயரின் சைடு பகுதிகளில் நல்ல கிரப் இருப்பதனால் பைக் ரைடின் போது சிறந்த கண்ட்ரோலையும் , வசதியையும் வழங்குகிறது.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

தற்போது இந்த டயர்கள் 13/70R17, 110/70R17, 150/60R17 என்ற சைஸ்களில் கிடைக்கிறது. இந்த சைஸ் டயர்கள் கே.டி.எம். டியூக், பஜாஜ் டோமினார், யமஹா ஆர்15 ஆகிய பைக்களில் உள்ளது. இந்த பைக்களில் இந்த டயரை இனி பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் முதல் பஞ்சர் ஆகாத டயர் அறிமுகம்

இந்த டயர் அதிக பட்சமாக 210 கி.மீ. வேகத்தில் செல்லும் வரை உறுதியாக தாங்ககூடியது. மேலும் 200-400 சிசி பைக்குகளில் அதிகபட்ச வேகம் 200 கி.மீ. தான் என்பால் அந்த பைக்குகளில் வேகம் குறித்து கவலைப்பட தேவையில்லை. இந்த டயரின் விலை குறித்த விபரத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை

Most Read Articles
மேலும்... #டயர் #tyre
English summary
India’s first puncture safe motorcycle tyre launched. Read in Tamil
Story first published: Monday, May 14, 2018, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X