Just In
- 25 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செலவு கம்மி! அரசு பஸ்களுக்கு புதிய எரிபொருள்! எப்படி தயார் பண்றாங்கன்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
வரும் அக்டோபர் 20ம் தேதியில் இருந்து, புதிய வகையான எரிபொருள் மூலம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில், காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிஎன்ஜி (CNG- Compressed Natural Gas) போன்ற, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் அதிகரிக்கப்படுகிறது.

குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளை, சிஎன்ஜி மூலம் இயக்குவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், மஹாராஷ்டிர மாநிலம் புனே முதன்மையான இடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் தற்போது புனே ஒரு படி மேலே போய், வெகு விரைவில் பயோ-சிஎன்ஜி (Bio-CNG) மூலம் பேருந்துகளை இயக்கவுள்ளது.

ஆம், வரும் அக்டோபர் 20ம் தேதி முதல், புனேவில் 20 பேருந்துகள் பயோ-சிஎன்ஜி மூலம் இயக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உணவகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு கழிவுகளில் இருந்து இந்த எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

புனேவில் பேருந்துகளை இயக்கி வரும் பிஎம்பிஎம்எல் (PMPML - Pune Mahanagar Parivahan Mahamandal Limited) நிறுவனத்தின் 20 பேருந்துகள்தான் பயோ-சிஎன்ஜி மூலம் இயக்கப்படவுள்ளன. இது புனேவை சேர்ந்த போக்குவரத்து கழகம் ஆகும். சிஎன்ஜி என்பதும், பயோ-சிஎன்ஜி என்பதும் வெவ்வேறானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை சிபிஜி (Compressed Bio-Gas) என்றும் அழைக்கின்றனர்.

பயோ-சிஎன்ஜி மூலமாக பேருந்துகளை இயக்குவதற்கான சோதனைகள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும், இந்த எரிபொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் சப்ளை செய்ய இருப்பதாகவும், பிஎம்பிஎம்எல் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''புனேவின் தலேகான் பகுதியில், பயோ-சிஎன்ஜி எரிபொருளை நிரப்பும் நிலையம் உள்ளது.

எனவே பிஎம்பிஎம்எல் நிறுவனத்தின் போசரி டெப்போவில் இருந்து தலேகான் நோக்கி செல்லும் பேருந்துகள் இந்த எரிபொருளில் இயக்கப்படும். அதே சமயம் நிகிடி பகுதியில் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையம் இன்னும் 3 மாதங்களுக்கு உள்ளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

பயோ-சிஎன்ஜி மூலம் பேருந்துகளை இயக்குவதற்கான சோதனைகள் 2 முறை நடத்தப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்திற்குள், மொத்தம் 100 பேருந்துகள் இந்த மாற்று எரிபொருளில் இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பேருந்துகள் வழக்கமான சிஎன்ஜி-க்கு பதிலாக பயோ சிஎன்ஜி மூலம் இயங்கும்.

சிஎன்ஜி மற்றும் பயோ-சிஎன்ஜி ஆகிய 2 எரிபொருட்களின் செலவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்'' என்றனர். நாடு முழுக்க தற்போது சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய வாகனங்கள் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிஎன்ஜி மூலமாக இயங்க கூடிய கார்கள் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை போன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. அவை சுற்றுச்சூழலுக்கு நட்பானவை. அத்துடன் பெட்ரோல், டீசல் மூலம் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட, சிஎன்ஜி மூலம் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவும் கூட மிகவும் குறைவுதான்.
Note: Images used are for representational purpose only.