எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஒரு வழியாக ஓட்டுனர் உரிமத்தை பெற்றுவிட்டோம் என மகிழ்ச்சியடைந்தவருக்கு மிக பெரிய ஷாக்கான விஷயம் ஒன்று மஹாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவு செய்து பயிற்சி ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.

எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்த நிலையில் புனேவை சேர்ந்த ஆசிஷ் செடே என்பவர், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் அன்று காலை 11 மணியளவில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கமான பரிவஹான் சேவாவில் தனது ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை ஓட்டுநர் உரிமத்துடன் இணைத்திருக்கிறார்.

எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மேலும் இதற்கான கட்டணமாக ரூ.365ஐயும் செலுத்தி இருக்கிறார். பின்னர் பயிற்சி மையத்திற்கு சென்றதில் 15க்கு 9 மதிப்பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகே ஆசிஷ் செடேவிற்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஏனெனில் லைசன்ஸ் கையில் கிடைத்தபோது அதில் அவருடைய பெயர் இல்லை. அவரது படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்துள்ளது. இதனை சற்று பார்க்காத அந்த புனேவாசி பெரும் அதிர்ச்சியடைந்தார்.

எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இதனை அடுத்து உடனடியாக புனே ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புக்கொண்டு விசாரித்த செடே இதுகுறித்து பேசுகையில், இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதுதான். ஆனால் என்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு இருந்ததால் அதற்காக நான் சற்று அலைய வேண்டி இருந்தது என தெரிவித்துள்ளார்.

எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இதுகுறித்து ஆர்.டி.ஓ அலுவலர் கூறுகையில், இணையதளம் இயங்குவதில் தொழிற்நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு விவரங்களை ஓட்டுனர் உரிமத்துடன் இணைக்கும்போது ஏதேனும் தவறு நடத்திருக்கலாம்.

எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மொபைல் போன் இணைத்திருக்கும் ஆதார் கார்டுகளை கொண்டவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். எப்படியிருந்தாலும் இந்த நிகழ்வை மட்டும் ஆசிஷ் செடே மறந்திருக்க மாட்டார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pune Man License Online Confused, Because Got Female Photo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X