ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் உருவாக்கிய ஒரு தயாரிப்பிற்கு தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் குவிந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து விட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களில் தாணி ராம் சாகு என்பவரும் ஒருவர்.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூர் பகுதியை சேர்ந்தவரான தாணி ராம் சாகுவிற்கு தற்போது 40 வயதாகிறது. இவர் கார்பெண்டராக உள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக வேலையை இழந்ததால், தாணி ராம் சாகுவின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் அதற்காக எல்லாம் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதுடன் சேர்த்து, உடல் நலனை மேம்படுத்த வேண்டும், ஏதாவது ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என தாணி ராம் சாகு தீர்மானம் செய்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக தனக்காக தானே ஒரு சைக்கிளை உருவாக்கி கொள்ள வேண்டும் என தாணி ராம் சாகு முடிவெடுத்தார்.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

இது குழந்தை பருவத்தில் இருந்தே தாணி ராம் சாகுவிற்கு இருந்து வரும் ஆசையாகும். ஆனால் தனக்காக ஒரு சைக்கிளை வாங்கி கொள்வதற்கு தாணி ராம் சாகுவின் பொருளாதார சூழ்நிலைகள் அனுமதிக்கவில்லை. அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஊரடங்கில் வீட்டில் இருந்ததால் இந்த விஷயத்தை தன் கையில் எடுத்து கொண்டு தானே சைக்கிளை உருவாக்குவது என முடிவு செய்தார்.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

ஆனால் சைக்கிள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என தாணி ராம் சாகு நினைத்தார். இதன்படி தற்போது அவர் உருவாக்கியுள்ள சைக்கிள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களின் கவனத்தையும் தாணி ராம் சாகு உருவாக்கியுள்ள சைக்கிள் ஈர்த்துள்ளது.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

அந்த சைக்கிள் மரத்தால் உருவாக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது மிக வேகமாக பரவி வருகின்றன. அதனை பார்க்கும் பலருக்கும் அந்த சைக்கிளை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்து வருகிறது. இதன் உச்சமாக கனடா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த சைக்கிளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருந்த ஒருவர், தனது ஆர்வம் மற்றும் முயற்சியால் இன்று புகழ்பெற்ற ஒரு நபராக உருவெடுத்திருப்பது நல்ல செய்திதான். மரத்தால் சைக்கிளை உருவாக்கியுள்ள வித்தியாசமான யோசனைக்காக, தாணி ராம் சாகுவிற்கு தற்போது இந்தியாவில் உள்ள முன்னணி சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

கார் அல்லது டூவீலர் என குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு வாகனமாவது இல்லாத வீடுகளே இல்லை என்னும் நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டுள்ளது. மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வது நமது நேரத்தை மிச்சப்படுத்தினாலும், இன்று நம்முடைய உடல் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு அது முக்கியமான காரணமாக உள்ளது.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

இதனால் சைக்கிள் ஓட்டுவதில் பலர் தற்போது ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஊரடங்கால் வீடுகளில் முடங்கியிருக்கும் பலரது கவனம் தற்போது சைக்கிள் மீது திரும்ப தொடங்கியுள்ளது. ஊரடங்கும், கொரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கைகளும் நம்மை வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி போட்டுள்ளன. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காங்களுக்கு நடைபயிற்சி செல்வதும் இதனால் தடைபட்டுள்ளது.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

இருந்தாலும் உடல்நலன் தொடர்பான திறன்களை மேம்படுத்தி கொள்வதில் இந்த ஊரடங்கை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுடைய கவனம் சைக்கிள் ஓட்டுவதில் திரும்பியுள்ளது. இதில், தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கூகுள் மூலம் பலர் நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கூகுள் தேடுதல் தரவுகள் இதனை உறுதி செய்கின்றன.

ஊரடங்கால் வேலையிழந்த இந்தியர் இப்போ உலக பேமஸ்... அவர் உருவாக்கிய தயாரிப்பு அப்படி... ஆர்டர் குவியுது

கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பலருடன் இணைந்து பயிற்சி செய்வதை காட்டிலும் முக கவசம் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் வெளிவந்துள்ள தாணி ராம் சாகுவின் மர சைக்கிள் நம் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

இந்த மர சைக்கிளின் உற்பத்தி பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டால் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவிற்கு அதன் தோற்றம் பார்த்த உடனேயே ஒருவரை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து பாபுசாஹி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Punjab Carpenter Creates A Wood Bicycle - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X