3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்.. பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு!

3 மாதங்கள் இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசின் கொள்கையை காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப் அரசு அம்மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆளுகைச் செய்துக் கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கும் இக்கட்சி பாஜக அரசு கொண்டு வரும் பெரும்பாலான மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

அந்தவகையில், அண்மையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.

மேலும், அக்கட்சி ஆளுகைச் செய்துக் கொண்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் அத்திட்டத்தை அமல்படுத்தாமல் தொடர் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தது.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

இத்திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதற்கு பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத மாற்றமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது பெரும்பாலும் சாமாணிய மக்களையே பாதிக்கக்கூடும் என்பதனால் காங்கிரஸ் மட்டுமின்றி ஏனைய எதிர்கட்சியினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

இந்நிலையில், பாஜக அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை மூன்று மாதங்களுக்கு பின்னர் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்துவதாக பஞ்சாப் அரசு நேற்று (வியாழக்கிழமை) அறிவிப்பு வெளியிட்டது.

முன்னதாக, திருத்தப்பட்ட மத்திய மோட்டார் வாகன சட்டத்தை ஓரிரு நாட்களில் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்த இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ரசியா சுல்தானா கடந்த புதன்கிழமை அன்று அறிவித்திருந்தார்.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

அப்போது, "திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு சில மாற்றங்களை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போக்குவரத்து விதிமீறல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்காக, கடுமையான அபராதங்களை சற்றும் குறைக்காமல் அப்படியே அமல்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டு வருவதாக" அவர் கூறியுள்ளார்.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிமீறல்களுக்கான அபராதம் முன்பைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்தியாவைப் போக்குவரத்து விதிமீறல்களே இல்லா நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான்.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

இருப்பினும், இந்த சட்டத்தின்மூலம் பல சாமாணியர்கள் கடுமையாக பாதிப்படைவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆகையால், ஒரு சில மாநில அரசுகள் மட்டும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் அவற்றை கணிசமாக குறைத்து அமல்படுத்தி வருகின்றன.

இச்சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்... பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு..!

இது நடைமுறைக்கு வந்ததில் இருந்து வாகன ஓட்டிகள் மத்தியில் மிகப்பெரிய கலோபரமான சூழலே காணப்படுகின்றது. இதற்கு அண்மைக் காலங்களாக வாகனம் சார்ந்து வெளிவந்த செய்திகளே முக்கிய சான்றாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Punjab Implements New Motor Vehicle Act. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X