வெறும் ரூ.1,499 விலையில் குயிக்கர்ஸ்கேனர்... காருக்கான ஸ்மார்ட் சாதனம்!

By Saravana Rajan

இது தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உச்சகாலம். ஆட்டோமொபைல் துறையிலும் தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை கண்டு வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், கார்களுக்கான புதிய சாதனம் ஒன்றை குயிக்கர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

குயிக்கர்ஸ்கேனர் என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தின் பயன்பாடுகளை எழுத எழுத கை கடுக்க வைக்கிறது. ஆம், கைக்கு எட்டும் விலையில், இந்த சாதனத்தின் மூலமாக கார் உரிமையாளர்கள் பெறக்கூடிய வசதிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

குயிக்கர்ஸ்கேனர் எனப்படும் இந்த கையடக்க சாதனம் பெறக்கூடிய தகவல்களை, மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக எந்த இடத்திலிருந்தும் பெறலாம். அதாவது, இது பன்முக பயன்களை தரும் கையடக்க சாதனமாக இருக்கிறது.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

இந்த சாதனத்தின் மூலமாக கார் எங்கு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை கூகுள் மேப்பின் அடிப்படையில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். எனவே, தனி ஜிபிஎஸ் டிராக்கர் கருவி தேவையில்லை.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

காரை வேறு வாகனத்தின் மூலமாக டோ செய்து எடுத்துச் சென்றாலும், வேறு சாவியை போட்டு காரை ஸ்டார்ட் செய்ய முயன்றாலும் இந்த சாதனம் மொபைல்போன் மூலமாக உரிமையாளரை எச்சரிக்கை செய்யும்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

அடுத்து எஞ்சின் இயக்கம் குறித்த தகவல்களை இந்த கருவி துல்லியமாக தருகிறதாம். இப்போது வரும் எல்லா கார்களிலுமே சராசரி மைலேஜ், தற்போது கிடைக்கும் மைலேஜ், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்ற தகவல்களை பெற முடியும். ஆனால், இந்த கருவி மூலமாக துல்லியமான கூடுதல் தகவல்களை பெற முடியும்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

அதன்படி, ஒரு டிரிப்பின்போது கார் எவ்வளவு நேரம் ஐட்லிங்கில் நின்றிருக்கிறது. ஒவ்வொரு டிரிப்பின் சராசரி மைலேஜ் எவ்வளவு, எத்தனை அதிவேகத்தில் இயக்கி இருக்கிறீர்கள், எத்தனை முறை காரை வேகமாக ஆக்சிலரேட்டர் கொடுத்து இயக்கினீர்கள். எத்தனை முறை சடன் பிரேக் போட்டீர்கள் என உங்கள் டிரைவிங் முறையையும் புட்டு புட்டு வைக்கும்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

இதன்மூலமாக, உங்களது டிரைவிங் முறையை மேம்படுத்தி, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். ஒரு மாதத்தில் உங்கள் கார் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது, அதன் சராசரி மைலேஜ், சராசரி வேகம் போன்ற எண்ணிலடங்கா தகவல்களையும், வசதிகளையும் இந்த சாதனம் தரும்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

இதுதவிர, எஞ்சின் இயக்கம், எஞ்சினில் ஏற்படும் பிரச்னைகள், பேட்டரியின் செயல்திறன், கூலண்ட்டின் வெப்பநிலை, மாசு உமிழ்வு அளவு உள்ளிட்ட பல தகவல்களையும், எச்சரிக்கையையும் உங்கள் கையிலிருக்கும் மொபைல்போனிற்கு தந்துவிடும்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

இந்த சாதனம் தனிநபர் மற்றும் ஸ்கூல் வேன், டாக்சி உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும். இதன்மூலமாக, வாகனங்களின் பயணத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். காரை இரவல் கொடுத்தாலும் அல்லது உங்களது குழந்தையின் பள்ளி வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமானாலும், இதனை வைத்து தெரிந்துகொண்டு சற்று ஆசுவாசமாக இருக்கலாம்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

டிரைவர் போட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இது சாதகமான சாதனம். டிரைவர் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என்ற தகவல்களை மிக எளிதாக உட்கார்ந்த இடத்தில் உங்களது மொபைல்போன் மூலமாக தெரிந்துகொண்டு விடலாம்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

இந்த சாதனத்தை உங்கள் காரின் OBD II போர்ட்டில் பொருத்திவிட வேண்டும். பெரும்பாலான கார்களில் டேஷ்போர்டின் கீழ் பகுதியில் இந்த போர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த சாதனத்திற்கு மொபைல்போன் சிம் கார்டு ஒன்றும் தேவைப்படும்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

இன்டர்நெட் வசதி ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டு மூலமாக, சாதனத்திலிருந்து பெறப்படும் தகவல்கள் குயிக்கர் நிறுவனத்தின் சர்வர் கம்ப்யூட்டரில் பதிவாகும். இந்த சாதனத்திலேயே ஜிபிஎஸ் ரிசீவர் உள்ளது. கார் உரிமையாளர் விரும்பும் நேரத்தில் இந்த தகவல்களை மொபைல்போன் மூலமாக எந்த நேரத்திலும் பெற முடியும்.

வெறும் ரூ.1,499 விலையில் கார்களுக்கான குயிக்கர்ஸ்கேனர் கருவி!

ஒருங்கிணைந்த வசதிகளை தரும் இந்த பன்முக பயன்பாட்டு சாதனத்திற்கு விலையாக ரூ.1,499 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

நொடியில் கார் இன்ஸ்யூரன்ஸ்... !!
  • நொடியில் கார் இன்ஸ்யூரன்ஸ்... சட்டுனு க்ளிக் பண்ணுங்க !!
Most Read Articles
English summary
Read in Tamil: QuikrScanner: Smart Device For Cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X