Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
ரஃபோல் போர் விமானங்கள் முதல் முறையாக காட்சிக்குள்ளாக இருக்கின்றன. எப்போது என்பது பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகக் கட்டுப்பாடுகளுடன் இந்த வருடம் குடியரசு தினம் அனுசரிக்கப்பட இருக்கின்றது. எந்த வருடத்திலும் இல்லாத வகையில் நடப்பாண்டில் மிக அதிக கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட இருக்கின்றன. குறிப்பாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துகின்ற வகையிலான கட்டுப்பாடுகள் மிக தீவிரமாக காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு அதிகாரிகள் தடை விதித்திருக்கின்றனர். மேலும், குறைந்தளவில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களே இருப்பதால் இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் இருக்கும் அதிகாரிகள் மறு பக்கம் குடியரசு தினத்தை இதுவரை இல்லாத வகையில் சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நடப்பாண்டில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் புதிதாக விமான பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களைக் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபோல் போர் விமானங்களை முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வாங்கியது. இதில், முதல் ஐந்து போர் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்திறங்கின. இவற்றையே வரும் ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றது.

நிகழ்வின்போது சில சாகச செயல்பாடுகளை இந்த விமானங்கள் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அதன் சிறப்பு திறன்களான செங்குத்தாக வானில் ஏறுவது, அதிக வேகத்தில் பறப்பது உள்ளிட்ட சாகசங்களில் இந்த விமானங்கள் ஈடுபடலாம் என தெரிகின்றது. இந்த விமானங்கள் குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை இந்திய விமானப்படை உறுதி செய்திருக்கின்றது.

அண்டை நாடுகளிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகமாகிய வண்ணம் இருக்கின்றது. இதனை மனத்தில் கொண்டும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இந்த விமானங்கள் வாங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் 4.5 தலைமுறையைச் சார்ந்தவையாகும்.

எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வண்ணம் பல்வேறு தொழில்நுட்பங்களை இவ்விமானம் பெற்றிருக்கின்றது. அதாவது, டெல்டா விங் எனும் இறக்கை அமைப்பை இது பெற்றிருக்கிறது. இத்துடன் எதிரிகளை துள்ளியமாக கண்டுபிடித்து இலக்கை குறி வைத்து தாக்கும் திறன் இந்த விமானத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி பிற ஏவுகனை தாக்குதல்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளும் சுய பாதுகாப்பு திறனையும் ரஃபேல் போர் விமானம் பெற்றிருக்கின்றது. தற்போது சீன படையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜே-20 விமானத்தின் திறனுக்கு சற்றும் சலைத்தது அல்ல இந்த ரஃபேல் போர் விமானங்கள். எனவேதான், சீனாவின் அச்சுறுத்தலை மிக சுலபமாக இந்தியாவால் இவ்விமானங்களைக் கொண்டு சமாளிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.