Just In
- 3 min ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
- 3 hrs ago
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- 3 hrs ago
விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!
- 6 hrs ago
இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!
Don't Miss!
- Movies
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- News
பிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஃபேல் போர் விமானம் Vs சீனாவின் ஜே-20 போர் விமானம்: எது சிறந்தது?
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வர இருக்கின்றன. முதல் தொகுப்பில் 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை (ஜூலை 29) அம்பாலா விமானப் படை தளத்திற்கு வந்து சேர இருக்கின்றன. இந்த விமானங்கள் சீனாவுக்கு எதிராக லடாக் பிரதேச பாதுகாப்பில் இணைக்கப்பட உள்ளன.

தேசத்தின் பாதுகாப்பு
இந்த நிலையில், அதிநவீன போர் விமானமாக கருதப்படும் சீனாவின் செங்க்டு ஜே-20 போர் விமானத்துடன் ரஃபேல் போர் விமானங்களின் திறனை ஒப்பிட்டு பார்க்கும்போது நமது தேச பாதுகாப்பு நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Courtesy: Alert5/Wiki Commons

வல்லுனர்கள் கருத்து
சீனா பயன்படுத்தும் விமானங்களில் மிக அதிநவீன போர் விமானமாக கருதப்படும் ஜே-20 போர் விமானத்தின் திறன் குறித்து, அதனுடன் ரஃபேல் போர் விமானத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பம்சங்களையும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் பல முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
Image Courtesy: Alert5/Wiki Commons

தலைமுறை அம்சங்கள்
போர் விமானங்கள் சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்கள், வேகம், வடிவமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட தலைமுறையை சேர்ந்ததாக வரையறுக்கப்படுகின்றன. இதில், எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும் விமானங்கள் ஸ்டீல்த் ரக போர் விமானங்களாக கூறப்படுகிறது.

வரையறை
அதாவது, எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத அம்சங்கள் இருந்தாலும், ஒரு சில விஷயங்களை வைத்து இந்த விமானத்தை எதிரி நாட்டு விமானங்கள் கண்டறியும் வாய்ப்பு உண்டு. ஆனால், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை எதிரி நாட்டு ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாது.

ரஃபேல் எந்த தலைமுறை மாடல்?
அந்த வகையில், ரஃபேல் போர் விமானம் 4.5 தலைமுறை மாடலாகவும், சீனாவின் ஜே-20 போர் விமானம் ஐந்தாம் தலைமுறை மாடலாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், வழக்கம்போல் எதிரி நாடுகளை அச்சத்தில் வைக்க ஜே-20 போர் விமானத்தை ஐந்தாம் தலைமுறை விமான மாடலாக சீனா கூறுவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் ஒரு தகவல் உலவுகிறது.

உண்மை என்ன?
தனது செங்க்டு ஜே-20 போர் விமானத்தை ஐந்தாம் தலைமுறைக்கு இணையான ஸ்டீல்த் ரக போர் விமானமாகவும் சீனா தெரிவித்தாலும், அது சந்தேகத்திற்கு இடமானது என்று இந்திய பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அது ஸ்டீல்த் ரக போர் விமானம் என்பதே ஒரு மிகைப்படுத்தப்பட்ட விஷயம் என்றும் தெரிவிக்கின்றனர்.
Image Courtesy: Baiweiflight/Wiki Commons

எஞ்சின்
ரஃபேல் மற்றும் ஜே20 ஆகிய இரண்டு போர் விமானங்களுமே இரட்டை எஞ்சின் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், ஜே-20 விமானம் ஐந்தாம் தலைமுறையாக தெரிவிக்கப்பட்டாலும், அதில் பயன்படுத்தப்படும் எஞ்சின்கள் 3.5 தலைமுறைக்கு இணையான சிறப்பம்சங்களை மட்டுமே கொண்டதாக கூறப்படுகிறது.
Image Courtesy: Bzuk/Wiki Commons

ஜே-20யில் ரஷ்ய எஞ்சின்
ரஷ்யாவின் எஸ்யூ35 விமானத்தின் எஞ்சின்தான் சீனாவின் ஜே-20 விமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. அந்த எஞ்சினைவிட ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் இரட்டை எஞ்சின் பல விதத்திலும் செம்மை வாய்ந்ததாகவும் ரஃபேல் போர் விமானங்களை பரிசோதித்த ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை அதிகாரி ஏர் மார்ஷல் நம்பியார் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: emperornie/Wiki Commons

பன்முனை செயல்திறன்
ஒரே நேரத்தில் கண்காணிப்பு, தாக்குதல், தற்காப்பு, எதிரி விமானங்களை இடைமறித்தல் என நான்கு விதமான பணிகளை ரஃபேல் போர் விமானங்களால் செய்ய முடியும். இதனால், ஆம்னி ரோல் போர் விமானம் என்று ரஃபேல் குறிப்பிடப்படுகிறது. ஆனால், ஜே-20 விமானத்தால் இதுபோன்று பன்முனை செயல்பாடுகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாது என்றும் அவர் கூறுகிறார்.

ஏவுகணைகள்
ஜே-20 விமானத்தில் இருக்கும் ஏவுகணையை வைத்து 200 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க முடியும். ரஃபேலில் தரை இலக்கை தாக்கும் ஏவுகணை 150 கிமீ தூரம் வரையிலும், வான் இலக்குகளை தாக்குதவதற்கான ஏவுகணை 200 கிமீ தூரம் வரையிலும் பாய்ந்து செல்லும் திறன் கொண்டவை.

ரஃபேல் இதுல பெஸ்ட்
அதேநேரத்தில், எரிபொருள், ஆயுதங்களை சுமந்து கொண்டு எளிதாக பறக்கும் திறனில் ரஃபேலுடன் ஜே-20 விமானத்தை ஒப்பிட இயலாது. அது அந்தளவுக்கு திறன் கொண்டதாக இருக்காது. ரஃபேல் போர் விமானம் தனது எடையைவிட 1.5 மடங்கு அதிக எடையை சுமந்து கொண்டு பறக்கும். அதுவும் க்ரூஸ் செய்து செல்வதிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.

அதிகபட்ச வேகம்
ரஃபேல் போர் விாமனம் மேக் 1.8 என்ற வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது. சீனாவின் ஜே-20 போர் விமானம் மேக் 2.0 வேகத்தில் பறக்கும். அதேபோன்று, விமானத்தின் மேல் எழும்பும் திறனும் முக்கியமானது. அதேநேரத்தில், ரஃபேர் போர் விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது 3,700 கிமீ தூரம் வரை பறக்கும்.

வெற்றிக்கு இதுதான் முக்கியம்
ரஃபேல் மற்றும் ஜே-20 ஆகிய விமானங்களில் இருக்கும் ரேடார்கள் கிட்டத்தட்ட இணையான திறன் பெற்றவையாக தெரிவிக்கப்படுகிறது. விமானியின் சாதுர்யம், எதிரிகளை வீழ்த்துவதற்கு அல்லது தாக்குவதற்கு விமானப் படையின் திட்டமிடல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.
Image Source:emperornie/Wiki Commons
News Source: ANI