Just In
- 46 min ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 1 hr ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
- 4 hrs ago
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- 5 hrs ago
விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!
Don't Miss!
- News
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவின் பாதுகாப்பில் புதிய அத்யாயம் எழுத வந்த ரஃபேல் போர் விமானங்கள்... 15 முக்கிய விஷயங்கள்!
ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில், இந்திய விமானப் படையின் பலம் வெகுவாக அதிகரிக்க உள்ளது. இது இந்திய விமானப் படை வீரர்கள், அதிகாரிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு இந்தியர் மனதிலும் இனம் புரியாத சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பில் ரஃபேல் போர் விமானங்கள் கேம் சேஞ்சராகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், ரஃபேல் போர் விமானங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 15 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பன்முனை செயல்திறன்
ரஃபேல் போர் விமானமானது ஒரே நேரத்தில் நான்கு விதமான பணிகளை செய்யும் திறன் கொண்டது. இந்திய வான் எல்லையை கண்காணித்து கட்டி காக்கும் பொறுப்பு, எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கான வசதி, எதிரி இலக்கை தாக்குதல், எதிரி விமானங்களை இடைமறித்தல் என பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் பெறுவதற்கும், சமாளிப்பதற்குமான வசதிகளை பெற்றிருக்கிறது.

தலைமுறை வகை
கடந்த 2001ம் ஆண்டு ரஃபேல் போர் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் அதிநவீன போர் விமானங்களின் பட்டியலில் ரஃபேல் போர் விமானத்திற்கும் முக்கிய இடம் உள்ளது. இந்த போர் விமானம் 4.5 தலைமுறையை சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் 15.30 மீட்டர் நீளமும், 10.90 மீட்டர் அகலமும், 5.30 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் மூன்று விதமான மாடல்களில் தயாரிக்கப்படுகிறது.

ரஃபேல் வேரியண்ட்டுகள்
ரஃபேல் போர் விமானம் B, C மற்றும் M என மூன்று வேரியண்ட்டுகளில் தயாரிக்கப்படுகிறது. இதில், ரஃபேல் C என்பது ஒற்றை இருக்கை கொண்டது. பயிற்சி பெற்ற விமானிகள் இந்த விமானங்களை இயக்கலாம். ரஃபேல் B மாடலானது இரட்டை இருக்கைகளுடன் புதிய விமானிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கும், போர் சமயங்களில் தாக்குதல் பணிகளிலும் பயன்படுத்தலாம். ரஃபேல் M மாடலானது விமானம் தாங்கி கப்பல்களில் தரை இறங்குவதற்கு ஏற்றதாக உள்ளது. இதில், ஒரே கூடுதல் விஷயம், விமானம் தாங்கி கப்பல்களில் தரை இறங்கும்போது கம்பி வடத்தால் ஊக்கு அமைப்பில் மாட்டி இழுத்து நிறுத்துவதற்கான அமைப்பை பெற்றிருக்கிறது. இதில், B மற்றும் C மாடல்கள்தான் இந்தியா வந்துள்ளன.

வடிவமைப்பு
இந்த விமானத்தின் வடிவமைப்பு எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, டெல்டா விங் எனப்படும் முக்கோண வடிவிலான றெக்கை அமைப்பு, ஆயுதங்கள் ஆகியவை எதிரிகளின் ரேடாரில் சிக்காது. ஆனால், சில சிறிய விஷயத்தை வைத்து எதிரி ரேடார்கள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு இருப்பதால்தான் இது 4.5 தலைமுறை விமானமாக சொல்லப்படுகிறது.

எஞ்சின் விபரம்
ரஃபேல் போர் விமானத்தில் இரண்டு ஸ்நெக்மா எம்-88 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் மிக குறைவான பராமரிப்பு, நீடித்த உழைப்பு மற்றும் அதிசெயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜே20 ஐந்தாம் தலைமுறை விமானத்தில் இருக்கும் சுகோய் எஞ்சின்களை விட இது செயல்திறனில் மிகச் சிறப்பானதாக பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் குளிரிலும் இயக்கலாம்
இமயமலையை ஒட்டியுள்ள சீனா, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. இது ஆண்டின் பெரும்பாலான நாட்கள் அதிக குளிர் நிலவும். மிக கடுமையான சீதோஷ்ண நிலையில் கூட இந்த ரஃபேல் போர் விமானத்தின் எஞ்சின் செயல்திறன் மிகச் சிறப்பானதாக இருக்கும். கடும் குளிரிலும், இரவிலும் இயக்க முடியும்.

ரஃபேல் எடை
ரஃபேல் போர் விமானத்தின் வெற்று எடை 10 டன். இந்த விமானம் தனது எடையைவிட 1.5 மடங்கு அதிக எடையை சுமந்து கொண்டு பறக்கும். அதாவது, ஆயுதங்கள், எரிபொருள் ஆகியவற்றுடன் அதிகபட்சமாக 24.5 டன் எடையுடன் பறக்கும். முழு பாரத்தை சுமந்து கொண்டு சூப்பர் க்ரூஸ் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. விமானத்தில் உள்ள கலனில் 4.7 டன் எரிபொருளையும், தேவைப்படும் நேரத்தில் பொருத்தக்கூடிய வெளிப்புற கலனில் 6.7 டன் எரிபொருளும் நிரப்ப முடியும். இதுதவிர்த்து, ஆயுதங்களும் பொருத்தப்படும்.

டாப் ஸ்பீடு
ரஃபேல் போர் விமானம் மணிக்கு மேக் 1.8 வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. அதாவது, மணிக்கு 2,222 கிமீ வேகம் வரை செல்லும். ஆனால், சாதாரணமாக 1,400 கிமீ வேகத்தில் இயக்கப்படும். போர் சமயங்களில் அதிகபட்ச வேகம் மற்றும் குறைந்தபட்ச வேகத்தை விமானிகள் சூழலுக்கு தக்கவாறு பயன்படுத்துவார்கள். வேகத்தை குறைத்து இயக்கும் போது மணிக்கு 224 கிமீ வேகத்திலும் நிலையாக பறக்கும் என்பது இதன் சிறப்பு.

அதிகபட்ச பறக்கும் உயரம்
ரஃபேல் போர் விமானம் தரையிலிருந்து 50,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் பயணிக்கும். போர் சமயங்களில் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட தூரத்திற்குள் விமானப்படையின் திட்டத்தின்படி இயக்கப்படும். இதனால், இந்த ரேஞ்ச் குறைவாகவே நிர்ணயிக்கப்படும்.

கட்டுப்பாட்டு சாதனங்கள்
ரஃபேல் போர் விமானத்தில் மூன்று மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகளும், ஒரு அனலாக் முறை கட்டுப்பாட்டு அமைப்பையும் பெற்றிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக தரவுகளை பெற்று செயல்படும். பல்வேறு சென்சார்கள், ரேடார்கள் மூலமாக கிடைக்கும் தகவல்களை ஒன்று திரட்டி, அதனை ஒருங்கிணைத்து விமானிக்கு தரும். இதனால், போர் முனையில் விமானி துல்லியமாக முடிவு எடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ப்ளை பை ஒயர் மற்றும் நவீன கட்டுப்பாட்டு வசதிகள் மூலமாக இந்த விமானத்தை வெகு எளிதாக கையாளும் வாய்ப்பை விமானி பெற முடியும். மேலும், ரஃபேல் போர் விமானங்களின் பல மில்லியன் மணி நேரம் பறந்ததன் மூலமாக கிடைத்த தரவுகள் இதற்கு சான்றாக உள்ளதாகவும், இதுவரை விபத்து ஏற்பட்டதில்லை என்றும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள்
ரஃபேல் போர் விமானத்தில் MICA என்ற வானிலிருந்து அருகில் வரும் வான் இலக்கை தாக்குவதற்கும், தன்னை தற்காத்துக் கொள்வதற்குமான ஏவுகணை பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஏவுகணை 112 கிலோ எடை கொண்டது. இரண்டவது முக்கிய ஏவுகணையாக SCALP இதில் பொருத்தப்பட்டு இருக்கிறது. க்ரூஸ் மிசைல் எனப்படும் அதிவேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணை 300 கிமீ தூரம் வரை மேக் 4.0 வேகத்தில் சென்று தரை இலக்கை தாக்கும். ஸ்கால்ப் ஏவுகணை 1,300 கிலோ எடை கொண்டது.

வான் தாக்குதல்
மூன்றாவதாக, மிட்டியோர் என்ற மற்றொரு ஏவுகணை வானிலிருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்க பயன்படும். இந்த ஏவுகணை 150 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. இந்த மூன்று ஏவுகணைகளுமே விமானி பார்வைக்கு புலப்படாத தொலைவில் இருக்கும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் தரை இலக்குகளை பிரத்யேக நேவிகேஷன் அமைப்பின் உதவியுடன் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவையாக தெரிவிக்கப்படுகிறது. நான்காவதாக, ரஃபேல் போர் விாமனத்திற்காக ஹேமர் என்ற ஏவுகணையையும் இந்தியா வாங்க உள்ளது. இது எல்லையில் பதுங்கு குழிகளை கண்டறிந்து தாக்கும் திறன் வாய்ந்தது. 75 கிமீ தூரம் செல்லும்.

எந்திர துப்பாக்கி
டாக் ஃபைட் எனப்படும் எதிரியுடன் நேரடியாக வானில் மோதும் நிலை ஏற்பட்டால், தற்காத்துக் கொள்வதற்கான 30 மிமீ குழல் விட்டம் கொண்ட NEXTER 30M791 ரக துப்பாக்கியும் உள்ளது. இந்த துப்பாக்கி மூலமாக 2,500 ரவுண்டுகள் சுட முடியும். இதுதவிர்த்து, சாதாரண வகை வெடிகுண்டுகள், லேசர் கெய்டட் வெடிகுண்டுகளையும் பொருத்தி எதிரி இலக்குகளை தாக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. சூழலை பொறுத்து ஆயுதங்களை பொருத்தி அனுப்ப முடியும்.

ரஃபேல் படையணி விபரம்
இமயமலை பிரதேசத்தை ஒட்டி அமைந்துள்ள மிக மோசமான நில அமைப்பு மற்றும் கடும் குளிர் நிலவும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான இந்திய எல்லைப் பகுதிகளை கட்டிக் காக்கும் மிகப்பெரிய பொறுப்பை அம்பாலா விமானப் படை தளம் கவனித்து வருகிறது. இங்குதான் ரஃபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. முதல் தொகுதியில் வரும் 18 ரஃபேல் போர் விமானங்கள் "17 கோல்டன் ஏரோஸ் ஸ்குவாட்ரான்" என்ற படையணியில் இணைக்கப்பட உள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் சீனா அத்துமீறும் பகுதிகளின் பாதுகாப்புப் பணியில் ரஃபேல் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

பேரழிவுக்காரன்
சீனாவிடம் உள்ள ஜே20 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இதுவரை போர் முனைகளில் பயன்படுத்தப்படவில்லை. இதனால், அதன் முழுமையான திறன் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. ஆனால், ரஃபேல் போர் விாமனங்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, மாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த யுத்த களங்களில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு, அதன் தாக்குதல் திறன் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அத்யாயம்
பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்திய விமானப்படையில் புதிய ரக போர் விமானங்கள் இணைக்கப்படுகின்றன. தேசத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதத்தில், இந்த புதிய ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட உள்ளன. இது நிச்சயம் இந்தியாவின் பாதுகாப்பில் புதிய அத்யாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்.