ரஃபேல் போர் விமானமும், இந்தியாவுக்கு அதன் அவசியமும்...!!

யூரோஃபைட்டர் தைபூன், சென்யாங் ஜே- 11, மிக் 29 மற்றும் எஃப் 22 ராப்டர் ஆகியவை உலகின் மிக பிரபலமான அதிநவீன போர் விமானங்கள். இந்த விமானங்கள் சண்டை போடுவதற்கு மட்டுமின்றி, எதிரி நாடுகளின் வான்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் பெற்றவை. ஏர் சுப்பீரியாரிட்டி ஃபைட்டர் ஜெட் விமானங்களின் தயாரிப்பு செலவு மிக அதிகம் என்பதால், குறைவான அளவு எண்ணிக்கையிலேயே சில நாடுகள் வசம் இந்த ஏர் சுப்பீரியாரிட்ட போர் விமானங்கள் கைவசம் உள்ளன.

சரி, உலக நாடுகளை விடுங்கள், நம்ம கதை என்ன என்று கேட்பவர்களுக்கு, நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ விமானம் ஏர் சுப்பீரியாரிட்டி வகையை சேர்ந்ததே. ரஷ்யாவின் சுகோய் வடிவமைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு உரிமத்தை பெற்று உற்பத்தி செய்கிறது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, நம் நாட்டு விமானப் படையில் 200 சுகோய் எஸ்யூ30 எம்கேஐ விமானங்கள் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. அதேநேரத்தில், சுகோய் விமானத்தை உற்பத்தி செய்வதில் இருக்கும் தாமதத்தை உணர்ந்து, உடனடியாக அதிநவீன போர் விமானங்களை வாங்க வேண்டிய கட்டாயம் மத்திய பாதுகாப்பு துறைக்கு ஏற்பட்டது.

அதன்படி, விடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி மூலம் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான டஸ்ஸால்ட் ரஃபேல் போர் விமானத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன வகை போர் விமானம் பல செயல் திறன் கொண்ட வகையை சேர்ந்தது. பல இடர்பாடுகளை தாண்டி வாங்க முடிவு செய்யப்பட்டிருக்கும், இந்த விமானம் அனைத்து விதத்திலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? என்பதை காணும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

 ரஃபேல் போர் விமானம் பற்றி...

ரஃபேல் போர் விமானம் பற்றி...

  • வகை: பல செயல்திறன் கொண்ட போர் விமானம்
  • தயாரிப்பு நாடு: பிரான்ஸ்
  • தயாரிப்பாளர்: டஸ்ஸால்ட் ஏவியேஷன்
  • முதல் விமான தயாரிப்பு: ஜூலை 1986
  • அறிமுக ஆண்டு: மே 2001
  • பயன்படுத்தும் நாடுகள்: பிரான்ஸ் விமானப்படை, கப்பற்படை மற்றும் எகிப்திய விமானப்படை
  • உற்பத்தி எண்ணிக்கை: 2014 அக்டோபர் வரை 133 விமானங்கள்
  • பல செயல்திறன் கொண்ட போர் விமானம்

    பல செயல்திறன் கொண்ட போர் விமானம்

    ஏர் சுப்பீரியாரிட்டி வகை போர் விமானங்களை எதிரியின் வான்பரப்பை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வல்லமை கொண்டது. ரஃபேல் போன்ற பல செயல்திறன் கொண்ட போர் விமானத்தை எதிரியின் வான்பரப்புக்கு சென்று, அதனை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், தரை தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட முடியும். தற்போது சுகோய் எஸ்யூ- 30எம்கேஐ விமானத்தை விட இலகு எடை கொண்டதுடன், அதிசக்திவாய்ந்த விமானம்.

    சின்ன ஒப்பீடு

    சின்ன ஒப்பீடு

    ரஃபேல்

    அதிகபட்ச வேகம்: மணிக்கு 1,912கிமீ வேகம்

    மொத்த எடை: 14,016 கிலோ

    சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ

    அதிகபட்ச வேகம்: மணிக்கு 2,100கிமீ வேகம்

    மொத்த எடை: 24,900 கிலோ

    முக்கிய பயன்பாடு என்ன?

    முக்கிய பயன்பாடு என்ன?

    மல்டிரோல் போர் விமானங்களின் மூலமாக ராணுவ படை தளங்கள் மற்றும் தரைப்பகுதிகளின் பாதுகாப்பை வெகுவாக உறுதி செய்ய முடியும்.

    ஏர் சுப்பீரியாரிட்டி போர் விமானங்களில் இருக்கும் ஏவுகணைகள் 37.04 கிமீ தூரத்துக்கும் அப்பால் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்த விமானங்களில் பல ரேடார் கருவிகள் உள்ளதால், எதிரியின் வான்பகுதியை எளிதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டதாகும்.

    ரஃபேல் விலை

    ரஃபேல் விலை

    சுகோய் எஸ்யூவி 30 எம்கேஐ விமானம் 56 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது. ஒரு ரஃபேல் விமானம் 75 மில்லியன் டாலர் முதல் 106 மில்லியன் டாலர் வரை விலை மதிப்பு கொண்டது.

     ஒப்பந்த விபரம்

    ஒப்பந்த விபரம்

    2012ம் ஆண்டு பல செயல்திறன் கொண்ட விமானங்களை வாங்குவதற்காக ஆர்டரை டஸ்ஸால்ட் நிறுவனம் பெற்றது. பழைய ஒப்பந்தத்தின்படி, 18 விமானங்கள் பிரான்ஸில் தயாரிக்கப்படும். மீதமுள்ள 108 விமானங்களை தயாரிப்பு உரிமத்தின் அடிப்படையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் என்று இருந்தது.

    இடர்பாடு

    இடர்பாடு

    மேக் இன் இந்தியா என்ற இந்தியாவின் புதிய தேசிய உற்பத்தி கொள்கையின்படி, இந்தியாவிற்கு ரஃபேல் போர் விமானத்தை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வசம் அளிப்பதற்கு தற்போது டஸ்ஸால்ட் நிறுவனம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    ரஃபேல் கண்டிப்பா தேவையா?

    ரஃபேல் கண்டிப்பா தேவையா?

    தற்போது பயன்பாட்டில் இருக்கும் மிக்-21 மற்றும் மிக்- 27 ஆகிய போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்கு, ரஃபேல் போன்ற அதிநவீன பல் செயல்திறன் கொண்ட போர் விமானங்களை அவசரமாக சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     தேஜஸும் தாமதம்

    தேஜஸும் தாமதம்

    நம் நாட்டிலேயே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும், பல் செயல்திறன் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

    மற்றொரு புராஜெக்ட்டும் தாமதம்

    மற்றொரு புராஜெக்ட்டும் தாமதம்

    தேஜஸ் போர் விமானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளை போன்றே, ரஷ்யாவின் சுகோய் டிசைன் நிறுவனமும், எச்எஏல் நிறுவனமும் இணைந்து புதிய ஐந்தாம் தலைமுறை விமானத்தை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அந்த தயாரிப்பும் தாமதப்பட்டு வருகின்றன. தற்போது இருக்கும் ஒரே ஐந்தாம் தலைமுறை விமானம் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரே தீர்வு

    ஒரே தீர்வு

    இப்போது தேவையை கருதி, ரஃபேல் விமானத்தை உடனடியாக வாங்கி பயன்பாட்டிற்கு சேர்ப்பது அவசியமாகிறது. எனவே, முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில், 36 ரஃபேர் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நவீன ரஃபேல் போர் விமானங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பராமரிப்பு

    பராமரிப்பு

    பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் உலகின் மிகச்சிறந்த செயல்திறன் கொண்ட போர் விமான மாடல்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இந்த போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை டஸ்ஸால்ட் நிறுவனமே செய்யும். இதற்காக, கூடுதல் தொகையை டஸ்ஸால்ட் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியிருக்கும். சரி, இந்திய விமானப்படையை பற்றி சில தகவல்களை தொடர்ந்து காணலாம்.

    இந்திய விமானப்படை

    இந்திய விமானப்படை

    இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாகும். தற்போது இந்திய விமானப்படையில் 1.70 லட்சம் வீரர்கள் பணிபுரிகின்றனர். 1,130 போர் விமானங்களும், 1,700 பிற பயன்பாட்டு விமானங்களும் உள்ளன. இந்திய விமானப்படைக்கு நாட்டின் ஜனாதிபதிதான் தலைவராவார்.

    ஸ்தாபிதம்

    ஸ்தாபிதம்

    1932ம் ஆண்டு இங்கிலாந்து விமானப்படையின் துணை விமானப்படையாக இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. 1945ம் ஆண்டு ராயல் என்ற வார்த்தை முன்னால் சேர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து விமானப்படை என்பதை எளிதாக அடையாளம் காணும் வித்ததில், அவ்வாறு பெயருக்கு முன்னால் ராயல் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக மாறியபோது, ராயல் என்ற அந்த வார்த்தை நீங்கப்பட்டது.

    எச்ஏஎல் ஸ்தாபிதம்

    எச்ஏஎல் ஸ்தாபிதம்

    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 1948ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    விமானப்படை தினம்

    விமானப்படை தினம்

    ஆண்டுதோறும் அக்டோபர் 8ந் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

     சரங் ஹெலிகாப்டர்

    சரங் ஹெலிகாப்டர்

    இந்திய விமானப்படையின் வல்லமையை காட்டும் விதத்தில் செயல்படும் சரங் ஹெலிகாப்டர் குழுவினர் சாகசங்களை நிகழ்த்துவதில் பெயர் பெற்றவர்கள். வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட சரங் குழுவினரின் ஹெலிகாப்டர்களில் தேசிய பறவையான மயில் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

    சூர்ய கிரண் குழு

    சூர்ய கிரண் குழு

    இந்திய விமானப்படையின் சாகச குழுவினர்தான் சூர்ய கிரண்ய இந்த குழுவில் 13 பைலட்டுகளும், 9 எச்ஏஎல் எச்ஜேடி-16 கிரண்ட் எம்கே2 பயிற்சி விமானங்களும் உள்ளன. இந்த விமானஙகள் வெள்ளை மற்றும் ஆரஞ்ச் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும்.

    வீரதீர விருது பெற்ற விமானப்படை அதிகாரி

    வீரதீர விருது பெற்ற விமானப்படை அதிகாரி

    இந்திய பாதுகாப்புத் துறையின் வீர தீரத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான பரம் வீர் சக்கரா விருதை பெற்ற இந்திய விமானப்படையின் ஒரே ஒரு உறுப்பினர் நிர்மல் ஜித் சிங் செகான். கடந்த 1971ம் ஆண்டு ஸ்ரீநகர் விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் விமானப்படையின் 6 விமானங்கள் நடத்திய தாக்குதலை துணிச்சலுடன் எதிர்கொண்டவர். இந்த சண்டையில், செகான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், 2 பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்திய பின்னரே செகான் விமானம் கீழே விழுந்தது. அவரது வீரத்தை பாராட்டி அந்த விருது வழங்கப்பட்டது.

    முதல் பெண் ஏர் மார்ஷல்

    முதல் பெண் ஏர் மார்ஷல்

    இந்திய விமானப்படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் பத்மாவதி பன்தோபாத்யா. விமானப் படை தலைமையகத்தின் பொது மருத்துவ சேவைப் பிரிவின் டைரக்டர் ஜெனரலாக இவர் பதவி வகித்தார்.

    முதல் விமானப்படை தளபதி

    முதல் விமானப்படை தளபதி

    இந்திய விமானப்படையின் முதல் தளபதியாக இருந்தவர் ஏர் மார்ஷல் சர் தாமஸ் வால்கர் . 1947ம் ஆண்டு அகஸ்ட் 15ந் தேதி முதல் 1950ம் ஆண்டு பிப்ரவரி 21ந் தேதி வரை இவர் அந்த பதவியில் இருந்தார். இதேபோன்று, முதல் தலைமை ஏர் ஸ்டாஃப் ஆக இருந்தவர் சுப்ரட்டோ முகர்ஜி. இவர், 1954 ஏப்ரல் 1 முதல் 1960 நவம்பர் 8 வரை இந்த பதவியில் இருந்தார்.

    01. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்- 16(அமெரிக்கா)

    01. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்- 16(அமெரிக்கா)

    உலக அளவில் பிரபலமான போர் விமான மாடல் இது. அமெரிக்காவின் லாக்ஹீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மாடல் மல்டி ரோல் காம்பேக்ட் பயன்பாட்டு வகையை சேர்ந்தது. தரை தளங்களை துல்லியமாக குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவான மாடல். இதுவரை 4,500 எஃப்- 16 போர் விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், உலக முழுவதும் 26 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. 2025ம் ஆண்டு வரை அமெரிக்க விமானப் படையில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக எஃப்-35 லைட்னிங் 2 என்ற விமானத்தை அமெரிக்க விமானப் படை சேர்க்கவுள்ளது.

    02. செங்க்டு ஜே-10(சீனா)

    02. செங்க்டு ஜே-10(சீனா)

    செங்க்டு ஜே- 10 என்ற இந்த போர் விமானம் சீனாவின் முதல் போர் விமானம். இது ரஷ்யாவின் நான்காம் தலைமுறை மிக்-29 மற்றும் சுகோய் 27 விமானங்களுக்கு இணையான அம்சங்களை கொண்டது. சோவியத் யூனியனை சமாளிக்கும் விதத்தில் முதலில் இந்த விமானத்தை சீனா உருவாக்கி வந்தது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்த பிறகு, தேவைகள் மாறியதால் இந்த விமானத்தின் டிசைன் மற்றும் பயன்பாட்டு அம்சங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டது. மேற்கத்திய டிசைன் மற்றும் தொழில்நுட்பங்கள் ஏராளமாக இந்த விமானத்தில் கையாளப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. இது மல்டிரோல் காம்பேட் போர் விமான ரகத்தை சேர்ந்தது.

    03. சாப் ஜேஏஎஸ் 39 கிரிபென்(சுவீடன்)

    03. சாப் ஜேஏஎஸ் 39 கிரிபென்(சுவீடன்)

    இதுவும் நான்காம் தலைமுறை போர் விமானங்களின் அம்சங்களை கொண்டது. வான் தற்காப்பு, இடைமறித்தல், தரை தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பிக்கும் வசதிகள் கொண்டது. வெகு லாவகமாக செல்லும் ஏரோடைனமிக் டிசைன் கொண்டதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். குறைவான நீளம் கொண்ட ஓடுதளத்திலிருந்தும் இயக்க முடியும். இந்த விமானத்திற்காகன பெரும்பான்மையான பாகங்கள் அமெரிக்காவை சேர்ந்த சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகிறது. மேலும், மிக குறைவான இயக்குதல் செலவீனம் கொண்ட விமானமாகவும் குறிப்பிடப்படுகிறது. செக் குடியரசு, ஹங்கேறி, தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    05. சுகோய் எஸ்யூ-27(ரஷ்யா)

    05. சுகோய் எஸ்யூ-27(ரஷ்யா)

    சோவியத் யூனியன் விமானப் படையின் முதுகெலும்பாக இந்த மாடலை கூறுகின்றனர். தொலைதூரம் சென்று தாக்குதல் நடத்துவதற்கான அம்சங்களை கொண்டது. அமெரிக்காவின் எஃப்- 15 விமானத்திற்கு இணையான அம்சங்களை கொண்டது. 10 ஏவுகணைகளை தாங்கிச் சென்று செலுத்தும். சுகோய் எஸ்யூ27 வரிசையில் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக எஸ்யூ30, எஸ்யூ35 ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சுகோய் ரக விமான மாடல்கள் மேற்கத்திய நாடுகளின் நவீன போர் விமானங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன.

Most Read Articles
English summary
Air Chief Marshal Denis Mercier, French Air Force Chief of Staff (CEMAA) was recently heard stating — the Rafale is the best fighter plane in the world, and that he would be delighted to see other major Air Forces being equipped with the Rafale.So is the French multirole fighter the ultimate when it boils down to air supremacy, interdiction, aerial reconnaissance, and nuclear strike missions?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X