ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!

ரயில் பயணத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது என கூறலாம். கட்டணம் குறைவு, நேரத்துக்கு உரிய இடத்திற்கு சென்று சேருதல் மற்றும் அலாதியான பயண அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள ஏதுவானது உள்ளிட்ட காரணங்களுக்காக பலர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். குறிப்பாக, குடும்பத்துடன் பயணிப்பவர்கள் பலர் வெளியூர் செல்ல ரயில்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ரயிலில் பயணிக்கும்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியும். ஆகையால், ஓர் ஃபன்னான டிராவல் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். எனவேதான் ஓர் ரயிலுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய உடன் அது சில மணி நேரங்களிலேயே நிரம்பிவிடுகின்றது. இந்த மாதிரியான சூழலில் இந்தியாவில் சில ரயில்கள் போக்குவரத்திற்கு துளியளவும் உகந்தது அல்ல என கூறும் அளவிற்கு இயங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரயில் மாடாட்

ரயில் மாடேட் தளம்

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் குறிப்பிட்ட அந்த ரயில்கள் மிகவும் துய்மை அற்றவை என்றும் சுத்தம் என்பது அதில் கடுகளவும் இருக்காது என கூறப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் அறிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியன் ரயில்வேஸ் ரயில் மாடேட் (Rail Madad) எனும் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த தளம் பிரத்யேகமாக ரயில் பயணிகள் புகார் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

ரயில், ரயில் நிலையம், பார்சல் சேவையில் உள்ள குறைபாடுகள் என ரயில்வேஸின் குறிப்பிட்ட சேவைகளில் உள்ள இடையூறுகளை இந்த தளத்தின் வாயிலாக புகார் தெரிவிக்க முடியும். இந்த தளத்தின் வாயிலாகவே இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மிக மோசமான மற்றும் அழுக்கான ஐந்து ரயில்கள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த தளத்தில் புகாரை எழுத்து பூர்வமாக மற்றும் புகைப்படம் வாயிலாக தெரிவிக்க முடியும்.

ரயில் மாடாட்

புகார் அளிப்பது மிக சுலபம்:

புகார் அளிப்பது மிக மிக சுலபமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைப் பயன்டுத்தியே பலர் தாங்கள் ரயில் பயணத்தின்போது அனுபவித்த இடர்பாடுகள் குறித்த தகவலை புகாராக இந்தியன் ரயில்வேஸுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ரயில் பயணிகள் அளித்த புகாரின் வாயிலாகவே மிகவும் அழுக்கான ரயில்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றது. அந்த ஐந்து ரியல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மிகவும் மோசமான மற்றும் அழுக்கான ரயில்களின் பட்டியல்:

சஹர்ஸா - அம்ரித்ஸர் கரிப் ரத் (Saharsa-Amritsar Garib Rath)

ரயில் மாடேட் எனும் செயலி வாயிலாக இந்தியாவின் மிகவும் அழுக்கான ரயில்களில் ஒன்று என சஹர்ஸா - அம்ரித்ஸர் கரிப் ரத் ரயில் கண்டறியப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் டிசம்பரில் மட்டும் சுமார் 81க்கும் அதிகமானோர் இந்த ரயிலை சாடி இருக்கின்றனர். குறிப்பாக, மிகவும் சுத்தமற்ற ரயில் இது என பலர் புகார் அளித்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி, 58 க்கும் அதிகமான பயணிகள் ரயிலில் சரியான அளவு தண்ணீர் வரவில்லை என்றும் கூறி இருக்கின்றனர். இதுபோன்று இன்னும் பலர் பல்வேறு விதமான புகார்களை இந்த ரயில் குறித்து கூறி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரயில் மாடாட்

சீமன்சல் எக்ஸ்பிரஸ் (Seemanchal Express)

புது தில்லியின் அனந்த் விஹார், பிஹாரின் ஜோக்பானி இடையில் பயணிக்கும் ரயிலே சீமன்சல் எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில் குறித்து இதுவரை நூற்றுக் கணக்கானோர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 67 பேர் இந்த ரயில் மிக மோசமான மற்றும் அழுக்கான ரயில் என சாடி இருக்கின்றனர். பெரும்பாலான பெட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் மிகவும் அழுக்காக இருப்பதாக பயணிகள் பலர் ரயில் மாடேட் புகார் தளம் வாயிலாக குறை கூறி உள்ளனர். மேலும், 52 க்கும் மேற்பட்டோர் இந்த ரயில் குறித்து பல்வேறு விதமான புகார்களை தெரிவித்து இருக்கின்றனர்.

ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ் (Swaraj Express)

இந்தியாவின் மிக மோசமான மற்றும் அசுத்தமான ரயில்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்த ரயில் ஜம்முவின் ஸ்ரீ வைஷ்ணா தேவி தொடங்கி மஹாராஷ்டிராவின் மும்பை வரை பயணிக்கின்றது. இரு முக்கியமான பகுதிகளுக்கு இடையில் பயணிக்கும் இந்த ரயிலே மிகவும் அழுக்கானது என புகாருக்கு ஆளாகி இருக்கின்றது. 60 க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியாக புகார் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது, மிகவும் மோசமான அழுக்கான ரயில் என இதனை சாடி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 61 பேர் இந்த ரயில் மிக அழுக்கானது என குற்றம் சாட்டி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

திரிபுர சுந்தரி எக்ஸ்பிரஸ் (Tripura Sundari Express)

நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கும் ரயிலாக திரிபுர சுந்தரி எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கின்றது. இது ஓர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். திரிபுராவின் தலைநகரமான அகர்தாலா, பஞ்சாபின் ஃபிரோஸ்புரை இணைக்கும் ரயிலாக இது இருக்கின்றது. இந்த ரயில் குறித்து 50க்கும் மேற்பட்டோர் ரயில் மாடேட் ஆப்பில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக, மற்ற ரயில்களைபோல் சுத்தம் குறித்து புகார் அளித்தவர்களே மிக அதிகம். 57 பேர் வரை கடந்த டிசம்பரில் ரயிலின் சுத்தம் குறித்து புகாரை தெரிவித்து இருக்கின்றனர்.

ஜேநகர் - அம்ரித்சர் க்ளோன் ஸ்பெஷல் (Jaynagar-Amritsar Clone Special)

சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த 92 ரயில் பயணிகள் ஜேநகர் - அம்ரித்சர் க்ளோன் ஸ்பெஷல் குறித்து ரயில் மாடேட் தளம் வாயிலாக புகார் அளித்திருக்கின்றனர். இந்த 92 புகார்களில் 50 க்கும் மேற்பட்ட புகார்கள் ரயிலின் சுத்தம் புற்றியதாக இருக்கின்றது. மிகவும் அழுக்கான ரயில் இது என பலர் தங்களுடைய குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கின்றனர். பயணத்தின்போது முகம் சுழிக்கச் செய்யும் வகையில் அதன் தூய்மை தன்மை இருந்ததாக கூறி இருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rail madad app reveals india s dirtiest trains
Story first published: Wednesday, February 1, 2023, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X