மலைப் பாதையில் அதிவேகத்தில் காரை செலுத்தி புதிய சாதனை!

ஏற்றம் நிறைந்த மலைப் பாதையில் அதிவேகத்தில் காரை செலுத்தி உச்சத்தை தொட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2014 மாடல் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார் இந்த சாதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரபல கார் ஸ்டன்ட் வீரர் பால் டெல்லன்பாக் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

156 வளைவுகள், ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஏற்றம் நிறைந்த அந்த மலைப் பாதையில் மணிக்கு சராசரியாக 95.23 கிமீ வேகத்தில் காரை செலுத்தி இந்த புதிய சாதனையை படைத்தார். அவர் சாதனை பயணத்தை துவங்கிய இடம் கடல் மட்டத்திலிருந்து 2,860 மீட்டர் உயரம் கொண்டது. அவரது சாதனை நிறைவு செய்த இடம் கடல் மட்டத்திலிருந்து 4,300 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 19.98 கிமீ தூரம் கொண்ட அந்த மலைப் பாதையில் வெறும் 12:35.61 நிமிடங்களில் கடந்து சாதனைப் படைத்தார். மேலும், அவர் சாதனையை நிறைவு செய்த இடத்தில் 58 சதவீத அளவுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருந்ததால் காரின் பெர்ஃபார்மென்சில் மட்டுமின்றி ஓட்டுபவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும் ஆபத்து அதிகம் இருந்த நிலையில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை பைக்ஸ் பீக்ஸ் என்ற சர்வதேச மலையேற்ற ஏற்பாட்டு அமைப்பு அங்கீகரித்துள்ளது.

காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
காரில் மலையேற்ற சாதனை
Most Read Articles
English summary
The 2014 Range Rover Sport has become the fastest unmodified production SUV to climb Pikes Peak. In the process the Range Rover Sport also became the fastest unmodified production vehicle ever to reach the top of the mountain.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X