சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...!

ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் ரக விமானத்தை நடிகர் ஒருவர் வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

நம்ம ஊரில் உள்ள பெரும்பாலான நடிகர்கள் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை ஆடம்பரமான வாழ்கைக்கு செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், அவர்கள் சினிமாவில் நடிக்கும் வாழ்க்கையை நிஜ உலகத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக சொகுசு பங்களா, சொகுசு கார், ஆடம்பர உடை என பல்வேறு வகையில் பணத்தை வீணடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அதிலும் சிலர் ஒருவருக்கொருவர் போட்டியாக நினைத்து, தன் சக நடிகருக்கு ஈடான அல்லது அதற்கும் அதிகமான செலவில் வாழ வேண்டும் என்ற போட்டியில், அவர்களுக்கு எதிராக பெரும் பொருட்செலவிலான பல்வேறு சொகுசு வசதிகளை மேற்கொள்வதில் குறிக்கோளாக இருந்து வருகின்றனர். இதுபோன்ற சூழல் தற்போதைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகின்றது.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் திரையுலகின் முக்கிய புள்ளியான ராப்பர் டிரேக், தனது சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்பிலான 767-300எஃப் ரகத்திலான போயிங் விமானத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விமானத்தை தனக்கென பிரத்யேக டிசைனில் வடிவமைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அபுரே ட்ரேக் கிரஹாம் (Aubrey Drake Graham) என்ற இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ராப் பாடல் இசைப்பதில் மிகவும் பிரபலமானவர். இதுமட்டுமின்றி, பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை மேற்கொள்ளும், மல்டி டேலண்ட் நபராக அவர் வளம் வந்துக்கொண்டிருக்கிறார்.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக திகழும் இவர், தனக்கென பயன்படுத்திக்கொள்ளும் வகையில், 30 இருக்கைகளை மட்டுமே கொண்டுள்ள, போயிங் ரக விமானத்தை வாங்கியுள்ளார். இந்த 30 இருக்கைகளையும் தனது வசதிக்கேற்ப, பிரத்யேமாக வடிவமைத்துள்ளார். மேலும், இந்த விமானத்தில் பல்வேறு சொகுசு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அந்தவகையில், விமானத்தின் இன்டீரியர் ராயல் லுக்கில், 5 நட்சத்திர சொகுசு விடுதியைப் போன்று உருவாக்கியுள்ளார். இத்துடன், இந்த விமானத்தின் மேற்பரப்பில், சில பிரத்யேக ஸ்டிக்கர்களையும் அவர் ஒட்டியுள்ளார். அது அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் லோகோ (சின்னம்) ஆகும். அவ்வாறு, விமானத்தின் வால் பகுதி மற்றும் முன்பக்க பக்கவாட்டு பகுதிகளில் இரு கைகள் கூப்பி வணங்குவதைப் போன்ற வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்த விமானத்தைப் பயன்பாட்டை அடுத்து நிறுத்தி வைக்கும் விதமாக, கனடா நாட்டு விமான நிலையங்களுடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். ஆகையால், விமானம் பயன்பாட்டை அடுத்து மற்ற வேலைகளில் கனடியன் ஏர்லைன் கார்கோஜெட் நிறுத்தி வைக்க தனியாக இடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இதுகுறித்த வீடியோவை ட்ரேக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோதான் ஹாலிவுட் திரையுலகின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. டிரேக்கின் இந்த செயலானது, உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாகவும் இதுபோன்று, பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. முக்கியமாக அண்மையில், ரூ. 132 கோடி மதிப்பிலான லா வோய்டர் நோய்ர் சூப்பர் காரை, போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ வாங்கியதாக தகவல்கள் பரவின. ஆனால், இந்த தகவலை அந்த கார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இவ்வாறு, பல்வேறு விஷயங்களை நாம் கூறிக் கொண்ட போகலாம், அதற்கேற்ப திரையுலகம் மற்றும் தொழிலதிபர்கள் பலர் அவர்களின் வாழ்க்கை பயணத்தை ஆடம்பரமாக மேற்கொள்ள பெருமளவிலான பணத்தை செலவழித்து வருகின்றனர். இந்த நிலையில், நம் நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டு கார் கராஜை பார்த்தால், இதுவே தோற்றுப்போகும் அளவுக்கு வியக்க வைக்கிறது. வாருங்கள் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் கார் கராஜ் சுவாரஸ்யங்களை காணலாம்.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

உலகின் ஆடம்பர வீடு

கடந்த ஆண்டு ஃபோர்ஸ் வர்த்தக பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில், உலகின் மிகவும் ஆடம்பரமான வீடு என்று பெருமையுடன் முதலிடத்தை முகேஷ் அம்பானியின் அன்டிலியா பெற்றது. அதில், அம்பானி வீட்டு கராஜ் பற்றியும் குறிப்பு எடுக்கப்பட்டு மதிப்பீட்டு செய்யப்பட்டிருக்கிறது.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

வீட்டின் சிறப்புகள் மும்பையிலுள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு 173.13 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 27 தளங்களை கொண்டது. ஒவ்வொரு தளங்களும், சாதாராண வீட்டின் மூன்று தளங்களுக்கு ஒப்பான உயரம் கொண்டது. 4 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு இடவசதி கொண்டது. சாதாரண வீடாக இதனை கட்டியிருந்தால், 60 மாடிகள் கொண்டதாக இருந்திருக்கும். இந்த வீட்டின் மதிப்பு ரூ.6,400 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

கார் பிரியர்

முகேஷ் அம்பானி ஒரு தீவிரமான கார் பிரியர். அவரிடம் நூற்றுக்கணக்கான இறக்குமதி கார்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அதில் பல கார்களை இந்த அன்டிலியா வீட்டிற்கு தன்னுடன் சேர்த்து குடி பெயர்த்துவிட்டார்.

அன்டிலியா வீட்டின் முதல் ஆறு தளங்களும் வாகனங்கள் நிறுத்துமிடமாகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 168 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

கார் பராமரிப்பு நிலையம்

அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாக செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர்.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

அதிகாரப்பூர்வ கார்

முகேஷ் அம்பானியிடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவர் பயன்படுத்தும் கார் மாடல் மேபக் 62 கார்தான். அதன் மதிப்பு ரூ.5 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கடுத்து, சமீபத்தில் வாங்கப்பட்ட குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்.

மேபக் 62 தவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆகிய கார்களையும் அவ்வப்போது பயன்படுத்துகிறார். அவர் அடிக்கடி பயன்படுத்தும் கார்கள் அனைத்தும் ஒரே தளத்தில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

மொட்ட மாடியில் ஹெலிபேட்

வீட்டின் மேல் தளத்தில் மூன்று ஹெலிபேடுகள் உள்ளன. மேலும், ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக சொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

விமானங்கள்

முகேஷ் அம்பானியிடம் ஏர்பஸ் 319, ஃபால்கன் 900இஎக்ஸ் மற்றும் போயிங் பிசினஸ் ஜெட்2 ஆகிய மூன்று விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் முகேஷ் அம்பானிக்காக உட்புறத்தில் விசேஷமாக வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டவை.

ஃபால்கன் 900இஎக்ஸ்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மிக பிரபலமான தனி நபர் பயன்பாட்டு விமானம்தான் ஃபால்கன் 900. இந்த விமானம் பல்வேறு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதில், நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்ட மாடல் ஃபால்கன் 900 இஎக்ஸ் மாடல். அதிகபட்சமாக 8,340 கிமீ தூரம் வரை பறக்க முடியும். ஹனிவெல் பிரைமஸ் ஏவியானிக் கட்டுப்பாட்டு சிஸ்டம் கொண்டது.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

விசேஷ உள் அமைப்பு

உட்புறத்தில் சிறிய அளவிலான ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்ற வகையில், கட்டமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், தற்காலிக அலுவலகமாகவும் அவர் பயன்படுத்தும் விதத்தில் சிறப்பு வசதிகள் உள்ளன. மேலும், சேட்டிலைட் டிவி, வயர்லெஸ் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

போயிங் பிசினஸ் ஜெட்- 2

இந்த விமானம் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 78 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தை முகேஷ் அம்பானியின் தனி பயன்பாட்டுக்காக பல்வேறு வசதிகளுடன் மாற்றியிருக்கின்றனர்.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

விஷேசம் என்ன?

விமானத்தின் விலை மட்டும் 70 மில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதன் உட்புற கட்டமைப்புக்கு கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வரை செலவழித்து, விசேஷமாக உள் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆலோசனைக் கூட்டங்கள், அலுவலகப் பணிகள் செய்வதற்கு ஏதுவாகன வசதிகள் உள்ளன. அத்துடன், படுக்கை அறை வசதியும் உள்ளது. இந்த விமானத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 13,200 டாலர்கள் செலவழியும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

ஏர்பஸ் 319 கார்ப்பரேட் ஜெட் தனது மனைவி நீட்டா அம்பானிக்கு முகேஷ் அம்பானி பரிசளித்த விமானம் இது. ரூ.242 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக இடவசதி, சொகுசு வசதிகள் நிரம்பிய தனிநபர் பயன்பாட்டு விமான மாடலாக விளங்குகிறது.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

நீட்டா அம்பானிக்கு அளிக்கப்பட்ட இந்த காஸ்ட்லி பரிசான ஏர்பஸ் 319 விமானம் இடைநில்லாமல் 11,100 கிமீ தூரம் வரை பறக்கக்கூடியது. மணிக்கு 1,012 கிமீ வேகம் வரை பறக்கக்கூடியது. உலகின் சிறந்த தனிநபர் பயன்பாட்டு விமானமாக வர்ணிக்கப்படுகிறது. இந்த மூன்று விமானங்களும், மும்பை விமான நிலையத்தின் தனி நபர் விமான நிறுத்துமிடத்தில்தான் நிறுத்தப்பட்டு இருக்கும்.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

ஆடம்பர படகு

முகேஷ் அம்பானியிடம் 20 மில்லியன் டாலர் மதிப்புமிக்க ஆடம்பர படகு ஒன்றும் உள்ளது.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

நீச்சல் குளம், ஹெலிபேட், ஜிம், மசாஜ் அறை, பொழுதுபோக்கு வசதிளை கொண்டது. மூன்றடுகளையும் இணைக்கும் விதத்தில், லிஃப்ட் வசதியும் உண்டு. 12 விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த ஆடம்பர படகில், 20 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த ஆடம்பர படகின் மின்சார தேவையில் 30 சதவீத அளவுக்கு சோலார் மின்தகடுகள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த உளவுத் துறை தகவலை அடுத்து, ரூ.10 கோடியில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கொண்ட புதிய பிஎம்டபிள்யூ சொகுசு கார் வாங்கி பயன்படுத்தி வருகிறார் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ்!

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் அடிப்படையிலான இந்த விசேஷ காரில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் தாக்குதல்களில் சேதமடையாத சேஸி, அடிப்பாகம் மற்றும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பாடியும் அதேபோன்று குண்டு துளைக்காத விசேஷ ஸ்டீலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவையும் இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rapper Drake Unveils His Private Boeing. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X