உங்கள் கார் ஸ்டார்ட் ஆகவில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

நாம் காலை எழுந்து பரபரப்பாக கிளம்பி அலுவலகம் செல்லும் நேரத்தில் காரை எடுத்து ஸ்டார்ட் செய்யும் நேரத்தில் கார் ஸ்டார்ட் ஆக வில்லை என்றால் அப்பொழுதும் வரும் கோபமும் எரிச்சலும் அதை அனுபவிப்பவர்களுக்கு

நாம் காலை எழுந்து பரபரப்பாக கிளம்பி அலுவலகம் செல்லும் நேரத்தில் காரை எடுத்து ஸ்டார்ட் செய்யும் நேரத்தில் கார் ஸ்டார்ட் ஆக வில்லை என்றால் அப்பொழுதும் வரும் கோபமும் எரிச்சலும் அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்கள் கார் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு பல காணரங்கள் இருக்கின்றன. அதை இங்கு காண்போம்

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

வீல் லாக்

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் லாக்கில் இருக்கும் போது காரை ஸ்டார்ட் செய்ய முடியாது. முதலில் அதை செக் செய்யுங்கள்

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

பேட்டரி

பெரும்பாலானோருக்கு கார் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பேட்டரியாக தான் இருக்கும். பேட்டரி இணைப்பில் கோளாறு, அல்லது பேட்டரியில் சார்ஜ் குறைந்திருப்பதும். இதில் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. காரை சாியாக நேரத்தில் பராமரிக்காமல் இருந்தால் பேட்டரி இணைப்பில் பிரச்னைகள் ஏற்படும். பேட்டரியை சரியான இடைவெளியில் பராமரிப்பதே நல்லது.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

கார் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் பேட்டரியை மாற்றாமல் இருத்தல், மறதி காரணமாக இரவு முழுவதும் காரின் முகப்பு விளக்கை எரியவிடுதல், கார் பேட்டரியில் தண்ணீரின் அளவு குறைந்திருத்தல் உள்ளட்ட பல காரணங்கள் இருக்கிறது. பேட்டரியை முறையாக பராமரிப்பதால் கார் ஸ்டார்ட் ஆவதில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

இக்னிஷன்

பேட்டரியில் எந்த பிரச்னையும் இல்லாத பட்சத்தில் நீங்கள் பரிசோதிக்க வேண்டியது, இக்னிஷனை தான் அது தான் பேட்டரிக்கு அதிகம் பிரச்னை ஏற்படும் பகுதி, முறையாக வேலை செய்யாத இக்னிஷன் சுவிட்ச் நமக்கு தலை வலியை ஏற்படுத்தும்.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

ஸ்டார்ட்டர்

ஸ்டார்ட்டர் என்பது வாகனத்தின் இன்ஜினை இயக்க சக்தியை வழங்கும் மோட்டார். இதில் பிரச்னை ஏற்பட்டாலும் கார் ஸ்டார்ட் ஆகாமல் பிரச்னையை ஏற்படுத்தும்.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

பெட்ரோல்

உங்கள் காரில் பெட்ரோல் இருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள் பெட்ரோல் இல்லாமல் இருப்பதும் குறைந்த அளவு பெட்ரோல் இருப்பதும் காரை ஸ்டார்ட் செய்ய விடாமல் தடுக்கும்.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

பில்டர்

இன்ஜினுக்கு பெட்ரோலை சுத்தப்படுத்தி அனுப்பும் பில்டரில் அடைப்புகள் இருந்தாலும் கார் ஸ்டாரட் ஆகாது. பொதுவாக 15,000 முதல் 20,000 கி.மீ., வரை இதை மாற்ற வேண்டும். இது கி.மீ வரையைறை காருக்கு கார் மாறுபடும். நீங்கள் பயன்படுத்தும் எரிபொருளின் தரமும் இதை நிர்ணயிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

பெட்ரோல் பம்ப்/ கார்பரேட்டர்

காரில் பெட்ரோலும் இருந்து இன்ஜின், பேட்டரி, ஸ்டார்ட்டர் சரியான வேலை செய்யும் பட்சத்தில் அடுத்த பிரச்னை பெட்ரோல் பம்ப்/ கார்பரேட்டரில் இருக்கலாம். இது தான் பெட்ரோலை இன்ஜினுக்கு பெட்ரோலை எடுத்து செல்லும் கருவி. இது சரியாக வேலை செய்யாவிட்டாலும், அல்லது இதில் அடைப்புகள் இருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

இருகிய இன்ஜின் ஆயில்

கார் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் வெளி சூழலில் உள்ள குளிருக்கு இன்ஜின் ஆயில் இருகிய நிலைக்கு மாற கூடும் இது இன்ஜினை இயக்க விடாமல் தடுத்தால் நம் காரை ஸ்டார்ட் செய்வதில் சிரமம் ஏற்படும்.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

டயமிங் பெல்ட்

இந்த டயமிங் பெல்ட் இது சரியாக செயல்பவில்லை எனில் இன்ஜினில் உராய்வு ஏற்பட்டு காரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் போகும். சுமார் 70,000 இல் இருந்து 1 லட்சம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை இந்த பெல்டை மாற்றுவது நல்லது.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

ஸ்பார்க் பிளக்

இக்னிஷயனுக்கு அடுத்ததாக பிரச்னை ஏற்படுத்தும் பகுதி ஸ்பார்க் பிளக் ஆனால் தற்போது தயாரிக்கப்படும் கார்களில் ஸ்பார்க் பிளக் பிரச்னைகள் அவ்வளவாக ஏற்படுவதில்லை, பழைய கார்களில் அடிக்கடி இப்பிரச்னை ஏற்படும். புதிய கார் வைத்திருப்பவர்கள் அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை. நீங்கள் சுமார் 1.5 லட்சம் கி.மீ., ஒரு முறை ஸ்பார்க் பிளக்கை மாற்றினாலோ போதுமானது.

உங்கள் கார் ஸ்டார்ட் ஆக வில்லையா? இதுதான் காரணமாக இருக்கும் !

பாதுகாப்பு அம்சங்கள்

நவீன கார்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் வந்துள்ளன. குறிப்பான தவறான சாவி மூலம் ஸ்டார்ட்ட செய்ய முற்பட்டால் அடுத்த 20 நிமிடங்களுக்க வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாத தொழிற்நுட்பம். எலக்ட்ரானிக் சாதனம் முலம் சாவியில்லாமல் வயர்லெஸில் இயங்க கூடிய தொழிற்நுட்பம் என உங்கள் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இதுவும் ஸ்டார்ட்டிங் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Common Reasons Your Car Won’t Start. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X