உங்கள் கார் சூடாகி நடுரோட்டில் நிற்கிறதா?

உங்கள் கார் இன்ஜின் அடிக்கடி சூடாகிறதா? அப்படி என்றால் அது காரில் ஏற்படபோகும் பெரும் பிரச்னைக்கான அறிகுறி பிரச்னையை கண்டறிந்து உடனே சரி செய்வது நல்லது.

உங்கள் கார் இன்ஜின் அடிக்கடி சூடாகிறதா? அப்படி என்றால் அது காரில் ஏற்படபோகும் பெரும் பிரச்னைக்கான அறிகுறி பிரச்னையை கண்டறிந்து உடனே சரி செய்வது நல்லது.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

கார்களில் நவீன தொழிற்நுட்பங்கள் வந்த பிறகு கார் இன்ஜின் சூடாவது என்பது அரிது தான். இவ்வளவு தொழிற்நுட்பங்களுக்கும் இடையிலும் உங்கள் கார் இன்ஜின் சூடாகிறது என்றால் அது முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்னையாக தானே இருக்கும். நமது கார் இன்ஜின் ஏன் சூடாகிறது என்பதற்கான காரணங்களை இங்கு காணலாம்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

காரின் இன்ஜினை சூடாக்குவது என்பது அதன் வாழ்நாளுக்கு நாம் வைக்கும் வேட்டு. இதனால் காரில் இன்ஜின் சூடாகிறது என்ற சிமிஞை காண்பித்தால் அதை உடனடியாக என்னவென்று பார்ப்பது நல்லது. கார் அதிமாக சூடானால் கார் இன்ஜினில் இருந்து புகை கிளம்பி கார் உங்களை நடுரோட்டிலேயே நிறுத்துவதோடு பெரும் செலவையும் இழுத்துவிடும்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

சந்தர்ப்ப சூழ்நிலையில் கார் சூடாகி புகைவந்தால் உடனடியாக காரை பாதுகாப்பான பகுதிக்கு ஓரங்கட்டி விடுவது நல்லது. அது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும்.

காரை நிறுத்தியவுடன் காரின் பேனட்டை திறக்க முயற்சிக்காதீர்கள். காரின் பேனட் சூடாக இருக்கும். அந்த சூடு குறைந்த பின்பு காரின் பேனட்டை திறக்கலாம்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

காரின் பேனட்டை திறந்த பின்பு ரேடியேட்டர் மற்றும் ரிசர்வர் டேங்கன் கூலண்ட் அளவை பாருங்கள். கூலண்ட் அளவை பார்க்க உங்கள் கார் மெனுவலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ரேடியேட்டரை திறந்து எவ்வளவு சூடு இருக்கிறது என்பதை பாருங்கள். காரை நிறுத்தியதும் ரேட்டியட்டர் கேப்பை திறக்காதீர்கள் அதில் இருந்து அதிக சூடாக புகைவரலாம். ரேடியேட்டர் கேப்பை திறக்கும் போது ஏதேனும் துணியை பயன்படுத்துவது சிறந்தது.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

ரேடியேட்டரில் மேல்பக்கம் மற்றும் கீழ் பக்கம் இருக்கும் குழாய்களை பாருங்கள் அதில் ஏதேனும் ஒரு இடத்தில் சரியான அடைப்பு இல்லாமல் இருந்தாலோ, கழண்டு இருந்தாலோ, அதில் சேதம் இருந்தாலோ கார் சூடாகலாம்.

ரேடியேட்டர் பேன் வேலை செய்கிறதா என்பதை காரை ஸ்டார்ட் செய்து பாருங்கள் அதுதான் பெரும்பாலானோருக்கு பிரச்னையாக இருக்கும்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

இவை எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் பிரச்னை சற்று தீவிரம் தான். தீவிரமான பிரச்னைகள் என்னென்ன வர வாயப்புகள் உள்ளன, அதற்கு காரணம் என்ன தீர்வு என்ன என்பதை கீழே காணலாம்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

கூலண்ட்டில் கோளாறு

கூலண்டாக ஊற்றப்படும் ஆயில் இல்லாமல் இருந்தல் அல்லது குறைவாக இருத்தல் ஆகியன இப்பிரச்னையை ஏற்படுத்தும். சரியாக சர்வீஸ் நேரத்தில் சர்வீஸ் செய்யாத கார்கள். ரேடியோட்டரில் உள்ள ஏதேனும் ஒரு குழாயில் உள்ள லீக் அல்லது சேதம், வாட்டர் பம்ப், ஹீட்டர் கோர், ஹீட் கேஸ்கட், ப்ரீஸ் பிளக், ஆட்டோமெட்டிங் கியர் ஆயில் கூலர், சிலிண்டர் ஹெட் ஆகிய இடங்களில் லீக் ஏற்பட்டாலும் இந்த கூலண்ட் ஆயில்கள் லீக் ஆகிவிட வாய்புள்ளது. முறையான கால இடைவெளியில் காரை சர்வீஸ் செய்தாலே இப்பிரச்னையை தவிர்க்கலாம். ஹீட் ஆகி ரோட்டில் நிற்கும் நேரத்தில் ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றி சமாளிக்கலாம். ஆனால் அது தற்காலிகம் தான்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

ரேடியேட்டர் குழாய்

கூலண்ட் சரியான அளவில் இருந்தால் அடுத்த பிரச்னை ரேடியேட்டர் குழாயில் இருக்கலாம். அதில் அடைப்புகள், சரியான சுழற்ச்சியின்மை, ஆகிய காரணங்களால் கார் ஹீட் ஆகலாம். இந்த பிரச்சனைகளில் மெக்கானிக் கொண்டு அடைப்பை சரி செய்வதே இதற்கு ஒரே தீர்வு

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

ரேடியேட்டர் பேன்

காரில் உள்ள சூட்டை முழுவதும் வெளியே அனுப்புவது ரேடியேட்டர் பேன் தான் அது வேலை செய்யவல்லை என்றால் காரில் சூடு வேகமாக ஏறிவிடும். காரின் ரேடியேட்டர் பேன் வேலை செய்கிறதா என்பதை பார்க்க காரின் ஏசியை ஆன் செய்தாலே ரேடியேட்டர் பேன் சுத்தவேண்டும். இல்லாவிட்டால் உடனடியாக மெக்கானிக்கிடம் காரை கொண்டு செல்வது நல்லது. முடிந்தளவு குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

ரேடியேட்டர் ரிப்பேர்

இவை அனைத்தும் சரியாக இருந்தால் உங்கள் ரேடியேட்டரில்தான் பிரச்னை இருக்கும். ரேடியேட்டர் சரியான சூட்டை வெளியேற்றும் வேலையை செய்திருக்காது. தவறான கூலண்டை பயன்படுத்தும் பட்சத்தில் இந்த பிரச்னை இருக்கும்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

வாட்டர் பம்ப்

பொதுவாக வாட்டர்பம்ப்களில் பிரச்னைகள் ஏற்படுவதில்லை, நீங்கள் காரை சுமார் 50,000 கி.மீ.,க்கு மேல் ஒட்டியிருந்தால் இந்த பிரச்னை ஏற்பட வாயப்புள்ளது. வாட்டர் வால்வு சீல்களில் லீக் இருக்கிறாதா என்பதையும் செக் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

தெர்மோஸ்டாட்

தெர்மோஸ்டாட் என்பது கூலண்ட் ஆயில் இருக்கும் இடம். இது சாதாரணமாக அடைத்த நிலையில் இருக்கும். காரின் இன்ஜின் ஸ்டார்ட் ஆகி குறிப்பிட்ட அளவு சூடு ஏறிய பின்பு திறக்கும்.பின்பு கூலண்ட் ஆயில் செயல்பட்டு சூட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். தெர்மோஸ்டாட் திறக்காமல் இருந்தால் இன்ஜின் சூடு அதிகமாகும். பழுதான தெர்மோஸ்டார்டை மாற்றுவது மட்டும் தான் ஒரே வழி.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

ஹெட் கேஸ்கட்பழுது

மேல் உங்கள் விஷயங்கள் காரின் சூட்டிற்கு காரணமாக இல்லாத பட்சத்தில் கடைசியான வாய்ப்புதான் ஹெட் கேஸ்கட் பழுது. இன்ஜினுக்கும் சிலிண்டருக்கும் இடையே கூலண்ட், இன்ஜின்ஆயில் ஆகியவை செல்வதை கட்டுப்படுத்தும் கருவி இது. இதில் கோளாறு ஏற்பட்டால் காரில் சூடு அதிகரிக்கும். புகைவெளியிடும் கருவி வழியாக கூலண்ட் வெளியாகுதல், புகை வெளியிடும் கருவி வழியாக வெள்ளை புகை வெளியாகுதல், இன்ஜின் ஆயில் நிலை மாறுதல் உள்ளிட்டவற்றை வைத்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கார் சூடாகிறதா? கவனம் தேவை

உங்கள் கார் சூடானால் அசால்ட்டாக இருந்து விடாதீர்கள் அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து அதற்கான சரியான நடவடிக்கையை எடுத்தால் உங்களை எதிர்நோக்கியிருக்கும் பெரும் செலவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
reasons of car overheating with remedies. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X