Just In
- 33 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 16 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- News
மறந்துடாதீங்க.. நம்ம முதல்வரே இளைஞரணியில் இருந்து வந்தவர் தான்! சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்
- Technology
Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Movies
Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?
- Finance
சீனாவிடம் யாரும் கடன் வாங்காதீங்க.... எச்சரிக்கை விடும் வங்கதேச அமைச்சர்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
உல்லாச கப்பலில் எல்லாத்தையும் அனுபவிக்க இப்படி ஒரு வழி இருக்கா? இதை எல்லாம் இப்பவே தெரிஞ்சு வெச்சுக்கணும்!
உல்லாச கப்பல்களில் எல்லாவற்றையும் ரிலாக்ஸாக அனுபவிக்க வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான்.

உல்லாச கப்பல்களை பற்றி பேசும்போது 2 விஷயங்களை குறிப்பிடுவார்கள். ஒன்று 'சீ டே' (Sea Day). மற்றொன்று 'போர்ட் டே' (Port day). இதில், 'சீ டே' என்பது உல்லாச கப்பல் துறைமுகத்தில் நிற்காத நாள் ஆகும். அதாவது உல்லாச கப்பல் கடலில் பயணம் செய்து கொண்டிருக்கும். இந்த நாட்களில், உல்லாச கப்பல்களில் இருக்கும் வசதிகளை எல்லாம் பயணிகள் அனுபவிக்கலாம்.

அதே நேரத்தில் 'போர்ட் டே' என்பது உல்லாச கப்பல், துறைமுகத்தில் இருக்கும் நாள் ஆகும். இந்த நாளில், உல்லாச கப்பல் சென்றுள்ள நகரத்தை பயணிகள் சுற்றி பார்க்கலாம். ஷாப்பிங் செய்வது, கடற்கரைகளை சுற்றி பார்ப்பது, அந்த நகரத்தின் உணவை ருசி பார்ப்பது என செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

பொதுவாக 'போர்ட் டே' சமயத்தில் பெரும்பாலான பயணிகள், உல்லாச கப்பலில் இருந்து இறங்கி, ஊர் சுற்றி பார்க்க கிளம்பி விடுவார்கள். ஆனால் ஊர் சுற்றுவதற்கு செல்லாமல், நீங்கள் உல்லாச கப்பலிலேயே இருந்தால், உங்களுக்கு பல்வேறு அதிசயங்கள் நடக்கும். அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

'போர்ட் டே' அன்று வெளியில் செல்லாமல் நீங்கள் உல்லாச கப்பலிலேயே இருந்தால், உங்களுக்கு கிடைக்க கூடிய முதல் நன்மை ஸ்பா டிஸ்கவுண்ட் (Spa Discount). இந்த நாளில் பெரும்பாலான பயணிகள் கரைக்கு சென்று விடுவார்கள் என்பது நீங்கள் பயணம் செய்யும் உல்லாச கப்பலின் ஸ்பா நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும்.

எனவே 'போர்ட் டே' அன்று, உல்லாச கப்பல்களின் ஸ்பாக்கள் தள்ளுபடிகளை வாரி வழங்கும். வழக்கமான கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படலாம் என கூறுகின்றனர். இந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள் உல்லாச கப்பலுக்கு, உல்லாச கப்பல் மாறுபடலாம். எனினும் 'போர்ட் டே' அன்று நீங்கள் மிகவும் குறைவான செலவில் மசாஜ் செய்து கொள்ள முடியும்.

அதேபோல் 'போர்ட் டே' அன்று, உல்லாச கப்பல்களின் பார்களில் உங்களுக்கு விரைவான சேவை கிடைக்கும். பெரும்பாலான பயணிகள் கரைக்கு சென்று விடுவார்கள் என்பதால், பார்கள் காற்று வாங்கும். எனவே பார்களில் உங்களுக்கு விரைவாக சேவை செய்வார்கள். 'சீ டே' அன்று மதுபானங்களை கொண்டு வருபவரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு நீங்கள் போராட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 'போர்ட் டே' அன்று, உல்லாச கப்பல்களின் பார்களில் பணியாற்றுபவர்களுடன் தோழமையுடன் பேசி பழகுவதற்கு உங்களுக்கு சந்தர்ப்பங்கள் அமையும். அதேபோல் 'போர்ட் டே' அன்று உல்லாச கப்பல்களின் நீச்சல் குளங்களிலும் நீங்கள் 'என்ஜாய்' செய்யலாம். பொதுவாக 'சீ டே' அன்று, நீச்சல் குளங்களில் பயணிகள் நிறைய பேர் இருப்பார்கள்.

எனவே நீச்சல் குளங்கள் வழங்கும் மகிழ்ச்சியை உங்களால் சுதந்திரமாக அனுபவிக்க முடியாது. ஆனால் 'போர்ட் டே' அன்று, நீங்கள் நீச்சல் குளங்களில் 'என்ஜாய்' செய்யலாம். உல்லாச கப்பல்களில் ஸ்பா, பார், நீச்சல் குளங்கள் ஆகியவை மட்டுமல்லாது, தீம் பார்க்குகளில் (Theme Parks) இருப்பதை போன்ற வாட்டர் கேம்களும் (Water Games) இருக்கும்.

'சீ டே' அன்று, இந்த கேம்களை நீங்கள் விளையாட வேண்டுமென்றால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஆனால் 'போர்ட் டே' அன்று இந்த விளையாட்டுக்களையும் நீங்கள் ஆசை தீர விளையாடி மகிழலாம். அதேபோல் 'போர்ட் டே' அன்று, உல்லாச கப்பல்களில் இருக்கும் ஜிம்களும் (Gym) கூட காற்று வாங்கி கொண்டுதான் இருக்கும்.

எனவே கூட்ட நெரிசல் இல்லாமல் உங்களால் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். எனவே உல்லாச கப்பல்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கூட்ட நெரிசல் இல்லாமல் முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால், அதற்கு 'போர்ட் டே'-தான் மிகவும் ஏற்றது. ஊர் சுற்றுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், 'போர்ட் டே'-வை நீங்கள் சரியான வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல் உல்லாச கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் நகரத்தை நீங்கள் ஏற்கனவே சுற்றி பார்த்தவர் என்றாலும் கூட, 'போர்ட் டே' அன்று, உல்லாச கப்பலிலேயே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏற்கனவே சுற்றி பார்த்த நகரத்தை மீண்டும் பார்ப்பதை விட, உல்லாச கப்பல்களின் வசதிகளை கூட்ட நெரிசல் இல்லாமல் அனுபவிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்க கூடும்.
-
டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா... எலான் மஸ்கின் "மாஸ்" திட்டம்...
-
போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!
-
விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!