விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

இந்தியாவைச் சேர்ந்த Reliance Jio நிறுவனம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டு இணைவின் வாயிலாக நாடு முழுதும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது குறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

மலிவு கட்டண இணைய வழி சேவை மற்றும் தொலை தொடர்பு ஆகியவற்றிற்கு பெயர்போன நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இருக்கின்றது. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், மிக சமீபத்தில் நாட்டில் மிகவும் பிரமாண்டமான மின் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

இதைத்தொடர்ந்து, மின் வாகன இயக்கத்தில் மேலும் தீவிரம் காட்டும் வகையில் இன்னும் சில புதிய நடவடிக்கைகளில் நிறுவனம் களமிறங்க தொடங்கியிருக்கின்றது. அந்தவகையிில், நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

இதற்காக ரிலையன்ஸ் ஜியோ இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனங்களிலன் கூட்டணயில் மேலும் ஒரு நிறுவனமாக ப்ளூஸ்மார்ட்-ம் சேர்ந்திருக்கின்றது. இவர்கள் மூவரும் இணைந்தே மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றனர்.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிறுவனங்களின் கூட்டிணைவில் உருவாக்கப்படும் மின்வாகன சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உள்கட்டமைப்பிற்கான திட்டமிடுதல், மேம்பாடு மற்றும் செயல்பாடு ஆகிய அனைத்திலுமே நிறுவனங்கள் இணைந்து செயல்பட இருக்கின்றன.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, தேசத்தின் தலை நகரத்திலேயே இந்த கூட்டணி முதல் கட்ட சார்ஜிங் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட இருக்கின்றன. ஒரே நேரத்தில் 30 மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் வசதி வாய்ப்பு இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகளவில் தனது மின் வாகன சார்ஜ் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதே யுக்தியைப் பயன்படுத்தியே இந்தியாவிலும் அது உலக தர மின் வாகன சார்ஜிங் மையங்களை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

ஆகையால், மிக விரைவில் இந்தியாவில் உலக தரத்திலான மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரிலையன்ஸ் ஜியோ - பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவன கூட்டணி மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி நிறுவனத்தின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணியிலும் களமிறங்க இருக்கின்றன.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

தற்போது நிறுவனத்தின்கீழ் 5,500 பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டுக்க கொண்டிருக்கின்றன. இதன் எண்ணிக்கையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் கூடுதலாக 1,400 மையங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகையால், நிறுவனம் பெட்ரோல் பங்க் மற்றும் மின்வாகனங்களுக்கான புதிய சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் தீவிரமாக களமிறங்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

இந்தியாவில் போதியளவு மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாற தயக்கம் காட்டுகின்றனர். அதேவேலையில், கடந்த காலங்களைக் காட்டிலும் மின் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துக் காணப்படுகின்றது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

புதிய சார்ஜிங் மையங்களின் வருகை இந்த நிலையை பல மடங்கு உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனடிப்படையிலே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் களமிறங்கியிருக்கின்றன. இது நிச்சயம் பல மடங்கு மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய உதவும் என நம்பப்படுகின்றது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்... நெட்பேக்கைபோல் மலிவு கட்டணத்தில் சார்ஜ் செஞ்சிக்கலாமா?

ரிலையன்ஸ் நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீட்டில் மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு ஆலையைத் தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தகுந்தது. 'கிரீன் எனர்ஜி ஜிகா காம்பளக்ஸ்' எனும் பெயரில் பிரமாண்ட பேட்டரி உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ. 75 ஆயிரம் கோடி முதலீட்டில் இத்தொழிலில் நிறுவனம் களமிறங்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
Reliance jio blusmart british petroleum joins hand for ev charging stations in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X