டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு...!!

இந்திய தலைநகர் டெல்லியில் ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகன மாசுபாட்டினை கண்டறிய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தினை டெல்லி உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இனி காணலாம்.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

தலைநகர் டெல்லியில் இப்போதைய பிரச்சினை காற்று மாசுபாடு பற்றியதுதான். காற்று மாசுபாட்டுக்கு வாகன புகை பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. தலைநகரில் இரு சக்கர வாகனங்களுக்கு இணையாக நான்கு சக்கர வாகனங்களின் பெருக்கம் உள்ளது. மேலும் அருகில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து தினசரி வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம்.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

டெல்லியில், வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் வெகுவாக உயர்ந்து வருவதால். வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசுபாடு வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்குகள் ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றன.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

டெல்லியில் அபாய அளவை தாண்டி காற்று மாசுபாடு நிலவி வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசுபாட்டால், புழுதி படர்ந்த படலம் கண்ணை மறைப்பதால் பகல் நேரத்திலும் வாகனங்கள் விளக்குகள் எரிய விட்டவாறு செல்கின்றன.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

இந்நிலையில் டெல்லியில் ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகன மாசுபாட்டினை கண்டறிய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தினை டெல்லி உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

தற்போது சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்தில் சோதனை கட்டத்தில் உள்ள ரிமோட் சென்சார்களை ஆய்வு செய்து வரும் பிப்ரவரி மாதத்திற்குள் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

இதுகுறித்து சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் மற்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தில் இயக்குனருமான சுனிதா நாராயண் கூறியபோது, அதிக மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய மொபைல் வேன்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டது.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

ஆனால் அதற்கு அதிக வேலையாட்கள் தேவைப்பட்டதால், மேலும் அடுத்த குளிர்காலம் வரும்முன் வாகன சோதனையை தீவிர படுத்தவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகன மாசுபாட்டினை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சுனிதா நாராயண் கூறினார்.

டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

இதன் முதற் கட்டமாக டெல்லியில் நுழையும் வெளிமாநில வாகனங்களை சோதனையிட விரைவில் டெல்லி மாநகர எல்லைகளில் ரிமோட் சென்சார் பொருத்தப்படும் என மாசு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் அதிக தரும் வாகனங்கள் என நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 500 வாகனங்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Remote sensing to detect vehicular pollution in Delhi: Read in Tamil
Story first published: Thursday, January 17, 2019, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X