பெண் செய்த காரியத்தால் நொறுங்கிய கடை! இதனால கூட விபத்து நடக்குமா! சுத்தி இருந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க!

எந்தவொரு வேலையை செய்யும்போதும் நாம் பதற்றமோ அல்லது குழப்பமோ அடைய கூடாது. அனைத்து நேரங்களிலும் தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் எடுத்த காரியம் வெற்றி பெறும். குறிப்பாக கார் போன்ற வாகனங்களை ஓட்டும்போது பதற்றம், குழப்பம் எல்லாம் இருக்கவே கூடாது.

ஆனால் பரபரப்பான சாலைகளில் கார் ஓட்டும்போது நிறைய பேர் திடீரென பதற்றமடைந்து விடுகின்றனர். இது நல்ல விஷயம் கிடையாது. ஏனெனில் இந்த பதற்றம், சாலை விபத்துக்களுக்கு வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த சூழலில் பதற்றம் காரணமாக நடைபெற்ற ஒரு சாலை விபத்து குறித்த தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. மற்றவர்கள் யாரும் இந்த தவறை செய்து விட கூடாது என்பதற்காக அந்த விபத்து குறித்த தகவல்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

பெண் செய்த காரியத்தால் நொறுங்கிய கடை! இதனால கூட விபத்து நடக்குமா! சுத்தி இருந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க!

என்ன ஆச்சு?

Nikhil Rana என்ற யூ-டியூப் சேனலில் தற்போது சாலை விபத்து தொடர்பான வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த விபத்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று பெண் ஒருவர் ரெனால்ட் க்விட் (Renault Kwid) காரை ஓட்டி கொண்டு வந்துள்ளார். ஒரு சமயத்தில் காரை நிறுத்த வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. காரை நிறுத்த வேண்டுமென்றால் பிரேக் பெடலைதான் மிதிக்க வேண்டும்.

ஆனால் அந்த பெண் தவறுதலாக ஆக்ஸலரேட்டர் பெடலை மிதித்து விட்டார். இதனால் அந்த பெண்ணின் கட்டுப்பாட்டை கார் திடீரென இழந்தது. இதன்பின் அங்கிருந்த கடை ஒன்றின் மீது அந்த கார் மோதியது. இத்தனைக்கு 4-5 படிக்கட்டுகளின் மீது ஏறி, கார் கடையின் மீது மோதியுள்ளது. அந்த கடையின் முன் பகுதியில், கண்ணாடி டோர் ஒன்றை வைத்திருந்தனர். அதையும் கார் நொறுக்கி விட்டது. அத்துடன் கடைக்குள் இருந்த சில பொருட்களும் சுக்குநூறாக நொறுங்கி விட்டன.

ஆனால் இந்த விபத்து காரணமாக காரை ஓட்டிய பெண்ணுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா? அல்லது மற்றவர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா? என்ற தகவல் நமக்கு கிடைக்கவில்லை. டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாசகர்கள் யாரும் இந்த தவறை செய்து விட கூடாது என்பதற்காகவே இந்த செய்தியை வழங்கியுள்ளோம். கார் ஓட்டும்போது ஒருவர் ஏன் பதற்றம் அடைய கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.

இது முதல் முறையல்ல!

கார் ஓட்டும்போது நீங்கள் பதற்றம் அடைந்தால், கவனம் சிதறி விடும். இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படலாம். குறிப்பாக பிரேக் பெடலை மிதிப்பதற்கு பதிலாக ஆக்ஸலரேட்டர் பெடலை தவறுதலாக மிதித்து விட கூடாது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் பிரேக் பெடலுக்கு பதிலாக ஆக்ஸலரேட்டர் பெடலை மிதித்த காரணத்தால் நிறைய விபத்துக்கள் இங்கு நடைபெற்றுள்ளன.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதற்கு உதாரணம். அங்கு பெண் ஒருவர் டாடா பன்ச் (Tata Punch) காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக காரின் பெடல்களை அவர் மாற்றி மிதித்து விட்டார். இதன் காரணமாக 2 டூவீலர்கள் மற்றும் மாருதி ஆம்னி (Maruti Omni) ஆகியவற்றின் மீது அந்த கார் மோதி விட்டது. எனவே எக்காரணத்தை கொண்டும் காரின் பெடல்களை தவறுதலாக மிதித்து விடாதீர்கள்.

இதுதான் காரணமா!

கார்களில் ஆக்ஸலரேட்டர் பெடலும், பிரேக் பெடலும் வெவ்வேறு உயரத்தில் இருக்கும். ஆக்ஸலரேட்டர் பெடல் மற்றும் பிரேக் பெடல் ஆகிய 2 பெடல்களுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். கார் டிரைவர்கள் தவறுதலாக மாற்றி மிதித்து விட கூடாது என்பதற்காகவே ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்களை, கார் உற்பத்தி நிறுவனங்கள் வெவ்வேறு உயரத்தில் வழங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Renault kwid car accident video dont make this mistake while driving
Story first published: Wednesday, February 1, 2023, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X