காலாவதிக்கு முன் காப்பீடு புதுப்பிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்து... அரசின் உத்தரவால் அதிர்ச்சி?

வாகனங்களின் இன்சூரன்ஸ் நாட்கள் காலாவதியாவதற்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய உத்தரவை மத்திய பிரதேசத்தின் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் வாகனத்தின் பதிவெண் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

காலாவதிக்கு முன் காப்பீடு புதுப்பிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்து... அரசின் உத்தரவால் அதிர்ச்சி?

மத்திய பிரதேச மாநிலத்தின் போக்குவரத்துத்துறை கடந்த 20ம் தேதி அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களுக்கான இன்சூரன்ஸை காலாவதி தேதிக்கு முன்னதாக கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும்பட்சத்தில் வாகன ஓட்டிகள் கடுமையான பின்விளைவைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. அதன்படி, வாகனத்தின் பதிவெண் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

காலாவதிக்கு முன் காப்பீடு புதுப்பிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்து... அரசின் உத்தரவால் அதிர்ச்சி?

முன்னதாக புதிய வாகனங்கள் வாங்கும்போது ஓராண்டுக்கு காப்பீடு செய்வது கட்டாயமாக இருந்தது. இதனை வாகனத்தின் உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காப்பீடு செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது அந்த வாகனத்தால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றிற்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

காலாவதிக்கு முன் இன்சூரன்ஸ் புதிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்தாகும் அபயாம்... அரசின் புதிய உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!

இதேபோன்று, காப்பீடு செய்யாத வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் சட்டமும் கடந்த 1988ம் ஆண்டு முதல் மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதம் 20ம் தேதி ஓர் உத்தரவை வெளியிட்டது.

காலாவதிக்கு முன் இன்சூரன்ஸ் புதிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்தாகும் அபயாம்... அரசின் புதிய உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!

அதில், புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை கட்டாயமாக இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்ற புதிய வழிகாட்டுதலை ஐஆர்டிஏ உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இதன்மூலம், நாட்டில் இயக்கப்படும் 40 முதல் 50 சதவீதம் வரையான காப்பீடு பெறாத வாகனங்கள், முறையான இன்சூரன்ஸை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விதிமுறையை பொது காப்பீட்டு நிறுவனங்கள் இன்றளவும் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என கூறப்படுகிறது.

காலாவதிக்கு முன் இன்சூரன்ஸ் புதிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்தாகும் அபயாம்... அரசின் புதிய உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள், வாகனத்தின் இன்சூரன்ஸை காலாவதி தேதிக்கு முன்னதாக புதிப்பிக்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில், வாகனங்களின் பதிவெண் ரத்து செய்யப்படும் என வாகன ஓட்டிகளுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதுகுறித்த அம்மாநிலத்தின் போக்குவரத்துத்துறை ஆணையர் சைலேந்திர ஸ்ரீவஸ்தவா டிஓஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

காலாவதிக்கு முன் இன்சூரன்ஸ் புதிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்தாகும் அபயாம்... அரசின் புதிய உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!

"உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தற்போது காப்பீட்டாளர்களால் வழங்கப்படவில்லை. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த ஒரு வருட காப்பீட்டு காலம் முடிவடைந்த பின்னர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான காப்பீட்டையும் சேர்த்து புதுப்பிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

காலாவதிக்கு முன் இன்சூரன்ஸ் புதிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்தாகும் அபயாம்... அரசின் புதிய உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!

மேலும் பேசிய அவர், "நீதிமன்ற உத்தரவின் படி, அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கும் புதிய கார்களுக்கு மூன்று வருட மூன்றாம் நபர் காப்பீடும் மற்றும் புதிய இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டு மூன்றாம் நபர் காப்பீட்டையும் வழங்க வேண்டும்" என கூறினார்.

காலாவதிக்கு முன் இன்சூரன்ஸ் புதிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்தாகும் அபயாம்... அரசின் புதிய உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!

மோட்டார் வாகனங்கள் சட்டம், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது. இது வாகன திருட்டு மற்றும் சேதம் உள்ளிட்டவற்றை கவர் செய்ய உதவுகிறது. தற்போது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அல்லது மூன்று ஆண்டுகள் என்ற காப்பீடு திட்டம் காருக்கும், ஐந்து வருட காப்பீடு திட்டம் இருசக்கர வாகனங்களுக்கும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Renew Your Vehicle Insurance Before Expiry Or You May Lose Registration. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X