விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

விமானங்களை பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்கள் எப்போதும் நமக்கு ஆர்வத்தை தரவல்லவை. இதனாலேயே விமானத்தை பற்றியும், அதனை சுற்றியும் நடக்கும் பல்வேறு விதமான விஷயங்களை இதற்குமுன் பார்த்துள்ளோம்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

விமானம் என்றாலே முதலாவதாக நமக்கு நினைவிற்கு வருவது, அதன் பயண சூழல் தான். சராசரியாக, விமானங்கள் ஒவ்வொன்றும் 30,000 அடியில் இருந்து 40,000 அடி வரையிலான உயரத்திற்கு பறக்கின்றன. இவ்வளவு அடி உயரத்தில், நூற்றுக்கணக்கான பயணிகளுடன் விமானத்தை இயக்குவதற்கு நிச்சயம் அதிக திறன்கள் வேண்டும்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

அதனால் தான் விமான ஓட்டியை கேப்டன் என அழைக்கிறார்கள். அவ்வளவு அடி உயரத்தில் பறப்பது கூட பரவாயில்லை, அதனை காட்டிலும் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் தான் சிரமமான காரியமாகும். அதற்கு தான் விமானிகளுக்கு கூடுதலாக பயிற்சிகள் கற்பிக்கப்படும். இவ்வாறு விமானத்தை இயக்குவது என்றால் விமானி மட்டும் தான் நம் நினைவிற்கு வருகிறார்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

ஆனால் உண்மையில், 'ஃபர்ஸ்ட் ஆபிசர்' (First Officer) எனப்படும் துணை விமானியை பற்றி பெரும்பாலானோர் சிந்திப்பதே இல்லை. முதன்மை விமானிக்கு இணையாக துணை விமானியின் பணியும் சிரமமானது மற்றும் பயணத்தின்போது அதீத முக்கியமானது ஆகும். அத்தகைய ஃபர்ஸ்ட் ஆபிசர் விமானத்தில் என்னென்ன பணிகளை கவனித்து கொள்வார் என்பதை இனி பார்க்கலாம்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

துணை விமானி என்றதும் அவர் விமானிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் எடுபுடி என்று நினைத்துவிட வேண்டும். ஏனெனில் விமானத்தின் காக்பிட் பகுதியில் விமானிக்கு வலதுபுறத்தில் அமரும் துணை விமானி என்பவர் உதவி விமானி அல்ல. அவராலும் விமானத்தை இயக்க முடியும். ஆதலால் அவரை துணை விமானி என்று அழைப்பது கூட சரியாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

விமானி எந்த அளவிற்கு பயிற்சி பெற்றிருப்பரோ அந்த அளவிற்கு ஃபர்ஸ்ட் ஆபிசரும் பயிற்சி பெற்றிருப்பார். நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் விஐபிகளை கொண்டு செல்லும் விமானத்தை ஒரேயொருவரை நம்பி கொடுக்க இயலாது என்பதற்காகவே ஃபர்ஸ்ட் ஆபிசரும் பணியமர்த்தப்படுகிறார். விமானியும், ஃபர்ஸ்ட் ஆபிசரும் அவர்களது அனுபவத்தில் தான் வேறுப்படுகின்றனர்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

அதாவது பொதுவாக, விமானி விமானங்களை இயக்குவதில் அனுபவம் மிக்கவராக இருப்பார். ஃபர்ஸ்ட் ஆபிசர் சற்று அனுபவம் குறைந்தவராக இருப்பார், அவ்வளவுதான். ஃபர்ஸ்ட் ஆபிசரின் முதன்மையான பணி என்று பார்த்தால், இயங்குவதற்கு விமானத்தை தயார்படுத்துவதில் விமானிக்கு உதவி செய்தல் ஆகும். அத்துடன், பயணத்தின்போது விமானத்தின் இயக்கத்தில் ஏதேனும் வித்தியாசமோ அல்லது வேறுப்பாடோ தெரிந்தால் அதனை உடனடியாக விமானிக்கு தெரியப்படுத்துதலும் ஆகும்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

பயணத்திற்கு முன்பாக செல்லவுள்ள பகுதிகளில் காலநிலை எவ்வாறு உள்ளது, விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் முறையாக இயங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்தி கொள்வதும் ஃபர்ஸ்ட் ஆபிசரின் பணி ஆகும். ஏற்கனவே கூறியதுதான், விமானத்தை இயக்குவதில் டேக்-ஆஃப்பும், லேண்டிங்கும் தான் சற்று சிரமமானது.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

அத்தகைய சமயங்களில் விமானிக்கு உதவுவதை ஃபர்ஸ்ட் ஆபிசர் தலையாய கடமையாக கொண்டுள்ளார். மேலும், பயணத்தின்போது விமானி ஓய்வெடுக்கும் சமயத்தில் அவரது பணியையும் ஃபர்ஸ்ட் ஆபிசர் தான் கவனித்து கொள்வார். இவ்வாறு விமானம் தொடர்ந்து பாதுகாப்பாகவும், செல்ல வேண்டிய இடத்திற்கு எந்தவொரு இடையூறும் இன்றி செல்வதையும் பேணுவதில் ஃபர்ஸ்ட் ஆபிசரின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

பேருந்து, இரயில்களை போல சுமைகளை விமானங்களில் எங்கு வேண்டுமானாலும் வைத்து செல்ல இயலாது. ஆதலால் விமானத்தின் எடையை சமச்சீர் படுத்துவதும் ஃபர்ஸ்ட் ஆபிசரின் பணி ஆகும். எடை மட்டுமின்றி, எரிபொருளின் அளவை மேற்பார்வை செய்வது, விமானம் ஓய்வு நிலையில் இருக்கும்போது க்ரவுண்ட் பவர் யூனிட்டை மேற்பார்வை செய்வது மற்றும் விமான ஊழியர்களின் சேவைகளை மேற்பார்வை செய்வதும் ஃபர்ஸ்ட் ஆபிசர் தான்.

விமானியை விட, துணை விமானி வேலை ரொம்ப கஷ்டம் போலயே!! பணிப்பெண்களிடம் பேசுவதில் இருந்து எல்லாம் அவர்தான்...

ஆதலால் பயணத்தின்போது பெரும்பாலும் விமான பணியாளர்கள் உடன் பேசுவது ஃபர்ஸ்ட் ஆபிசரே. விமானத்தில் இருக்கும் பணி குழுவுடன் மட்டுமின்றி, டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின் போது ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் யூனிட்டை தொடர்புக்கொண்டு பேசுவதும் இவரே ஆகும். இவற்றுடன் விமானத்தின் லாக் புக் எனப்படும் தரவு புத்தகத்திலும் தொடர்ச்சியாக தகவல்களை உள்ளீடு செய்து அப்டேட் செய்வதும் ஃபர்ஸ்ட் ஆபிசரின் பணியே.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Responsibilities duties of flight pilot first officer
Story first published: Friday, August 12, 2022, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X