பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம்... எவ்வளவு கட்டணம் தெரியுமா?

நாம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய காருக்கான பதிவு எண்ணை புதிய காருக்கு மாற்றும் சட்டம் ஒவ்வொரு மாநிலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம்.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

மத்திய போக்குவரத்துத் துறை, இந்தியாவில் வாகன பதிவுகளைக் கையாளும் மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு ஒரு புதிய விதிமுறை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி ஏற்கனவே ஒரு வாகனம் வைத்திருக்கும் நபர் அந்த வாகனத்தை விற்பனை செய்துவிட்டு வேறு வாகனம் வாங்கினால் பழைய வாகனத்திற்கான எண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

பொதுவாக இந்த உத்தரவைப் பார்த்தால் வாகன பதிவெண் ஏன் அப்படி வைத்திருக்க வேண்டும் புதிய வாகனத்திற்கு புதிய எண் வந்தால் என்ன என நமக்கு தோன்றலாம். ஆனால் வாகனங்களுக்கு ஃபேன்சி எண்ணைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த எண்ணிற்காக அதிகமாகப் பணம் செலவு செய்து வருகின்றனர்.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

இந்நிலையில் தற்போது இப்படியாக ஃபேன்சி நம்பரை வாங்கியவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் வாங்கிய காரை விற்பனை செய்துவிட்டு வேறு காரை வாங்க வேண்டும் என்றால் அந்த காருக்கு தனியாக வேறு ஒரு பேன்சி எண் தான் வாங்க வேண்டும். இந்த காரை விற்பனை செய்யும் போதே ஃபேன்சி எண்ணையும் சேர்ந்து விற்பனை செய்ய வேண்டும்.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

இதனால் பலர் தங்களுக்கு பிடித்த எண்ணை தங்கள் காரில் பயன்படுத்துவதில் சிக்கல் நிலவி வந்தது. இதையடுத்து மத்திய அரசு இதற்கு தீர்வு காணும் விதமாகப் புதிதாக ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது அதன்படி ஒரு முறை பேன்சி எண்ணை வாங்கியவர்களுக்கு அவர்கள் அந்த காரை விற்பனை செய்துவிட்டு வேறு காரை வாங்க விரும்பினால் குறைந்த தொகையில் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

இந்த உத்தரவை படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாகப் பின்பற்றி வருகின்றனர். ஏற்கனவே, டில்லி, உ.பி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது. தற்போது குஜராத் மாநிலமும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

அதன்படி குஜராத் மாநிலம் வாகனப் பதிவிற்கான எண்களை கோல்டன், சில்டர், மற்றும் மற்றவை என 3 பரிவுகளாக வழங்கி வருகிறது. கோல்டன் பிரிவில் மிகவும் ஃபேன்சியான எண்களான 7777, 786, 1 பேன்ற எண்களும், சில்வரில் ஓரளவுக்குபேன்சியான எண்களும் மற்றவைகளில் சாதாரண எண்களும் இருக்கிறது.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

இதில் ஏற்கனவே கோல்டன் ஃபேன்சி எண்களை வாங்கியவர்கள் அடுத்ததாக வேறு காரை வாங்கினால் அந்த காருக்கு இதே எண்ணை மாற்றிவிட வேண்டும் அதற்காக முதலில் பழைய காரை டீரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அப்படியாக டீரிஜிஸ்டர் செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் புதிய காரை வாங்கு பதிவு செய்ய வேண்டும்.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

90 நாட்களைக் கடந்து விட்டால் டீரிஜிஸ்டர் செய்யப்பட்டது செல்லாமல் போய்விடும். அதே நேரத்தில் டீரிஜிஸ்ட்டர் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் புதிய காரை பதிவு செய்துவிட்டால் இதற்காக ரூ40 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். அதுவடே 30 நாட்களைத் தாண்டி 60 நாட்களுக்குள் ஆனால் அதற்காக ரூ60 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். அதுவே 60 நாட்களைத் தாண்டி 90 நாட்களுக்குள் என்றால் ரூ80 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

இது மட்டுமல்ல இவ்வாறு மாற்றுவதற்குப் பல விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி ஒருவர் தன் காரின் வாகன நம்பரை மாற்ற வேண்டும் என்றால் பழைய கார் யார் பெயரில் இருந்ததோ அவர் பெயரில் தான் புதிய காரும் இருக்க வேண்டும் குடும்ப நபர்களின் பெயர்களில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

இதுவே பழைய கார் வைத்திருந்தார் உயிருடன் இல்லை என்றால் புதிய காரை குடும்பத்தினர் பெயரில் வாங்கிக்கொள்ளலாம். அது மட்டுமல்ல பதிவு எண்ணை மாற்றும் போது வாகனத்தின் வகையை மாற்ற முடியாது. உதாரணமாக காருக்கான நம்பரை வைத்து கார் தான் வாங்க முடியும், பைக்கிற்கான நம்பரை வைத்து பைக் மட்டுமே வாங்க முடியும்.

பழைய கார் நம்பரை புதிய காருக்கு மாற்றும் புதிய சட்டம் . . . எவ்வளவு கட்டணம் தெரியுமா ?

இந்த ரூ40 ஆயிரம்- ரூ80 பணம் என்பது கோல்டன் எண் காருக்கான பணம் கோல்டன் எண் பைக்கிற்கு இருந்தால் ரூ8 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Retaining of old vehicle number to new car launched in Gujarat full details here
Story first published: Sunday, June 26, 2022, 22:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X