பாஜக-வை வீழ்த்திய உத்தவ்.. பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட்... எதற்காக தெரியுமா..?

மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆட்சி இருக்கையில் புதிதாக அமர்ந்துள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்திப்பதற்காக உலக பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சன் அவசர அவசரமாக இந்தியா வந்திறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

உலக செல்வந்தர்களில் ஒருவரும், சுறு சுறுப்பான தொழில்முனைவோர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை வகிப்பவருமான ரிச்சர்ட் பிரான்சன் மஹாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் உத்தவ் தாக்கரேவை இன்று (வியாழக்கிழமை) சந்திக்க இருப்பதாக தகவல் வெளிாகியுள்ளது.

முன்னதாக, அப்போதைய மஹாராஷ்டிரா அரசு மாநிலத்தில் ஹைப்பர் லூப் எனப்படும் அதிவேக போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை விர்ஜின் குழுமத்துடன் செய்திருந்தது.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

தற்போது, மஹராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆளுகை செய்து கொண்டிருக்கின்றது. ஆகையால், பாஜகவினர் ஆட்சி செய்துகொண்டிருந்த செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு தற்போது எந்தவொரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் விர்ஜின் குழுமத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

vமேலும், மரியாதை நிமித்தமாகவும், ஹைப்பர் ஒப்பந்தம்குறித்து ஏதேனும் குழப்பம் இருந்தால் அதனை தெளிவுப்படுத்தவும் இந்த சந்திப்பினை பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக ரிச்சர்ட் பிரான்சன் கூறியுள்ளார்.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் ஓர் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது, நிர்வாக மாற்றம் ஏற்பட்டால் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது அவசியம். புதிய ஆட்சியாளர்கள் அத்திட்டத்தைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள விரும்புவார்கள். இதேபோன்று, புதிய திட்டங்களை செயல்படுத்தவும் அவர்கள் விரும்புவார்கள். ஆகையால், இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமையும்" என தெரிவித்தார்.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

இத்துடன், மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மட்டுமின்றி நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர்கள் ஆனந்த் மஹிந்திரா போன்றோரையும் புதிய தொழில் தடத்தை உருவாக்கும் நோக்கில் சந்திக்க இருப்பதாக அவர் கூறினார்.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

இந்த ஹைப்பர்லூப் வழித்தடம் மத்திய புனேவில் இருந்து மெகபொலிஸ் மற்றும் நவி மும்பை விமான நிலையம் வரை இணைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மும்பை மற்றும் புனேவுக்கு இடையேயான பயணதூரம் மூன்று மணி நேரத்தில் இருந்து 25 நிமிடமாக குறையும் என கூறப்படுகின்றது. நவி மும்பை விமான நிலையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே நாட்டியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவ சேனா கட்சி கடந்த நவம்பர் 28ம் தேதி ஆட்சியமைத்தது. அப்போது, சில தேவையற்ற திட்டங்களை உடனடியாக நிறுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் புல்லட் ரயில் மற்றும் ஹைபர்லூப் போன்ற திட்டங்களும் அடங்கும் என கூறப்படுகின்றது.

எனவே, ரிச்சர்ட் பிரான்சன் இதுகுறித்து தன்சார்பாக விளக்கமளித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயலில் இறங்கவுள்ளார்.

MOST READ: சாலையை கடக்க முயன்ற சிறுமி.. காற்றில் தூக்கி வீசிய அதிவேக கார்! பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

ரூ. 3,54,750 கோடி செலவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2.5 ஆண்டுகளில் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், பல லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது. இந்த திட்டம் ஆறு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என கூறப்பட்டநிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், இத்திட்டத்திற்கு புதிய அரசு பச்சைக் கொடி காட்டுமா அல்லது ஏதேனும் காரணம்கூறி தடை விதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன்... எதற்காக தெரியுமா..?

இதேபோன்று, இந்தியாவில் மஹாராஷ்டிரத்துக்கு முன்பாகவே ஆந்திர மாநில அரசு அமராவதியில் ஹைப்பர்லூப் போக்குவரத்து சேவையை தொடங்க ஒப்பந்தம் செய்திருந்தது. மேலும், டொரன்டோ - மான்ட்ரீல் இடையே 640 கி.மீ. தூரத்திற்கும், அபு தாபி-துபாய் இடையிலும் ஹைப்பர்லூப் போக்குவரத்து சேவைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Richard Branson To Meet Maharashtra CM On Today. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X