போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது... விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும்?

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களுக்குப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க அரசு சில சட்ட வழிமுறைகளை வகுத்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

நாம் தினந்தோறும் சாலையில் பயணிக்கிறோம். சாலைக்கு வந்துவிட்டாலே விபத்துக்கள் என்பது சாதாரண விஷயம் தான். சாலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. நேசனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பியூரோவின் தகவலின் படி கடந்த 2021ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 1.55 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சாலைகளில் விபத்துக்கள் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

ஒருவர் சாலையில் விபத்து ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தால் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல உதவ வேண்டும் என ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றும் ஆனால் அப்படிச் செய்தால் இந்த விபத்து குறித்து போலீசார் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என அலைய வைத்து விடுவார்களோ என்ற பயம் மக்கள் பலருக்கு இருக்கிறது. இது எல்லாம் முன்னர் ஒரு காலத்தில் நடந்தது தான்.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

ஆனால் இன்று சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு எந்த விதமான சிக்கல்களும் வராமல் அவர்கள் பயப்படாமல் உதவி செய்யப் பல சட்டங்கள் வந்துவிட்டன. மத்திய போக்குவரத்துத் துறை ஒரு சாலை விபத்து நடந்தால் அதை எப்படிக் கையாள வேண்டும் என ஒரு Standard operating procedure வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி முழுமையான தகவல்களைக் காணலாம் வாருங்கள்

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

*விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்களை மரியாதையாக நடத்த வேண்டும், அவர்களிடம் இடம், மதம், மொழி, தேசிய, ஜாதி என எந்த வித பாகுபாடும் பார்க்கக் கூடாது.

* ஒரு விபத்து குறித்தோ காயமடைந்தவர் அல்லது மரணமடைந்தவர் குறித்தோ ஒருவர் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்தால் அவர் கண்ணால் கட்ட சாட்சியாக இல்லாத பட்சத்தில் அவரது பெயர், முகவரி, தொலைப் பேசி எண் என எந்த தகவலையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

* சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தகவல் கொடுத்தவரிடம் எக்காரணத்தைக்கொண்டும் அவரது பெயர், அடையாளம் முகவரி ஆகிய விபரங்களைக் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது அதை அவர் விரும்பவில்லை என்றால் பதிவு செய்யவும் கூடாது.

* போலீஸ் அதிகாரிகள் விபத்து குறித்து தகவல் தெரிவித்தவரை எக் காரணத்தைக்கொண்டும். விபத்திற்குச் சாட்சியாக இருக்க நிர்ப்பந்திக்கக் கூடாது. அவரே விருப்பினால் வேண்டுமானால் சாட்சியாக எடுத்துக்கொள்ளலாம்.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

* விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர்கள் தகவல் தெரிவித்தவுடன் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும். அவர்களை விபத்து நடந்த இடத்தில் இருக்க நிர்ப்பந்திக்கக்கூடாது. மேலும் அவருக்கு விருப்பம் இல்லை என்றால் விபத்து குறித்து கேள்வி எழுப்பவும் கூடாது.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

இதுவே விபத்து குறித்து தகவல் தெரிவித்தவர் இந்த விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்தால் அதற்காகவும் ஒரு விதிமுறை இருக்கிறது. அதைத் தொடர்ந்து காணலாம்

* விபத்து குறித்து தகவல் தெரிவித்தவர் இந்த விபத்திற்குச் சாட்சியாக இருக்க ஒப்புக்கொண்டால் அவரை உரிய மரியாதையுடன் எந்த வித பாகுபாடும் இல்லாமல் நடத்த வேண்டும்

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

*விபத்து குறித்த விசாரணைக்கு அவர் போலீஸ் ஸ்டேஷன் வர மறுத்தாலும் குறிப்பிட்ட விசாரணை அதிகாரி அவருக்கு சௌகரியமான இடத்தில் அவர் வீடோ அல்லது அவர் வேலை பார்க்கும் இடமோ ஏதோ ஒரு இடத்தில் அவர சந்தித்து விசாரிக்கலாம். ஆனால் அப்பொழுது போலீசார் போலீஸ் உடையில் இல்லாமல் சாதாரண உடையில் தான் செல்ல வேண்டும். தேவையில்லாமல் குறிப்பிட்ட நபருக்குத் தொந்தரவு தரக்கூடாது.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

* ஏதாவது காரணங்களுக்காகக் குறிப்பிட்ட நபரை அவர் விரும்பியும் அவர் சொன்ன இடத்தில் விசாரணை நடத்த முடியவில்லை என்றால் ஏதாவது சூழ்நிலைக்காக அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வர முற்பட்டால் அதை அவர்கள் அந்த விசாரணை அறிக்கையில் எழுத்துப்பூர்வமாகக் குறிப்பிட வேண்டும். அந்த காரணம் சரியா என்பதற்கு அவரின் ஒப்புதலும் வேண்டும்.

போலீஸ் டார்ச்சர் பண்ணவே கூடாது . . . விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் என்ன நடக்கும் . . .

* விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் பேசும் மொழி விசாரணை அதிகாரியின் மொழிக்கோ கோர்ட் பகுதி இருக்கும் மொழிக்கோ மாறாக இருந்தால் ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமிக்கலாம்.

*விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டால் சாட்சியிடம் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரிக்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rights for helping road side victims in India
Story first published: Tuesday, September 27, 2022, 20:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X