கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

தங்களின் கணவர் என நினைத்து மனைவிகள் வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி பழனியம்மாள். இவரது வயது 42. கணவன், மனைவி இருவரும் ஒரு வேலை விஷயமாக சமீபத்தில் மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது ரங்கசாமி பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்திருந்தார்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

வழியில் பெட்ரோல் தேவைப்பட்டதால், தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு பங்க்கிற்கு ரங்கசாமி சென்றுள்ளார். ஆனால் அவர் மனைவியை பெட்ரோல் பங்க்கிற்கு உள்ளே அழைத்து செல்லவில்லை. மனைவியை வெளியில் நிறுத்தி விட்டு அவர் மட்டும் மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப உள்ளே சென்றார்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

அந்த நேரத்தில் முத்துசாமி என்பவரும் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு அதே பங்க்கிற்கு வந்தார். இவர் தாராபுரம் ஐந்து முக்கு பகுதியை சேர்ந்தவர்தான். இவரும் தனது மனைவியை உடன் அழைத்து வந்திருந்தார். முத்துசாமியின் மனைவி பெயர் பொன்னாத்தாள். இவரும் தனது மனைவி பொன்னாத்தாளை வெளியிலேயே நிறுத்தி விட்டு தனியாக பங்க்கின் உள்ளே சென்றார்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

ரங்கசாமியின் மனைவி பழனியம்மாளும், முத்துசாமியின் மனைவி பொன்னாத்தாளும், தங்கள் கணவர்கள் வரும் வரை வெளியே காத்திருந்தனர். அப்போதுதான் அந்த குழப்பம் அரங்கேறியது. ரங்கசாமி மற்றும் முத்துசாமி ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தின் பைக்கில்தான் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்திருந்தனர். அத்துடன் ஒரே வண்ண சட்டையைதான் (வெள்ளை) அவர்கள் இருவரும் அணிந்திருந்தனர்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இப்படி ரங்கசாமி மற்றும் முத்துசாமி ஆகிய இருவருக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருந்தன. இதன் உச்சமாக அவர்கள் இருவரும் அணிந்திருந்த தலைக்கவசம் வேறு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. இதுதான் குழப்பத்திற்கு முக்கியமான காரணம். இந்த சூழலில் ரங்கசாமியும், முத்துசாமியும் பெட்ரோல் பங்க்கில் இருந்து வரிசையாக வெளியே வர தொடங்கினர்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

முதலில் வந்தவர் ரங்கசாமி. அவரது பைக்கில் ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள்தான் ஏறியிருக்க வேண்டும். ஆனால் இது தனது கணவர் முத்துசாமி என நினைத்து கொண்ட பொன்னாத்தாள், ரங்கசாமியின் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டார். இது தனது மனைவி பழனியம்மாள் இல்லை என்பதை ரங்கசாமிக்கும் தெரியவில்லை என்பதுதான் பரிதாபம்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

இதன்பின் பொன்னாத்தாளை பைக்கில் ஏற்றிக்கொண்டு, கரூர் சாலையில் ரங்கசாமி பயணிக்க தொடங்கினார். முன்னதாக முத்துசாமியும் பெட்ரோல் பங்க்கிற்குள் இருந்து வெளியே வந்தார். இவரது பைக்கில் முத்துசாமியின் மனைவி பொன்னத்தாள்தான் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவர்தான் ரங்கசாமியின் பைக்கில் சென்று கொண்டிருக்கிறாரே!

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

எனவே அங்கு பழனியம்மாள்தான் நின்று கொண்டிருந்தார். முத்துசாமியை கண்டதும், இது தனது கணவர்தான் என நினைத்து கொண்ட பழனியம்மாள் அவரது பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டார். இது தன் கணவர் இல்லை என்பதை பழனியம்மாளோ அல்லது இது தன் மனைவி இல்லை என்பதை முத்துசாமியோ உணரவில்லை.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

இதன்பின் அவர்கள் இருவரும் பொள்ளாச்சி சாலையில் பயணிக்க தொடங்கினர். ஆரம்பத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பைக் சென்றிருக்கும். அப்போதுதான் பழனியம்மாளின் மனதில் சந்தேகம் எழ தொடங்கியது. பைக்கை ஓட்டுபவர் தன் கணவர் போல் இல்லையே என சந்தேகம் அடைந்த பழனியம்மாள் பைக்கை நிறுத்தும்படி கூறினார்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

இதன்பின் முத்துசாமி பைக்கை நிறுத்தி விட்டு ஹெல்மெட்டை கழற்ற பழனியம்மாள் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். முத்துசாமியும்தான். இதன்பின் செல்போன் மூலமாக பழனியம்மாள் உடனடியாக தன் கணவர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை தெரிவித்தார். அப்போதுதான் ரங்கசாமிக்கு தன் பின்னால் இருப்பது தன் மனைவி பழனியம்மாள் இல்லை என்பதே தெரியவந்தது.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

இதனால் அவருடன் பயணித்த பொன்னாத்தாளும் அதிர்ச்சியடைந்து விட்டார். இதன்பின் உடனடியாக ரங்கசாமி பைக்கை திருப்பி கொண்டு டவுன்ஹால் சாலைக்கு வந்தார். அதே நேரத்தில் முத்துசாமியும் அங்கு வந்து சேர்ந்தார். இதன்பின் அவர்கள் இருவரும் தங்கள் மனைவிகளை சரியாக அழைத்து சென்றனர். ஒரே மாதிரியான பைக், ஒரே மாதிரியான சட்டை, ஒரே மாதிரியான ஹெல்மெட் அணிந்திருந்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

தற்போது தமிழகம் முழுக்க இந்த சம்பவம் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. போதாக்குறைக்கு ஹெல்மெட் அணிந்திருந்ததால், மனைவிகளால் தங்கள் கணவர்களை சரியாக அடையாளம் காண முடியாமல் போய் விட்டது. இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடும் என்பதற்காக நீங்கள் ஹெல்மெட் அணியாமல் இருக்காதீர்கள்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

சற்றே கவனமாக இருந்திருந்தால் கூட இந்த குழப்பத்தை தவிர்த்திருக்கலாம். இதற்காக ஹெல்மெட்டை குறை சொல்ல முடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் தற்போது கட்டாய ஹெல்மெட் விதி மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இந்தியாவில் அமலில் உள்ளது.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக தமிழகத்தில். இதுதொடர்பான வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதி முறையாக பின்பற்றப்படாதது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

இதன்பின் கட்டாய ஹெல்மெட் விதியை முறையாக அமல்படுத்த போலீசார் பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆங்காங்கே வாகன தணிக்கைகள் நடத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு கருணை காட்டாமல் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

ஆனால் இன்னமும் கூட பலர் ஹெல்மெட் அணிய மறுக்கின்றனர். எனக்கு அசௌகரியமாகவும், வெப்பமாகவும் உள்ளது. முடி கொட்டுவிடும். குளிர்ச்சியாக இல்லை. நான் பயணிக்க இருப்பது கொஞ்ச தூரம்தான். நான் கீழே விழ மாட்டேன் என எனக்கு தெரியும். எனவே எனக்கு ஹெல்மெட் தேவையில்லை என அவர்கள் இதற்கு காரணங்களை அடுக்குகின்றனர்.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

மேற்கண்ட காரணங்களை சொல்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இனி ஹெல்மெட் அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஏனெனில் விபத்தின் போது ஒருவரின் மூளையில் அடிபடுவதற்கான வாய்ப்புகளை ஹெல்மெட் குறைக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உங்கள் தலை அல்லது மூளையில் ஏற்பட வேண்டிய அடியைதான் ஹெல்மெட் தாங்கி கொண்டு உங்களை காப்பாற்றுகிறது.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்பட முக்கியமான காரணமே தலையில் ஏற்படும் காயம்தான். ஆனால் தரமான ஹெல்மெட்டை அணிந்திருந்தால் உயிரிழப்பிற்கான வாய்ப்பு குறைந்து விடும். இதுதவிர கண்ணில் ஏற்படும் காயங்களையும் ஹெல்மெட்கள் தவிர்க்கின்றன. இதுமட்டுமல்லாமல் நீங்கள் பைக்கை ஓட்டி கொண்டிருக்கும்போது கண்ணில் தூசி விழுந்தால், கவனம் சிதறி விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது

ஆனால் கண்ணில் தூசி விழுவதையும் ஹெல்மெட் சேர்த்தே தவிர்க்கிறது. அது மட்டுமல்லாமல் நீங்கள் ஹெல்மெட் அணிந்தால், மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் மாறலாம். குறிப்பாக உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு. எனவே இனி இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, சாக்குப்போக்கு சொல்லாமல் கட்டாயமாக ஹெல்மெட் அணியுங்கள். உங்களுடன் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Benefits of Helmet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X