விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

விபத்தில் சிக்கிய பெண்ணை சிகிச்சைக்கு அழைத்து வந்த நிலையில், மருத்துவர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது, இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் பயணம் செய்வது, இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

அதே சமயம் சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போவதும், இந்தியாவில் சாலை விபத்து தொடர்பான உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது. சாலை விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நபர்களை காப்பாற்றுவதற்கு, இந்தியாவில் பலரும் முன் வருவதில்லை.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

காவல் நிலையம், நீதிமன்றம் என அலைய வேண்டியதிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தைரியமாக உதவலாம் எனவும், அப்படி உதவுபவர்களை காவல் துறையினர் எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது எனவும் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது ஓரளவிற்கு உதவும் மனப்பான்மை வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் தொடர்ந்து வருவது வேதனையான விஷயம். இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மருத்துவர் - காவல் உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

இதனால் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விலைமதிப்பற்ற நேரம் வீண் ஆனதற்கு மருத்துவர்தான் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் ராம்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு 48 வயதாகிறது. சம்பவத்தன்று தனது மகன் மற்றும் உறவினருடன் ராம்வதி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

இரு சக்கர வாகனங்கள் இருவருக்கானது மட்டுமே. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர்கள் மூவரும் பயணித்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம் படன் மாவட்டத்தில் உள்ள பில்சி என்ற பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், ராம்வதியின் உறவினர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டார். அதே சமயம் ராம்வதியும், அவரது மகனும் உத்தர பிரதேச மாநில அரசின் சமுதாய சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

அங்குதான் மருத்துவருக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர் செல்போனில் பேசி கொண்டிருந்ததாகவும், ராம்வதிக்கு சிகிச்சை அளிக்கு அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை காவல் உதவி ஆய்வாளர் தட்டி கேட்டதாகவும், அதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சமயத்தில் ராம்வதி உயிருடன் இருந்ததாகவும், ஆனால் வாக்குவாதம் முடிந்து மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளிக்க தொடங்கிய சமயத்தில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிகிறது. மருத்துவர் - காவல் உதவி ஆய்வாளருக்கு இடையேயான வாக்குவாதம் 20 நிமிடங்கள் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

தற்போது அந்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் கூறுகையில், ''மருத்துவரின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை மோசமடைந்து கொண்டே வந்ததால், அவருக்கு வேகமாக சிகிச்சை அளிக்கும்படி நான் கூறினேன்.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

அதற்கு அந்த மருத்துவரோ, இந்த பகுதியில் விபத்துக்கள் பொதுவாக நடக்க கூடியதுதான். எனவே கவலைப்பட வேண்டியதில்லை என அலட்சியமாக பதில் சொன்னார்'' என்றார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ''அலட்சியம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

விபத்தில் சிக்கிய பெண்... ஹாஸ்பிட்டலில் டாக்டர் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன போலீஸ் எஸ்ஐ...

அப்படி இருக்கும்போது மருத்துவர்களே இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், அந்த பெண் உயிரிழக்க நேரிட்டுள்ளது.

கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணையை நடத்தி, தவறு இருக்கும் பட்சத்தில், மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Road Accident Victim Dies As Doctor Talks On phone, Argues With Sub-inspector - Viral Video. Read in Tamil
Story first published: Wednesday, September 16, 2020, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X