கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய வகை சாலை ஒன்று விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

பெட்ரோல், டீசல் வாகனங்கள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதை போல், பிளாஸ்டிக் கழிவுகளும் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. எனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

இந்தியாவில் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்ய தடை போன்ற உத்தரவுகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. ஆனால் அதனை முழுமையாக அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக நெதர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகில் எதிர்கால சாலைகள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

இந்த விஷயத்தில் இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. இந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து அமைக்கப்பட்ட சாலை, வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இப்படியான ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

நொய்டா நகர நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மொத்தம் 500 மீட்டர் தூரத்திற்கு, இந்த சாலை அமைக்கப்படவுள்ளது. சோதனை முயற்சியாக அதிகாரிகள் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கிறோம். இந்த சோதனை முயற்சியில், மொத்தம் 35 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவின் மூலம் அமைக்கப்படும் சாலையின் தரம் மற்றும் செயல்பாடு கண்காணிக்கப்படும்.

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

இதில், திருப்திகரமான முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்திய அளவில் பார்த்தால், இத்தகைய திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை'' என்றனர். இந்தியா ஒவ்வொரு நாளும் சுமார் 26 ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது. இதன் மூலம் உலகிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?

எனவே நொய்டாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் வெற்றிகரமாக அமையும்பட்சத்தில், ஏற்கனவே அதிகாரிகள் கூறியபடி, இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது இந்தியா முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Road From Plastic Waste To Soon Come Up In Noida - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X