உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

உலகின் வேகமான எலக்ட்ரிக் வாகனமாக ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானமான ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களையும், இந்த ரோல்ஸ் ராய்ஸ் எலக்ட்ரிக் விமானத்தை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

ஏறக்குறைய 3 கிமீ-கள் தொலைவிற்கு 555.9kmph என்ற அதிகப்பட்ச வேகத்தில் சென்றதினால் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் உலகின் வேகமான எலக்ட்ரிக் வாகனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீமென்ஸ் இ-விமானம் 2017இல் அதிகப்பட்சமாக 213.04 kmph வேகத்தில் சென்றதே இதற்குமுன் சாதனையாக இருந்தது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

அதனை தற்போது ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் முறியடிந்துள்ளது. யுகே பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான விமான தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை முயற்சிகளில் சுமார் 15 கிமீ தொலைவிற்கு விமானம் மணிக்கு 532கிமீ வேகத்தில் இயங்கியது. இந்த வகையில் தொடர்ச்சியாக 15கிமீ-க்கு 292.8kmph வேகம் என்ற முந்தைய சாதனையை இந்த ரோல்ஸ் ராய்ஸ் எலக்ட்ரிக் விமானம் முந்தியுள்ளது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

மேலும் 202 வினாடிகள் எடுத்துக்கொண்டு, 60 வினாடிகளில் 3000 மீட்டர் தூரத்திற்கு சென்ற சாதனையையும் இது முறியடித்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் எட்டிய மிக அதிகப்பட்ச வேகம் 623kmph ஆகும். இந்த அதிகப்பட்ச வேகத்தினை உலக விமான விளையாட்டு கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

இவ்வாறான சோதனை ஓட்டங்களை ஆராய்ந்து அவற்றை பதிவு செய்வதும், அவற்றிற்கு சான்றளிப்பதும் இந்த கூட்டமைப்பின் பணியாகும். இந்த சோதனையின் போது இந்த ரோல்ஸ் ராய்ஸ் எலக்ட்ரிக் விமானத்தில் 400 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. இது 500 எச்பி-க்கும் அதிகமான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் ஆற்றல்-அடர்த்தி மிகுந்த உந்துவிசை பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

இதன் பேட்டரியின் ஆற்றலை பயன்படுத்தி கிட்டத்தட்ட 250 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியுமாம். இந்த சோதனை ஓட்டத்தின் போது ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷனை இயக்கியவர் வேறு யாரும் அல்ல, ரோல்ஸ் ராய்ஸ் விமான செயல்பாடுகளுக்கான தலைவரும், விமான ஓட்டியுமான பில் ஓ'டெல் ஆவார். இந்த உலக சாதனை குறித்து பின்னர் பில் ஓ'டெல் கருத்து தெரிவிக்கையில், முழு-எலக்ட்ர்க் விமானங்களின் உலக சாதனையை முறியடிப்பது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

இது எனது தொழிலில் ஒரு சிறப்பம்சமான தருணமாகும் மற்றும் ஒட்டு மொத்த அணிக்கும் இது ஒரு நம்ப முடியாத சாதனையாகும் என்றார். இந்த உலக சாதனைக்காக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமான ஆற்றல் சேமிப்பு நிறுவனமான எலக்ட்ரோஃப்ளைட் மற்றும் ஆட்டோமொபைல் மோட்டார் விநியோகஸ்தரரான YASA உடன் கூட்டணியாக செயல்பட்டு வந்தது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட மேம்பட்ட பேட்டரி மற்றும் உந்துவிசை தொழிற்நுட்பம், மேம்பட்ட விமான இயக்க சந்தைக்கான அப்ளிகேஷன்களையும் கொண்டுள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் கூறுகிறது. ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் எலக்ட்ரிக் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள உந்துவிசை தொழிற்நுட்பத்தை ஸ்டீல் பேர்டு (இரும்பு பறவை) என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அழைக்கிறது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

இந்த உலக சாதனை குறித்து ரோல்ஸ் ராய்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி வாரன் ஈஸ்ட் கருத்து தெரிவிக்கையில், இது எங்களது மற்றொரு மைல்கல் ஆகும். இது ‘ஜெட் பூஜ்ஜியம்'-ஐ உண்மையாக்க உதவும். மற்றும் இது காற்று, நிலம் மற்றும் கடல் வழியான போக்குவரத்துகளை கார்பன் மாசு இல்லாத மேம்பாடான தொழிற்நுட்பங்களை சமூகத்திற்கு வழங்குவதற்கான எங்கள் லட்சியங்களை ஆதரிக்கிறது என்றார்.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

ரோல்ஸ் ராய்ஸின் விமான மின்மயமாக்கலை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் எலக்ட்ரிக் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பாதி பணத்தை யுகே-வில் உள்ள ஏரோஸ்பேஸ் தொழில் நிறுவனம் வழங்கியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணியில் தான் இரும்பு பறவை தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

முற்றிலும் கார்பன் மாசுவை இந்த விமானம் வெளியிடாது என்பதை உறுதிப்படுத்தி கொண்ட பிறகு இந்த தொழிற்நுட்பத்திற்கு இவ்வாறு ‘இரும்பு பறவை' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான ப்ரெமெண்ட் இந்த முழு-எலக்ட்ரிக் விமானத்தின் வேகத்தை பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ டைமிங் பார்டனராக சேர்க்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்துடன் ரோல்ஸ் ராய்ஸ்!! புதிய உலக சாதனையை படைத்தது!

இதுமட்டுமின்றி, விமானத்தின் உட்புற காக்பிட் வடிவமைப்பிலும் ப்ரெமண்ட் முக்கிய பங்கு வகித்துள்ளது. இவ்வாறு அதிவேகமான மற்றும் விலையுயர்ந்த வாகனங்களை வடிவமைப்பதை எப்போதுமே ரோல்ஸ் ராய்ஸ் ஈடுப்பாட்டுடன் இருக்கக்கூடியது. இதன் சொகுசு கார்களுக்கு உலகளவில் பலத்தரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.200 கோடி வரையில் (போட் டெயில்) கார்கள் உள்ளன.

Most Read Articles
English summary
Rolls-Royce electric aircraft sets three speed records; world’s fastest electric vehicle
Story first published: Tuesday, November 23, 2021, 2:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X