ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

உலகின் வேகமான முழு-எலக்ட்ரிக் விமானத்தின் சோதனைகள் அனைத்தையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

உலகளவில் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களுள் முதன்மையானதாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் உலகிலேயே வேகமாக இயங்கக்கூடிய முழு-எலக்ட்ரிக் விமானத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டுவரும் செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

இந்த நிலையில் தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டிருப்பது விமானம் என்பதை விட இயக்க ஆற்றலை வழங்க அதில் பொருத்தப்படும் தொழிற்நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொழிற்நுட்பம் ‘ஐயான் பேர்டு (இரும்பு பறவை)' என அழைக்கப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

இந்த தொழிற்நுட்பம் மட்டுமின்றி 500 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் எலக்ட்ரிக் விமானத்தில் பொருத்தப்படுகிறது. இதன் பேட்டரியை சுமார் 250 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படுத்த முடியும்.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

இவை அனைத்தும் சேர்த்துதான் இந்த முழு-எலக்ட்ரிக் விமானத்தை உலகின் ஆற்றல்மிக்கதாக மாற்றவுள்ளது. விமானத்தின் மின்மயமாக்கலை துரிதப்படுத்துதல் (ACCEL) என்ற ரோல்ஸ் ராய்ஸின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விமானம் தயாராகுகிறது.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

ரோல்ஸ் ராய்ஸின் இந்த ACCEL திட்டத்தில் இந்நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான யாஸா (YASA) உள்பட எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் தயாரிப்பாளர் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த குழு தான் இந்த முழு-எலக்ட்ரிக் விமானத்தில் பொருத்தப்படும் இரும்பு பறவை தொழிற்நுட்பத்தை வடிவமைத்து வருகின்றன.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

இந்த தயாரிப்பு பணிகள் அனைத்தும் பிரிட்டிஷ் அரசின் சமூக இடைவெளி மற்றும் மற்ற சுகாதார வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிதான் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தயாரிப்பு நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தை பறக்க வைப்பதற்கு முன்னதாக உந்துவிசை அமைப்புகள் பல முறை சோதிக்கப்பட்டுள்ளன.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

முற்றிலும் மாசுவை இந்த விமானம் வெளிப்படுத்தாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ‘இரும்பு பறவை' என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் பிரிவின் இயக்குனர் ராப் வாட்சன் கூறுகையில், "ரோல்ஸ் ராய்ஸ் 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பனை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பதில் உறுதியாக உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

ACCEL திட்டத்திற்கான தரை சோதனை முடிக்கப்படுவது இந்த குழுவின் பெரிய சாதனை. மேலும் இது உலக சாதனை முயற்சியை நோக்கிய மற்றொரு முக்கியமான படியாகும். இந்த திட்டம் ரோல்ஸ் ராய்ஸின் திறன்களை வளர்ப்பதற்கும், எங்கள் நிலைத்தன்மை மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமான விமானத்தின் மின்மயமாக்கலை வழங்குவதில் நாங்கள் முதன்மை நிறுவனமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் உதவுகிறது" என கூறினார்.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான ப்ரெமண்ட், இந்த முழு-எலக்ட்ரிக் விமானத்தின் வேகத்தை பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ டைமிங் பார்ட்னராக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு மட்டுமின்றி விமானத்தின் காக்பிட்-ஐ வடிவமைப்பதிலும் ப்ரெமண்ட் முக்கிய பங்கு வகித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸின் முழு-எலக்ட்ரிக் விமானம் பறப்பதற்கு ரெடி.. உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானம் இதுதானாம்

இந்த காக்பிட்டில் நிறுத்து கடிகாரமும் பொருத்தப்படவுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் ஹென்லி-ஆன்-தேம்ஸ் உற்பத்தி நிலையத்தில் விதானம் வெளியிடும் பாகங்களை உருவாக்கியுள்ளது. முழு திட்டத்தையும் கார்பன் நடுநிலையாக்குவதற்கு ஆஃப்செட்டிங் பயன்படுத்தப்படும் முதல் ரோல்ஸ் ராய்ஸ் திட்டம் இதுவாகும்.

Most Read Articles
English summary
Rolls-Royce Completes Test Of The World's Fastest All-Electric Plane
Story first published: Monday, October 5, 2020, 15:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X