புல்லட்டை டிராக்டராக மாற்றிய இளைஞர்: விவசாயி மகனின் சாதனை - வைரல் வீடியோக்கள்!

1955ம் ஆண்டு ரெட்டிச் மற்றும் மெட்ராஸ் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ராயல் என்ஃபீல்டு பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தன. இந்த பைக்குள் ஆரம்ப கட்டத்தில் இந்திய ராணுவத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1962ம் ஆண்டு முதல் இந்த பைக்குகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. பின்னர், ராயல் என்ஃபீல்டு இந்தியர்களின் பலரின் கைகளுக்கு செல்ல ஆரம்பித்தது.

ராயல் என்ஃபீல்ட்

மேலும், விற்பனையைத் தொடங்கிய சில காலங்களிலேயே, ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கான கிராக்கியும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த பைக்குகள் இருந்தன. அன்று முதல் இன்று வரையிலும் அவ்வாறுதான் அவை இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு பைக்கின் பழைமை மாறாத தோற்றம், பிரமாண்ட உருவம், அதன் சைலன்ஸர் சவுண்ட் ஆகிய அனைத்துமே அந்த பைக் பிரபலமாக காரணம் என கூறலாம். இவையே அந்த பைக்கின்மீது வாகன ஓட்டிகள் தீராத காதல் வைக்க சான்றாக உள்ளது.

இந்நிலையில், ராயல் என்ஃபீல்ட் பைக் பிரியர்கள் சிலர், தங்களது புல்லட், கிளாசிக் உள்ளிட்ட சில பைக்குகளை தங்களது தேவைக்கேற்ப மாற்றியமைத்துள்ளனர். அது குறித்த தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

டிராக்டராக மாறிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்:

ராயல் என்ஃபீல்ட்

விவசாயம் செய்வதுக்கு பல்வேறு ரக டிராக்டர்களை நாம் வயல்வெளியில் பார்த்திருப்போம். ஆனால் இங்கு வித்தியாசமாக ஒரு இளைஞர், தனது புல்லடைடிராக்டராக மாற்றி வயல்வெளியில் உழுதுக் கொண்டிருக்கிறார். மேலும், இந்த வாகனம் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் ஆப் இந்தியா 2002ம் ஆண்டு என்ற விருதைப் பெற்றுள்ளது.

குறைந்த அளவு டார்க்யூ திறனுடைய வெளிப்படுத்தும் அந்த புல்லட்டில், பின்பக்கத்தில் மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பிரத்யேகமாக அந்த பைக்கிற்கென உருவாக்கப்பட்ட சிறியளவு களப்பை அதில் நிறுவப்பட்டுள்ளது. விவசாயி ஒருவரின் மகன் உருவாக்கிய இந்த தயாரிப்பு, அவர்களுக்கு மட்டுமின்றி அக்கம்பக்கத்து விவசாய நிலங்களுக்கும் குறைந்த விலையில் நிலங்கள் உழுது தரப்படுகின்றன.

காரை டோவ் செய்த ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்:

தேவைப்படக்கூடிய இடங்களுக்கு சென்று வரும் வகையில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்க வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இங்கு சற்று மாறாக, சாலையில் பிரேக் டவுண் ஆகி நின்ற காரை கிளாசிக் பைக் டோவ் செய்துள்ளது.

அதோபோல, வயல்வெளியில் பிரேக் டவுனாகி நின்ற டிராக்டரையும் ராயல் என்ஃபீல்டின் புல்லட் பைக் இழுத்துச் செல்கிறது. இந்த காட்சியானது பாகுபலி படத்தில் ஹுரோ பிரபாஸ் தேரை இழுத்துச் செல்வதைப் போன்று உள்ளது. ஆனால், இந்த யுடியூப் வீடியோவில் நம்ம புல்லட் தான் பிரபாஸ், அந்த தேர் இடத்தில டிராக்டர் இருக்கு. ஆனால், இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. இருந்தாலும் இந்த பைக் இவ்வளவு சக்தி வாய்ந்ததா என வாயைப் பிளக்கும் வகையில் இந்த வீடிோக்கள் எடுக்கப்பட்ட உள்ளன.

விலை நிலத்தில் ரேஸ் செய்த ராயல் என்ஃபீல்ட் பைக்குகள்:

நம்முடைய நண்பர்கள் பட்டாளத்தில் குறைந்தது, யாராவது ஒருவர் அல்லது இருவர் தான் ராயல் என்ஃபீல்ட் பைக்கை வைத்திருப்பார்கள். ஆனால், இந்த வட நாட்டைச் சார்ந்த ஒரு நண்பர்கள் பட்டாளமே ராயல் என்ஃபீல்ட் பைக்கின் ஃபேன்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வயல் நிலத்தில் உழுவதுக்கு தயாராக உள்ள நிலத்தில், அதாவது சேரும் சகதியுமாக இருக்கும் அந்த நிலத்தில் அவர்களுக்குள் போட்டி நடத்துகின்றனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த பைக்குகள் வயல்பரப்பின் மேற்பகுதிக்கு வருகிறது. இந்த போட்டியில், யார் வென்றிருந்தாலும், ராயல் என்ஃபீல்ட் தான் வெற்றியைத் தட்டிச்செல்கிறது.

புல்லட் மற்றும் மற்ற பைக்கின் இழுவைப் போட்டி:

இதுபோன்ற இழுவைப் போட்டிகள் எல்லாம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் இழுத்து விளையாடிதான் பார்த்திருப்போம். ஆனால், இங்கு இரு இளைஞர்கள் அவர்களின் பைக்குகளின் பின்பக்கத்தில் கயிரைக் கட்சி வாகனங்களை இழுத்து பந்தயம் செய்கின்றனர். இவர்களின் போட்டியில யார் ஜெயிச்சாங்களோ இல்லையோ, ஆனால் நல்ல புழுதி கிளப்பிட்டுட்டாங்க.

கிளாசிக் தூக்கி ஜிம் செய்த இளைஞர்:

உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ளவேண்டும் என நினைத்து செய்யும் இளைஞர் செய்யும் செயல்களைப் பார்த்தால் பலர் வியப்பால் உறைந்தே போவார்கள். அதே போல இங்கு ஒரு இளைஞரும் வித்தியாசமான சவாலை செய்கிறார். அதை நீங்களே பாருங்க.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Royal Enfield Fans Done Crazy Things With His Bike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X