மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கூடிய விரைவில் மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் உயரக்கூடிய சூழல் தற்போது தமிழகத்தில் நிலவி கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் இயங்கி கொண்டிருந்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2.56 கோடி.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

இதில், கார், பஸ் போன்ற மற்ற வாகனங்களை காட்டிலும் டூவீலர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். அதாவது தமிழகத்தில் இயங்கி கொண்டிருந்த மொத்த வாகனங்களில், டூவீலர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 84 சதவீதம். தற்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என்பதை நம்மால் மிக உறுதியாக சொல்ல முடியும்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

இதே நிலையில் சென்றால், தமிழகத்தின் மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து விடும். தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கிராமப்புற பகுதி மக்களுக்கு வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியிருப்பது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

மற்றொரு முக்கிய காரணம் கல்லூரிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள். கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் தங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் அத்தியாவசியம் என நினைக்கின்றனர். எனவே பெற்றோரிடம் அடம்பிடித்தாவது புதிதாக ஒரு டூவீலரை வாங்கி விடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால்தான் வாகனங்களின் எண்ணிக்கை இங்கு வேகமாக உயர்ந்து கொண்டுள்ளது.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆனால் கிராமப்புற மக்களாகட்டும் அல்லது கல்லூரி மாணவ, மாணவிகளாகட்டும், டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு புதிதாக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

ஆனால் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் யாரும் வாகனங்களை இயக்க கூடாது என தமிழக அரசு விரும்புகிறது. எனவே டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் உள்ள ஒரு சில குறைகளையும் களைய தமிழக அரசு முயன்று வருகிறது. இதன் முடிவில் டிரைவிங் லைசென்ஸ் பெறும் வழிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்படும்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால் ஒருவர் முதலில் எல்எல்ஆர் (Learners' Licence - LLR) உரிமத்தை பெற வேண்டும். பழகுனர் ஓட்டுனர் உரிமம் எனப்படும் எல்எல்ஆர் உரிமம் பெற்ற பின்னர் 30 நாட்கள் முதல் 6 மாதத்திற்குள் உங்களால் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியும். இதன்பின் நடைபெறும் செயல்முறைகள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

ஆனால் ஆர்டிஓ அலுவலகம் எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு (Regional Transport Offices - RTOs) சென்றுதான் எல்எல்ஆர் உரிமம் பெற வேண்டும். ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களை சேர்ந்த அதிகாரிகள் இனி அந்தந்த கல்லூரிகளுக்கே சென்று மாணவ, மாணவிகளுக்கு எல்எல்ஆர் உரிமங்களை வழங்க உள்ளனர்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

இதுதவிர கிராமங்களுக்கும் நேரடியாகவே சென்று எல்எல்ஆர் உரிமங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த பணியின் போது மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் எடுத்துரைக்கவுள்ளனர். வாகனம் ஓட்டும்போது, எந்த விதிகளை எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இதில் அடங்கும்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

இதன் மூலம் சாலை பாதுகாப்பு மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி வகுப்புகளின் முடிவில், ஸ்பாட்டிலேயே எல்எல்ஆர் உரிமம் வழங்கப்பட்டு விடும். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

இந்த திட்டம் அமலுக்கு வந்து விட்டால், மாணவ, மாணவிகள் மற்றும் கிராமப்புற மக்கள், எல்எல்ஆர் உரிமத்திற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வீணாக அலைவது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கிராமப்புற மக்கள் இந்த திட்டத்திற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

இதன் மூலமாக உரிய டிரைவிங் லைசென்ஸ் பெற்று வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...

இதன் ஒரு பகுதியாகவே இந்த திட்டமும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக லேப்டாப்கள், பிரிண்டர்கள் மற்றும் டேட்டா கார்டுகள் ஆகியவற்றை வாங்க 63 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தொகையை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இதுபோன்ற ஒரு சில சிறப்பான திட்டங்கள் மூலம் தமிழக அரசு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
RTO Officials Will Visit Colleges, Villages For Issuing LLRs: TN Transport Minister M R Vijayabaskar. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X