'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு

டிரைவிங் டெஸ்ட் மேற்கொள்ள மாடர்ன் உடையில் வந்த இளம்பெண்ணை, ஆர்டிஓ அதிகாரி ஒருவர் நாகரிக உடையில் வருமாறு திருப்பியனுப்பி வைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

சாலையில் வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் முதன்மையானதாக, வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயமானதாக இருக்கின்றது.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

வாகன ஓட்டிகளை மடக்கும் ஒவ்வொரு போலீஸாரும் முதலில் லைசென்ஸ் இருக்கா..., அத முதல்ல எடு..., என கூறுவதை நம்மில் பலர் கண்டிருப்போம். ஏன், ஒரு சிலர் இதனை அனுபவித்தும்கூட இருப்பீர்கள்.

இத்தகைய ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்த ஓர் இளம்பெண் புதுவிதமான சிக்கலைச் சந்தித்துள்ளார். அது என்னவென்று தெரிந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ந்துபோவீர்கள்.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

சென்னையைச் சேர்ந்தவர் பவித்ரா (பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேகே நகர் பகுதியில் வசித்து வருகின்றார். ஐடி துறையில் பணியாற்றும் பவித்ரா, சமீபத்தில் கேகே நகர் ஆர்டிஓ-வில் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு டிரைவிங் லைசென்ஸிற்கான டெஸ்டிற்கு அழைப்பு வந்துள்ளது.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

இதன்காரணமாக, கடந்த வாரம் டெஸ்டை மேற்கொள்ள, கேகே நகர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பவித்ரா சென்றுள்ளார். தொடர்ந்து, அதிகாரி முன்னிலையில் பரிசோதனையை மேற்கொள்ளவதற்காக காத்திருந்தார். அப்போது, பவித்ரா மாடர்ன் உடையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

ஆகையால், பவித்ராவை அழைத்த ஆர்டிஓ அதிகாரி, டிரைவிங் டெஸ்டின்போது மாடர்ன் உடையணிந்து வந்தால், டெஸ்ட் மேற்கொள்ள அனுமதிக்கப்படாது. எனவே, புடவை கட்டி அடுத்தமுறை வாருங்கள் என திருப்பியனுப்பி வைத்துள்ளார்.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

இதேபோன்று, இச்சம்பவத்திற்கு முன்பாக, சுமதி என்ற கல்லூரி மாணவி திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அப்போது, சுமதி கேப்ரி எனப்படும் 3/4 பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார். இதனால், அவரை நாகரிகமான உடையணிந்து வருமாறு ஆர்டிஓ அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

இதனால், கடும் ஆத்திரமுற்ற கல்லூரி மாணவி, ஆர்டிஓ அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பத்துள்ளார். மேலும், தன்னுடைய வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என எண்ணிய அவர் உடனடியாக வீட்டிற்கு சென்று சல்வார்-கமீஸ் உடையை அணிந்து டிரைவிங் டெஸ்டை மேற்கொண்டார்.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

இவ்விரு சம்பவங்களும் நம்மிடைய பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. மோட்டார் வாகன சட்டத்தில், ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிப்பவர்கள், இதுபோன்று பாரம்பரிய உடையணிந்து வரவேண்டும் என்ற விதி ஏதேனும் இருக்கின்றதா என கேட்கத் தோன்றுகின்றது.

ஆனால், உண்மையில் இதுபோன்ற எந்தவொரு ஒரு விதியும் இல்லையென்று வழக்குரைஞர் விஎஸ் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் எந்தவொரு நபரும் 18 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்பதை மட்டுமே அது அது உறுதியாக கூறுகின்றது. மேலும், அவர்களுக்கு செவி திறன் சற்று கூர்மையாக இருக்க வேண்டும் என்பதையும் அது வலியுறுத்துகின்றது.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

பொதுவாக, இந்திய மோட்டார் வாகன சட்டம் அறிவுறைக்கும் அனைத்து விதிகளையும் கடைபிடித்தால் மட்டுமே எந்தவொரு சிக்கலுமின்றி நம்மால் சுதந்திரமாக வாகனங்களை பயன்படுத்த முடியும். இல்லையெனில் போலீஸின் பிடியில் சிக்கி வீண் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

ஆனால், இளம்பெண்களுக்கு நேர்ந்துள்ள இந்த சூழ்நிலை, புதிதாக இருப்பதாக கருத்துகள் எழும்பிய வண்ணம் உள்ளது.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

இதேபோன்று, அண்மையில் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப்கூட ஓர் சர்ச்சையில் சிக்கியது. அப்போது, டிரையம்ப் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய வந்த வாகன ஓட்டி செருப்பு அணிந்திருந்த காரணத்தால் அவரை அனுமதிக்க மறுத்தது.

மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது... புடவையணிந்து வாருங்கள்... ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு!

இந்த சம்பவம் மிகவும் வைரலானதை அடுத்து, வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்காக ஷூ அணிந்துவருமாறு அறிவுறுத்தியே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி பின் வாங்கியது.

இந்நிலையிலேயே, சென்னை கேகே நகர் ஆர்டிஓ அதிகாரி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இது, அந்த இளம்பெண்கள் மட்டுமின்றி, சென்னை வாசிகள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
RTO Says No Driving License Test For Women Wearing Jeans Capris. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X